கொடிய கரோனா ஓர் அலசல்

கொடிய கரோனா ஓர் அலசல், மேஜர் ஜெப ராஜ், முதற்சங்கு பதிப்பகம், விலை 120 ரூ. கரோனா ஏற்படுத்திய தாக்கம், அந்த நோயை தடுக்கும் முறைகள் ஆகியவற்றுடன் குறைந்த காலத்தில் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், நோயினால் தாக்கப்பட்ட அவர்களுக்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரின் அர்ப்பணிப்புகள் அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிச்சிப் பூ

பிச்சிப் பூ, பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.70. பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார். குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் […]

Read more

சித்ரவதை முகாம்

சித்ரவதை முகாம், ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.140. குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே போதும் என்பதை உணர்த்தும் நுால். குழந்தைகளுக்கு…* இரண்டு வயதில், கல்வி சுமை ஏற்றுவது சரியா* பக்கத்து வீடு, உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, கணவனும் மனைவியும் பணிக்கு செல்வது நியாயமா.இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறது. குழந்தையை சரியாக வளர்க்கிறேனா என நெருடல் ஏற்படுத்தும் உரையாடல்கள் ஏராளம். இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, வரம்பு மீறிய செல்லம், நடத்தை மீறும் பெற்றோர் என […]

Read more

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன்

தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன், ஆளி சந்திரன், சித்ரகலா பதிப்பகம், விலை 100. மனதில் தோன்றிய பல விதமான எண்ணங்களை அழகிய புதுக்கவிதைகளாக ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். அவரது எண்ண ஓட்டத்தில் பிறந்த இந்த கவிதைகள் அனைத்திலும் ஆழமான பொருள் புதைந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம்

ராமேஸ்வரம் காசி புனிதப் பயணம், காசி ஸ்ரீ காசி நாதன், செல்வி புத்தக நிலையம், விலை 120. ராமேஸ்வரத்திலிருந்து 118 நாட்கள் நடை பயணமாக காசிக்குச் சென்று அவர்களின் வியக்கத்தக்க அனுபவ அன்றாட நாட்குறிப்பு,  பக்திபூர்வமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் பயணிக்க இருப்பவர்களுக்கு இந்த நூல் உறுதுணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ராமநாதபுரம் பாம்பனில் அப்பாவுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை செய்தவர்.கற்றறிந்ததை, அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமார ஸ்தவமாக அருளியவர். அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள்.இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, […]

Read more

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிகரம் ச செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், பக்கம் 520, விலை 520ரூ. சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற பல வழக்குகளை நடத்தி வெற்றி பெற்ற இந்நூலாசிரியர் இலக்கிய உலகிலும் சிகரம் செந்தில்நாதன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். தமிழ் இலக்கியத்திற்கு இதுவரை 30 நூல்களை இயற்றியுள்ளார். தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி பலரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை தொகுத்துள்ளார். இந் நூலின் முகப்புக் கட்டுரையில் கட்டுரையிலே தொன்மையான நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் உரிய இந்தியாவில் வடக்கே சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் தெற்கே […]

Read more

கடவுளின் நாற்காலி

கடவுளின் நாற்காலி, அதியமான் கார்த்திக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.200, விலை ரூ.220.   இயற்கையுடன் முரண்பட்டு பூமிப் பந்தின் வளங்களை சுய லாபத்துக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, வேற்று கிரகங்களையும் ஆளத்துடிக்கும் பெருங்கோ பாண்டியன் என்பவரைத் தடுத்து நிறுத்தி, பாரம்பரியத்தையும் இயற்கை வளங்களையும் கேசவன் என்பவர் காப்பாற்றுகிறார். தமிழகத்தின் குக்கிராமத்தில் தொடங்கி நாகாலாந்து வழியே தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம் வரை பயணிக்கிறது “கடவுளின் நாற்காலி’. வருடந்தோறும் சைபீரியாவிலிருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்துக்கு வலசை வரும் ஆமூர் பால்கன் பறவைகளை அங்குள்ள நாகா பழங்குடிகள், கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் […]

Read more

தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை, சம்சுல் ஹூதா பானு, கோதை பதிப்பகம், பக்.204, விலை ரூ.200. ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார். […]

Read more

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200. சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல். கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் […]

Read more
1 34 35 36 37 38 505