திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

சித்தர்களின் ஜீவ சமாதிகள்

சித்தர்களின் ஜீவ சமாதிகள், து.செல்வகுமார், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழகத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திய 50க்கும் மேற்பட்ட சித்தர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை படிக்கப் படிக்க வியப்பூட்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. யோகி ராம் சுரத்குமார், சேர்மன் சாமிகள், பூண்டி மகான், அரவிந்தர் போன்றவர்கள் செய்த அற்புதங்களுடன், சென்னையில் எந்த எந்த கோவிலில் எந்த சித்தர்களின் சமாதி உள்ளது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ள நல்ல வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள், டி.எம்.சுந்தரராமன், திருவரசு புத்தக நிலையம், பக். 224, விலை 100ரூ. இந்திய திருநாட்டின் இரு கண்களாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் விளங்குகின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், முத்தான சில பகுதிகளை, இந்த நூல் தருகிறது. பரதனுக்கு ராமன் சொன்ன அறிவுரைகள், இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதும் (பக். 10), நிதிக்குவியல் போன்ற நீதிக் கருத்துகளும் (பக். 13-39), மகாவிஷ்ணுவிற்கே சாபம் கிடைத்ததும் (பக். 64), வால்மீகி ராமாயணத்தில் வரும் பல பழமொழிகளும் (பக். 87 -93), எக்காலத்திற்கும் பொருந்தக் […]

Read more

சங்கு தியானம்

சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ. சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.   —- சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ. சர்க்கரை நோயாளிகள் […]

Read more

நபி வழி அறிவோமா

நபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா, சென்னை, விலை 280ரூ. மனித சமுதாயம் நேர் வழி பெற்று அதன் மூலம் இவ்வுலக – மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறை வேதமாகிய திருக்குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத் தூதர் நபிகள் நாயம் (லஸ்) அவர்களின் போதனையும் அகும். அதன் அடிப்படையில் இறைமறை மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் இந்த நூலை வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா எழுதியுள்ளார். அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த அண்ணலாரின் வரலாற்றில் நடந்த […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ. அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர்! மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். […]

Read more

மகா அவதார் பாபா

மகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ. சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி […]

Read more

விவேக சூடாமணி திருக்கு திருசிய விவேகம்

விவேக சூடாமணி திருக்கு திருசிய விவேகம், தமிழில் ரமண மகரிஷி, விளக்கவுரை ப. வைத்தியநாதன், ஸ்ரீரமண பக்த சமாஜம், சென்னை, பக். 300, விலை 200ரூ. விவேக சூடாமணி என்ற சொல் விவேகத்தைத்தந்து உயிர்களை உய்விக்கும் நூல்களுள் மணிமுடியான நூல் என பொருள்படும். 582 சுலோகங்களால், ஆதிசங்கரர் இயற்றிய இந்த நூலை, ரமண மகரிஷி தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்புக்கு, விளக்க உரைதான் இந்த நூல். பிரம்ம ஞானம் சிந்திக்க தேவையான நான்கு சாதனங்கள், அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள பஞ்சபூத அமைப்பு, பத்துவகை வாயுக்கள், […]

Read more

நம் நாயகம்

நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ. இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக […]

Read more

திசை கடக்கும் சிறகுகள்

திசை கடக்கும் சிறகுகள், ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மானுட விடுதலையைப் பிரதானமாகக் கொண்டு கவிதைகளை இயற்றும் கவிஞர், ‘தமிழ்த் தாயே, இப்போது உனக்கென ஒரு நாடு இல்லை, உனக்குத் தெரியுமா?’ என்ற கேள்விகளால் நெஞ்சில் வேள்வி வளர்க்கிறார். சிலர் இறுக்கப் பிடித்து கை குலுக்கினால் அச்சமாக இருக்கிறது. மோதிரங்கள் களவு போகின்றன. போகட்டும், ஆனால் சில நேரங்களில், விரல் ரேகைகளே காணாமற் போய்விடுகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மரணங்கள் நேரடிப் […]

Read more
1 66 67 68 69 70 128