யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

குரு விஜயேந்திரா

குரு விஜயேந்திரா – தி இன்வின்சிபிள் செயின்ட், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 300ரூ. கயிற்றின் மீது நடந்த விஜயேந்திரர்! மாத்வ பரம்பரையில் ராகவேந்திரரைப் பற்றி அம்மன் சத்தியநாதன் எழுதிய நூல் மிக அற்புதமானது. அந்த வரிசையில், வெல்ல இயலாத குரு விஜயேந்திரர் பற்றிய விரிவான வரலாற்றையும், தமிழில் எழுதியுள்ளார். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள கும்பகோணம் பற்றியும், அங்கு அவர் செய்த அற்புதங்கள் பற்றியும், இந்த இரண்டாம் பாகத்தில் மிக விரிவாகவும், பக்தியோடும் எழுதியுள்ளார். அதை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய ஆங்கிலத்தில் […]

Read more

மகாபாரதம்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 மகாபாரதம், பிரஞ்சன், நற்றினை, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023685.html பல படைப்பாளிகள் மகாபாரதத்தைப் பல விதங்களில் தமது படைப்புகளில் எதிர்கொண்டிருக்கிறார்கள். பிரபஞ்சன் மகாபாரதத்தை விசரணைக்கு உட்படுத்துகிறார். சமகால வெளிச்சத்திலும் அதை ஊடுருவிப் பார்க்க முயற்ச்சிக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம்

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம், உரையாசிரியர் வீடுர் கு. அப்பாசாமி சாஸ்திரியார், ஜைன இளைஞர் மன்றம், பக். 1008, விலை 600ரூ. தமிழில் இயற்றப்பட்ட பழைமையான காவியங்களுள் ஒன்று ஸ்ரீவாமன முனிவரால் இயற்றப்பட்ட இந்த மேருமந்தர புராணம். இந்நூல் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கூடும் என்கிறது பதிப்புரைக் குறிப்பு. இப்புராணம், 1406 செய்யுள்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் கதைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. அருக நெறியைப் பரப்புவதற்காக உருவான காவியம் இது. ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய இரு […]

Read more

ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ. கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் […]

Read more

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம்

கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம், ஸ்ரீகுளத்து ஹரிஹர புத்ர சர்மா, பக். 380, விலை 200ரூ. கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய அனுபந்தம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள நூல் இது. வேதங்கள் இந்த நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் ஆவணம். காலம்காலமாக போற்றப்படும் வேதத்தின் ஒரு பகுதியான, கிருஷ்ண யஜுர் வேத தைத்ரியச் சிறப்புகளை விளக்குகிறது இந்த நூல். தைத்ரிய யஜுர்வேதத்தில் உள்ள சம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், மந்திரபிரச்னம், அனுவாகம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ள, யாஜ்யா, ப்ரோநுவாக்யா போன்ற மந்திரங்களின் விவரங்கள், பிரதீகம் என்ற […]

Read more

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு, யமுனாராஜேந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 300ரூ. பல்வேறு காலகட்டங்களில் எழுத்தாளர் யமுனா ராஜேதிரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் நடைபெற்ற சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை ஓர் ஆய்வுரை என்றே சொல்லலாம். ஜெயகாந்தனின் கருத்துலகம், எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் விருட்சம் போன்றவை யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- நபி நேசம் நம் சுவாசம், மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை […]

Read more

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள், பி.வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 50ரூ. நடிக மன்னன் பி.யூ. சின்னப்பா, திரைப்பட டைரக்டர் ப. நீலகண்டன், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழா ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே மூவரின் சிறப்பை விவரிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார் பி. வெங்கட்ராமன். இவரும் புதுக்கோட்டைக்காரரே! இன்னும் நிறைய தகவல்களுடனும், படங்களுடனும் இதை பெரிய புத்தகமாக வெளியிடலாமே! நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- சிவரகசியம், கீர்த்தி, சங்கர் பதிப்பகம், […]

Read more

உத்தம நாயகன்

உத்தம நாயகன், த. தியாகையா, நூலக உலகம் வெளியீடு, பக். 88, விலை 60ரூ. ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருகிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார். விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக். 25). கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் […]

Read more

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ. ‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை […]

Read more
1 63 64 65 66 67 128