Author: Haran Prasanna
இறையுரையிசை
இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100. ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது. அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான். அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, […]
Read moreஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை, மணிமேகலை சிதம்பரம், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது. இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, […]
Read moreலா.ச.ரா.
லா.ச.ரா., லா.ச.ரா. சப்தரிஷி, சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் இலக்கியவுலகில், கதையோ கட்டுரையோ ஒரு வரியைப் படித்தவுடன் “இது இவர் எழுதியதுதானே’ என்று கேட்கும்படியான தனித்துவமிக்க எழுத்து நடை அமையப்பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் லா.ச.ரா. என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறுகதை, புதினம், கட்டுரை என்று தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த எழுத்தாளர் இவராகத்தான் இருப்பார். லா.ச.ரா.வின் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், அவற்றில் காணப்படும் வார்த்தை ஜாலங்கள், தத்துவமொழிகள் […]
Read moreநினைவில் வாழும் குழந்தை கவிஞர்
நினைவில் வாழும் குழந்தை கவிஞர், தேவி.நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம், விலைரூ.180. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்பட்டு உள்ள நுால். கவிஞரின் மகளே தொகுத்து உள்ளார். மறுபதிப்பாக வந்துள்ளது. இந்த தொகுப்பு நுால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து கருத்துரை மற்றும் வாழ்த்துரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அழ.வள்ளியப்பா கலந்து கொண்ட நிகழ்வுகளின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் 81 கட்டுரைகள் இடம் பெற்றுஉள்ளன. அனைத்தும் கவிஞரின் […]
Read moreபெண் வாசனை
பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260. பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால். பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார். விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த […]
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்
அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. 1953 -1961 வரை அமெரிக்காவின் 34-வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஐஸன் ஹோவரின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ராணுவரீதியாக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பேரில் மூன்றாவதாகப் பிறந்த ஐஸன் ஹோவர் மிகுந்த மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டார். ஆனால் ராணுவக் கல்லூரியில் பயிலும்போது, ஐஸன் ஹோவர் மிகவும் ஒழுங்கீனமாக நடந்தார். ராணுவத்தில் சேர்ந்த […]
Read moreகிருஷ்ண காவியம்
கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலைரூ.250. கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், […]
Read moreசுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)
சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்), பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. எழுமின், விழிமின் என முழங்கிய வீரத்துறவி; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தவர்; சீர்திருத்தவாதியாகவும், ஜாதி மத இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனாவாதியாகவும் விளங்கியவர். இந்து மதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. பாரதத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய முன்னோடி. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 300 […]
Read moreகுளிரும் தேசத்துக் கம்பளிகள்
குளிரும் தேசத்துக் கம்பளிகள், சதீஸ் செல்வராஜ், நெம்புகோல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை, போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் விவரிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், வணிகத்துக்காகவும், மூலப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் போர்த்துக்கீசியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள் செய்த முயற்சிகளின் விளைவாக பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த […]
Read more