சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி

சட்டப்பேரவையில் கே.டி.கே. தங்கமணி, தொகுப்பு கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. காரியத்தில் கறாராக இருந்த கண்மணி தமிழக சட்டசபையில் நடந்த ஒரு வினோதக் காட்சியைப் பற்றி சொல்கிறார் கே.டி.கே. தங்கமணி (பக். 433). கடந்த, 1973ம் ஆண்டு, தமிழக சட்டசபையில், சபாநாயகர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரம் அது. அவருக்கு ஆதரவான குரல்கள், சட்டசபையில் ஒலிக்காமல் தடுக்க, தி.மு.க.வினர் பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சபாநாயகர் மேசை மீது இருந்த மணியை, […]

Read more

குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா

குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா, கே. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 250ரூ. அறிவுலக சகாப்தத்தில் உலக அரங்கில் உலவும் ஒரு கவி குழந்தைசாமி என்ற தமிழரின், உணர்ச்சிகளின் வடிகாலே, குலோத்துங்கன் என்ற கவிஞர் (பக். 6) என்ற சிவத்தம்பியின் இந்த கருத்தை முன்னிறுத்தி, டி.எஸ்.எலியட், ஜே.சி. ரான்சம் ஆகியோரை பின்பற்றி (பக். 7) மனிதவர்க்கம் மேம்பட, அறிவியல், கலை, பண்பாடு ஆகியவை இணைந்து  இழையோடும் குலோத்துங்கன் படைத்துள்ள, மானுட […]

Read more

பேராசிரியர் நன்னர்

பேராசிரியர் நன்னர், பேராசிரியர் ப. மருதநாயகம், ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நன்னனைத் தெரிந்துகொள்ள… தமிழ் மொழி இலக்கணம், கல்வியியல், பெரியாரியல், உரைநடையியல் என 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் நன்னன். தூய்மையான தமிழில் பேசுவது மற்றும் எழுதுவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவரும்கூட. அவரது ஆளுமை, புலமை, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை உள்ளடக்கி பேராசிரியர் ப. மருதநாயகம் இந்த நூலை எழுதியுள்ளார். கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணை நூல்களை மட்டுமே எழுதிவந்தவர் நன்னன். தனி […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1)

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1), கே.எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாஸ்ரமம், பக். 80,விலை 30ரூ. வேதங்கள் என்றால் அறியப்பட்டது எனத் துவங்கும் இந்நூல், வேதாந்த கருத்துக்கள், மனிதனின் வாழவில் ஒவ்வோர் நிலையிலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் உன்னதமான கருத்துக் கருவூலம் என, உரைக்கிறது. பிரதானமாக கருதப்படும் 10 உபநிஷத்துகளில், கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, கட மற்றும் தைத்திரீய உபநிஷத்துகளின் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. வாஜஸ்ரவசின் மகனாக விளங்கும் நசிகேதன் என்ற பாலகனுக்கு எமதர்ம ராஜன் மூன்று வரங்களை அளிக்கிறார். அந்த […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம் வெளியீடு, பக். 1264, விலை 800ரூ, ஐந்து தொகுதிகள், ஒவ்வொரு தனித் தொகுதியின் விலை 225ரூ. குறுகிய காலத்தில் பிரபலமாகி பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர், சவீதா. பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய 18 புதினங்கள், 1264 பக்கங்கள் கொண்ட இந்த 5 தொகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன. வாசிப்போர் மனதில் கதாபாத்திரங்கள் பதிந்து மறக்க முடியாதவர்களாக அவர்கள் மாறிவிட வேண்டும். அந்த வகையில் சவீதாவுக்கு வெற்றியே. திவ்யா, வேணி, பத்மா, அருண் போன்ற பல கதாபாத்திரங்கள் நாவலின் கடைசிப் […]

Read more

கோரா

கோரா, இரவீந்திரநாத் தாகூர், தமிழில் கா. செல்லப்பன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 704, விலை 350ரூ. புதிய இலக்கிய வகையான நாவல் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைப் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு – உலகம், சாதி – மதம், ஆண் – பெண் உறவுகள், முற்போக்கு – பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் […]

Read more

ஸ்ரீஹரிவம்சம்

ஸ்ரீஹரிவம்சம், எல்.லக்ஷ்மி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை, பக். 320, விலை 250ரூ. வைசம்பாயனரிடமிருந்து மகாபாரதத்தின் 18 பர்வங்களையும் பாராயணம் (ஸ்ரவணம்) செய்த பிறகு ஜனமேஜமன்னன், பரமாத்மாவின் வம்சத்தில் வந்த அரசர்களின் வைபவங்களைக் கேட்க ஆர்வம் எழுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் கதையை இன்னும் விஸ்தாரமாகக் கேட்க வேண்டும் என்ற தாகம் எழுகிறது. கருணை புரிந்து அவற்றைச் சொல்ல வேண்டும் என்று அவரைக் கேட்க, வைசம்பாயனர் ஸ்ரீஹரியின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்குகிறார். மகாபாரதத்தின் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களுடன் ஹரிவம்ஸ பர்வம், விஷ்ணு பர்வம், […]

Read more

ரசிகமணி ரசனைத் தடம்

ரசிகமணி ரசனைத் தடம், தொகுப்பாசிரியர் பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 250ரூ. கம்பராமாயணத்தை இன்று தமிழக மக்கள் அறிவதற்கும் ரசிப்பதற்கும் காரணமாக இருந்தவர் ரசிகமணி டி.கே.சி. 1881ல் பிறந்து 1945ல் மறைந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழிசை இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்.கடித இலக்கியம் மற்றும் கட்டுரைகளால் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசியில் வசித்படி, தமிழகம் முழுவதும் இருந்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ரசனையாளர்களை தன் வீட்டில் வரவேற்று உபசரித்து மகிழ்ந்த புரவலரும்கூட. தமிழில் கடித இலக்கியம் […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more
1 58 59 60 61 62 336