யாதென அழைப்பாய்

யாதென அழைப்பாய், எஸ். வாசுதேவன், மருதா பதிப்பகம், பக். 325, விலை 300ரூ. கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற தலைப்புகளில் பத்திரிகைக்களில், முகநூல், இணையத்தில் எழுதிய சிறிப பதிவுகளை விரிவாக்கி கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்ட நூல். அறிவு புலம் சார்ந்த 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

மாலுவின் டயரி

மாலுவின் டயரி (சிறார், பெரியவர்களுக்கான கருத்துக் களஞ்சியம்), ஞாநி, ஞானபாநு பதிப்பகம், பக். 160, விலை 225ரூ. எழுத்தாளர் ஞாநி எழுதியுள்ள மாலுவின் டயரி 10 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவருக்கான நூல். இன்னொரு பார்வையில், அது எல்லா வயதினருக்குமான நூல். ஜெனரல் பிக்ஷன் என்ற வகைப்பாட்டில் உலக அளவில் மிகச் சில நூல்களே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழில் இதுவே முதல் ஜெனரல் நூலாக வந்துள்ளது. எழுத்தாளனே ஒரு பாத்திரமாக தன் நூலில் வலம் வருவதே ஆத்தோகேர் வடிவமாகும். மாலுவின் டயரி இப்படி […]

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 82, விலை 50ரூ. இன்றைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரைக் கையாளும் வழிகளை, எளிய நடையில் விளக்குகிறது. குழந்தைகள் வளர்ப்பதை, பெற்றோரும் ஒரு சவாலாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்புத்தகம் பிள்ளை வளர்ப்பு யுக்திகள் மட்டுமல்லாமல், தம்பதிகளுக்குள் ஒற்றுமை, பெண்களின் மன அழுத்தம் போக்கும் வழிகள் இவற்றையும் கூறுகிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும்,

தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும், கோ. பழனி, சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு, விலை 320ரூ. இந்நூல் தெருக்கூத்தின் பல்வேறு நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. நவீன நாடகத்திற்கு, தெருக்கூத்து வழங்கிய வழிமுறை தொழில்நுட்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வழி நடத்துபவர் யார், அவர்கள் எந்தெந்த வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

வழிகாட்டும் கதைகள்

வழிகாட்டும் கதைகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. சிறந்த தொழிலதிபரான இந்நூலாசிரியர் வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகா கவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என நற்சிந்தனைகளைத் தூண்டும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் இந்நூல் இன்றைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் 100 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை, முயற்சி, புத்திசாலித்தனம், கருணை, மன்னிப்பு, ஞானம்… என்று நற்சிந்தனைகளைத் தூண்டும் சிறு […]

Read more

வாசிப்பு வசப்படும்

வாசிப்பு வசப்படும், ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 16, விலை 10ரூ. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்து கொள்ள, நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள், நேரம், உடல் நலன், மனரீதியான முயற்சி. புத்தக வாசிப்பிற்கு, ஆழமான மனவிருப்பம் முக்கியம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிப்போம் என்ற ஆசையை தூண்டும் புத்தகம் இது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

காதல் வழியும் கோப்பை

காதல் வழியும் கோப்பை, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், விலை 120ரூ. அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காவும், உருவாக்கிகொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரஸ்யத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

மகாசக்தி மனிதர்கள்

மகாசக்தி மனிதர்கள், என். கணேசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. நம் இந்திய நாட்டு யோகிகளும், சித்தர்களும் கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். நம்மை அவர்கள்பால் வசீகரிப்பது அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் தான். இந்த மகாசக்தி படைத்த மனிதர்களில் ஏற்கனவே மிகவும் அதிகமாக அறியப்பட்ட பெயர்களோடு, பொதுவில் அதிகம் அறியப்படாத யோகிகள் பலர் புரிந்த அற்புதச் செயல்களை மிக விரிவாக இந்த நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைப் படிக்கும்போது, நமக்கு ஏற்படும் பிரமிப்பும், ஆச்சரியமும் அளவிட முடியாதவை. […]

Read more

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

,இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ் விலை 225ரூ. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித சமூகத்திற்கு கிடைத்த அளப்பரிய வசதி இணையம். ஆனால், வசதி, வளர்ச்சியுடன் சேர்ந்து, தவறுகளும், பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில், இணையக் குற்றங்கள் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதை கட்டுப்படுத்த, நவீன சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இணையம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான குற்றங்களும், அதை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் […]

Read more
1 428 429 430 431 432 505