குடகு

குடகு, ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், பக். 160, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000014925.html குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகுதான் எனும் அழகு தமிழில் துவங்கி, அந்த நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை (பக். 159) எனும் அதிசயத்தோடு முடியும் இந்த நூலில் 1959ல், சென்னையில் இருந்து பெங்களூர், மைசூர் வழியாக, குடகு சென்று அங்கு தலைக்காவேரி அடைந்து, அதன் புனிதத்தையும், சிறப்பையும் விளக்கி, குடகர்களின் மரபு, சடங்கு இவற்றை […]

Read more

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் பண்டைத் தமிழக வரலாறு, சேரர் – சோழர்- பாண்டியர், (20 தொகுதிகள்), பதிப்பு வீ. அரசு, தமிழ்மண் பதிப்பகம், விலை 5495ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024249.html ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அந்த இன வரலாற்றை தொல்லியல், கல்வெட்டு, பண்பாட்டு அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிக் குவித்த ஒரு சில ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900 – […]

Read more

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும், நர்மதா வெளியீடு, பக். 328, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023950.html ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டது சித்த மருத்துவம். சித்தர்கள் தங்களின் தவ வலிமையால் எல்லா விதமான மூலிகைகள், தாதுக்கள், ஜீவராசிகள் ஆகியவற்றின் தன்மைகளையும், மருத்துவ குணங்களையும் முழுமையாகக் கண்டறிந்தனர். அவற்றை மனித சமூகத்திற்குப் பயன்படுத்த எண்ணினர். அதன் அடிப்படையில் சுமார் 4,448 நோய்களுக்கான நிவாரணங்களை இந்த மூலிகைகளின் மூலம் கூறியுள்ளனர். அப்படி சித்தர்களால் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, இணைந்து எழுதியவர் கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு வெளியீடு, விலை 275ரூ. புலியாக மாறிய ஒரு பூனையின் கதை To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023852.html வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனைவி ஒருத்தி, மிகவும் தாராளமாகத் தன் நகைகள் அனைத்தையும் தாலிபான்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டாள். கணவன் திரும்பி வந்து நடந்ததை அறிந்ததும் சொல்லொணாக் கோபம் அவனுக்கு. ஒரு நாள் கிராமத்தில் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. அந்த ஓசை கேட்டு அந்தப் பெண் அழத் தொடங்கியிருக்கிறாள். […]

Read more

பேர் சொல்லும் நெல்லைச் சீமை

பேர் சொல்லும் நெல்லைச் சீமை, அப்பணசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023979.html தாமிரபரணி நதிக்கரையை தீரா தேசம் என்று சொல்வது சொல்வழக்கு. அந்த தீரா தேசத்தைப் பற்றி எழுத்தாளர் அப்பணசாமி தனது அழகு தமிழில் தொகுத்து எழுதியிருக்கும் நூல் இது. நெல்லைச் சீமை, தமிழ் மக்களின் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கியது. அதாவது மலைகளில் வாழ்ந்த மனிதன் வனங்களில் இறங்கி சமவெளிகளில் நிலை பெற்றது வரையான நாகரிக […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023988.html நடிகர்களை விரும்பும் ரசிகர்கள் உண்டு. அதாவது விசிறிகளைச் சொல்கிறேன். ஆனால் நடிகரை விரும்பும் நடிகர் இருப்பது, அதாவது நடிகருக்கே ஒரு நடிகர் விசிறியாக இருப்பது ஆச்சர்யமானது. பாலையாவின் நடிப்பில் மயங்காத நடிகர்களே கிடையாது என்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல. நாடகச் செம்மல் என்று புகழப்பட்ட அவ்வை டி.கே. சண்முகம். எவ்வளவு பெரிய நடிப்பு ஜாம்பவான்களுடன் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, […]

Read more

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம், மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான், விகடன் பிரசுரம், விலை 350ரூ. இந்தியாவும் விடுதலையும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு என்று எழுதிக் குவித்த திரு.வி.க.வுக்கு முதுமையில் பார்வை லேசாக மங்க ஆரம்பித்தது. அதற்காக, எழுதிய கை சும்மா இருக்குமா? பார்வை குறைந்த பிறகுதான் இருளில் ஒளி படைத்தார். படைப்பாளிக்கு சிந்தனைதான் பார்வையே தவிர, கண் அல்ல. இதோ இரண்டு படைப்பாளிகள். ஒருவர் இருளில் அனுபவித்த வாழ்க்கையை வெளிச்சம் பெற்றதும் நாவல் ஆக்கி இருக்கிறார். […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ மகான்களும் மாபாவிகளும் வலம் வரும் காவியம் மகாபாரதம். வியாசன் வடித்தது. அதனுடைய கதைச் செழுமையால் அனைத்து மொழிகளாலும் அரவணைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் பாடல்களாக வடித்தார் தமிழில். வசனமாக கொண்டுவந்து தந்தார் கும்பகோணம் ராமானுசாச்சாரியார். அதிலுள்ள அறத்தை சாறு பிழிந்து கொடுத்தார் நா. பார்த்தசாரதி. கதையை நாடக பாணியில் வர்ணித்தார் பழ. கருப்பையா. இதோ, பிரபஞ்சன் தன்னுடைய கதா ரசனைப்படி மகாபாரத மனிதர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்துள்ளார். உலகத்தின் முதல் தன் வரலாற்றை வியாசரே எழுதியிருக்கிறார். […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 392, விலை 350ரூ. இளைஞனும் ஆசாபாசங்களும் தமிழ் புனைகதையில் இதுவரை இல்லாத பல புதிய பரிமாணங்களை முன்வைக்கும் நாவல். செல்வம், செல்வாக்கு முதலியன இலக்காகக் கொள்ளாமல் யோகாசனம், சமூக சேவை ஆகியவற்றை நாடிப் பெற்றோரிடம்கூடக் கூறாமல் ஓர் ஆசிரமத்தில் சேரும் இளைஞனின் கதை. ஏற்கனவே பல யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆசிரமத்தின் கிளைகள் எனக் கூறப்படுபவைக்கு அனுப்பப்படுகிறான். ஒரு சமூகக் கிளர்ச்சியில் ஒரு கட்டத்தில் காவல் துறையும் துணை வராது […]

Read more
1 65 66 67 68 69 336