சீறாப்புராணம்

சீறாப்புராணம்(மூலமும் உரையும்), உமறுப்புலவர், உரையாசிரியர் செய்குத் தம்பி பாவலர், யுனிவர்ஸல் பப்ளிகேஷன்ஸ், முதல் பாகம் பக். 850, விலை 500ரூ, இரண்டாம் பாகம் பக். 968, விலை 600ரூ. ஒப்பாரும் மிக்காருமற்ற தன்னிகரில்லாத் தலைவராக, முகமது நபியை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே சீறாப்புராணம். தமிழ் இலக்கியத்தில் கம்பராமாயணம் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பிறகே பல சமய காப்பியங்கள் உருவாகின. அந்த வகையில் சீறாப்புராணமும் மதம் கடந்து தமிழ் இலக்கியவாதிகளால் வாசிக்கப்பட்டு வருகிறது. புராணத் தலைவரின் பெருமைகளையும், அற்புதங்களையும் கூறும்போதுஅதனுடனே, தமிழ் மொழியின் செறிவையும், வளத்தையும் பாடல்களில் […]

Read more

பூமித்தாய்

பூமித்தாய், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. சிறந்த கார்ட்டூனிஸ்ட், சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றுள்ள மதன் எழுதிய சிறந்த நூல் இது. பூமியைப் பற்றிய உண்மைகளை மனிதன் அறிந்துகொள்ளாமல் இருந்த காலக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறுகிறார். பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், இல்லை இல்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று புரூனோ என்ற இத்தாலிய நாட்டு அறிஞர் சொன்னார். உண்மையைச் சொன்னதற்காக அவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை. அவரை உயிரோடு தீயில் எரித்துக் […]

Read more

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு

திராவிட இயக்க இதழ்கள் ஓர் ஆய்வு, நவமணி பதிப்பகம், விலை 150ரூ. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. திராவிட இயக்கத்திற்காக, நூற்றுக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அதுபற்றிய முழு விவரங்களையும் இந்த நூலில் கூறுகிறார் முனைவர் அ.மா.சாமி. வெறும் புள்ளி விவரங்களோடு நின்றுவிடவில்லை. பல சுவையான வியப்புக்குரிய செய்திகளையும் இந்த நூல் விவரிக்கிறது. மாதிரிக்கு ஒன்று. திராவிடன் தினசரிப் பத்திரிகை நடத்தி வந்த வகையில், ரூ.1000 கடனுக்காக, 2.6.2993ல் பெரியாரை கைது செய்து, சிறையில் அடைத்துவிடுகிறார்கள். அக்கடனைக் கட்டிவிட, பெரியாரின் நண்பர்கள் முன்வருகிறார்கள். […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

தித்திப்பான தொகுப்புமுனைகள்

தித்திப்பான தொகுப்புமுனைகள், தொகுப்பாசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், புத்தொளிப் பதிப்பகம், பக். 168,விலை 80ரூ. ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில், ஏதோ ஒரு திருப்பு முனையால் வேறொரு மதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும்போது, அவருக்கு ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, மதமாற்றம் ஏற்படுகிறது. இதுவே இயற்கையானது. நிலையானது. மற்றபடி உலக ஆதாயங்களைக் காட்டி, மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் செயற்கையானது. நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், ஆன்மிகம், அரசியல், பேச்சு, எழுத்து, சமூகநலன்… என்று பல தளங்களிலே பயணிக்கும் இந்நூலாசிரியர், மாற்று […]

Read more

ஆர்கொலோ சதுரர்?

ஆர்கொலோ சதுரர்?, பேரா. ஆதிமுருகவேள், ஆசிரியர் சங்கரதாண்டவம் அறக்கட்டளை, விலை 150ரூ. உலகத்து உயர்நெறியான சைவம் தழைத்து ஒங்க செய்வதற்காகவும், சிவலிங்க வழிபாட்டை உணர்த்துவதற்காகவும் சைவநெறிகளுடன் எழுதப்பட்ட 20 கட்டுரைகள் கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- படித்துப்பழகு, மு.முருகேஷ், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 25ரூ. கற்பனை வளத்துடன், சுவாராசியமாக எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், சிவகங்கை மாவட்டம், விலை […]

Read more

தேடலில் தெளியும் திசைகள்

தேடலில் தெளியும் திசைகள், வைகறை (தொகுப்பும் பதிப்பும்), பவளவிழாக்குழு வெளியீடு, பக். 272, விலை 20ரூ. ஞானலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுத்தாளர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இலக்கிய ஆளுமைகள் எழுதிய 255 கடிதங்களின் தொகுப்பு இந்நூல். தஞ்சை பிரகாஷ் தொடங்கி கரிச்சான்குஞ்சு, கவி கா.மு.ஷெரீப், ஏ.கே.செட்டியார், அசோகமித்திரன், கி.அ. சச்சிதானந்தன், சிட்டி என்று பல்வேறு இலக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியர்களுக்கு எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் புத்தகங்களைப் பற்றிய தேடல்களாகவே உள்ளன. இலக்கிய ஆளுமைகளின் உள்ளுணர்வுகளை, சமகால இலக்கியப் போக்கை இக்கடிதங்கள் வெளிப்படுத்தி, இலக்கிய வரலாற்றுக்கான […]

Read more

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை

வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]

Read more

அலாரத்தை எழுப்புங்கள்

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், கோவை, விலை 150ரூ. செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும், சக்தியும் நம்மிடம்தான் உள்ளது என்பதை உணரும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன் தெளிவாக கூறி உள்ளார். வெற்றி என்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து வெற்றியாளர்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் இந்த நூலில் பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். அலாரத்தை எழுப்புங்கள், முதல் தூக்கமும் தியானம்தான் உள்பட 20 கட்டுரைகளும் […]

Read more

அறச்சீற்றம்

அறச்சீற்றம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞா. சிவகாமி, அவருடைய சிறுகதைத் தொகுப்பு இது. சில எழுத்தாளர்கள், சிறுகதைகளை குறுநாவல் அளவுக்கு இழுப்பார்கள். இவர் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு மேல் போவதில்லை. கதைகள் சுருக்கமாக இருந்தாலும் சுருக் என்று நெஞ்சில் குத்துகின்றன. அவ்வளவு வர்மையான எழுத்ததுக்கள். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.   —- நல்லறம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. சமயோசித பத்ய மாலிகா என்ற பழமையான வடமொழி […]

Read more
1 65 66 67 68 69 128