வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, கோவை, விலை 100ரூ. மழையுடன் ஒரு பந்தம் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன. மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங்களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சடசடக்கின்றன. […]

Read more

ஜென் தொடக்கநிலையினருக்கு

ஜென் தொடக்கநிலையினருக்கு, ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரன் ஜோசிபோவிச், விளக்கப்படங்கள் நவோமி ரோஸன் பிளாட், தமிழில் சேஷையா ரவி, அடையாளம் பதிப்பகம், பக். 162, விலை 160ரூ. நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே போகிறது எனும் மனக்குறை தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையினரிடம் வாசிப்பை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. தொடக்க நிலையினருக்கு எனும் அடிக்குறிப்போடு புத்தகங்கள் வெளிவருவது அந்த […]

Read more

பொலிவியன் டைரி

எர்னஸ்டோ சே குவோ, பொலிவியன் டைரி, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 220ரூ. புரட்சியாளனின் இறுதி நாட்கள் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023534.html ஆங்கிலத்தில் வெளிவந்த பொலிவியன் டைரி என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி இயக்க வீரரான சே குவேராவின் கடைசிக் கட்ட போராட்டமான பொலிவிய விடுதலைப் போராட்டத்தை (1966 ஆம் நவம்பர் முதல் 1967 அக்டோபர் வரை) அவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அர்ஜென்டினாவின் […]

Read more

365 டேக்ஸ்

365 டேக்ஸ், ஓவியர் ஆண்டி வரோல், ஆண்டி வரோல் கண்காட்சியகம் வெளியீடு. 15 நிமிடங்கள் அனைவரும் பிரபலம் மேற்கத்திய கலாசாரத்தில் பிரபலமான ஓவியர் ஆண்டி வரோல். அவர் எழுதிய 365 டேக்ஸ் என்ற ஓவிய நாவலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் இந்த நாவலை, ஆண்டி வாரோல் கண்காட்சியகம் வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில், 1960களில் பாப் கலாசாரம் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், அந்த ஆதிக்கத்தை உடைத்து, சாமானிய மக்களுக்கும் ஓவியத்தை கொண்டு சேர்த்தவர் ஆண்டி வாரோல். ஓவியங்கள், மேல்தட்டு மக்களுக்கு உரியவை. சாதாரண மக்கள் ஓவியத்துக்கு […]

Read more

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள், இரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு பதிப்பகம், பக். 62, விலை 65ரூ. தமிழ் கணினியியலில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? 1980களிலிருந்து இன்றுவரை கணிசமான முயற்சிகள் நடந்து உள்ளன. அந்த முயற்சிகளை கோடிட்டுக்காட்டி, இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இரா. பன்னிருகைவடிவேலன் எழுதிய இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பு. தமிழில் கணினியியல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கு, இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகள் விடைகளைத் தரும். கணினியில் தமிழ், இடைமுகத் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள், திறவூற்றுத் […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 224, விலை 170ரூ. பாட்டு திறத்தால் பாரதம் பேணியவர்கள் பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி. சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ. சேதுபதி. […]

Read more

கம்ப வனத்தில் ஓர் உலா

கம்ப வனத்தில் ஓர் உலா, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை175ரூ. கம்ப ராமாயணத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு, இந்த நூலைப் படிக்கும் போது உண்டாகிறது. கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு வித்தியாசமான விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்த்து, அதனை ருசிகரமாகத் தந்துள்ளனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள், தமிழ் அறிஞர்கள் என ஒன்பது பேர் ஆக்கித் தந்து இருக்கும் இந்தக் கட்டுரைகள் நவமணிகள் போல ஜொலிக்கின்றன. கம்பனில் தாய்மை, கம்பனில் நிறுவன மேலாண்மை, கம்பனில் தேவாரம் போன்ற கட்டுரைகள் கம்ப ராமாயணத்தை […]

Read more

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ. கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் […]

Read more

என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மருந்தென வேண்டாவாம் தன்னுடலைக் குறித்த புரிதலும் வணிக மருத்துவத்தை நிராகரித்தலும் இயற்கையைச் சார்ந்திருத்தலும் மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார் நூலாசிரியர் போப்பு முன்னுரையில். இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவ ஆர்வலர் இவர். உடலோடு பேசுங்கள் என்பதுதான் இந்த நூலின் ஆதார சுருதி. உடலில் தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு பத்துநிமிடம் கூடுதலாகக் குளியுங்கள் என்பதில் ஆரம்பித்து நடை மேற்கொள்வதை விட ஓர் ஆராக்கியமான நண்பன் கிடையாது என்று சொல்லி விளங்க […]

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more
1 63 64 65 66 67 336