பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும்

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும், திருவின் நாயகன் தொகுப்பு, உமா பதிப்பகம், பக். 264, விலை 120ரூ. ராவணனின் பெருமைகளையும், அவனது முறையற்ற செயல்களையும் சைவ, வைணவ நூல்களின் துணையுடன் தொகுப்பாசிரியர் மிக அருமையாக, பதிவு செய்துள்ளார். ராவணன் என்ற சொல்லிற்கு அழுதவன், பிறரை அழவைத்தவன் என்று பொருள் (பக். 9). ராவணன் தவவலிமையால் பெற்ற வரம் (பக். 20), தசமுகன் எனும் பெயரை, ராவணன் எனும் இறவாப் பெயராக சிவபெருமான் ஈந்தது (பக். 38), ராமன் கடல் கடந்து செல்லும் முன்பாக, பிரயோபவேசம் […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more

உன்னை நீ மறந்தேன்?

உன்னை நீ மறந்தேன்?, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எனக்காக வாழ்வது தவறா? என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் யார்? போன்ற கேள்விகளுக்கும், வாழ்க்கையின் சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்குமான விளக்கங்கள் இந்நூலில் விவரித்து கூறியுள்ளார் மனோதத்துவ நிபுணர் அ. கீதன். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —- தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய அய்யர், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 80 ரூ. திருவையாற்றில் 1855ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிறந்த ஜி. சுப்பிரமணிய அய்யர், சுதேசமித்திரன் பக்திரிகையை […]

Read more

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு, வெர்சோ பேஜஸ் வெளியீடு, புதுச்சேரி, விலை 200ரூ. 1979-ம் ஆண்டு புதுச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முடிவு செய்தார். இது அங்குள்ள மக்களின் உணர்வைக் கிளறி விட்டது. குடியரசு தினம் தொடங்கி 10 நாட்கள் புதுச்சேரி போராட்டக் கனமானது. இந்த நூலில், அந்த நிகழ்வுகளைப் பத்திரிகையாளர் பி.என்.எ ஸ். பாண்டியன் பதிவு செய்துள்ளார். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தோடு, புதுச்சேரியின் பிரதேச வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில் நடந்த பல்வேறு வெளிவராத சுவாரசியமான சம்பவங்களையும் அழகுற விவரிக்கிறார். […]

Read more

இருள் நீக்கி

இருள் நீக்கி, தொகுப்பாசிரியர் ஆர். கரிகாலன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், பக். 208, விலை 95ரூ. சனாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது என்றாலும், சுமார் 1500 வருடங்களுக்கு முன்தோன்றிய ஆதிசங்கரரால் இம்மதம் மறுமலர்ச்சி கண்டது. அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர பீடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து மதம் குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு சமயங்களில் அளித்த விளக்கங்களையெல்லாம், இந்நூலாசிரியர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஹிந்து […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்)

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 1230, விலை 900ரூ. உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், வாழ்வியல், அரசியல், உளவியல், வரலாறு, புவியியல் என அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இப்போது வெளிவந்துள்ள இந்நூல், காலவோட்டத்துக்குத் தகுந்தபடி, நவீன காலத்துக்கு ஏற்ப நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியரின் சில விளக்கங்கள் ரசனையை மெருகேற்றுகின்றன. ‘ஜய’ என்ற சொல் மஹாபாரதத்தைக் குறிக்கும் சங்கேதச் சொல் […]

Read more

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ. வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் […]

Read more

யக்ஞோபவீதம் – பூணூல்

யக்ஞோபவீதம் – பூணூல், சர்மா சாஸ்திரிகள், பக். 80, விலை 60ரூ. காஞ்சி மடத்துடன் அதிக தொடர்பு கொண்டவரும், முன்பு சங்கபரிவார் அமைப்புகளுடன் இருந்தவருமான ஆசிரியர், தற்போது இந்த நூலை வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பிராமணர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பூணூல் பற்றி தகவல்களை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் பூணூல் அணிகின்றனர். திருமூலர் நூலது காற்பாசம் : நுண்சிகை ஞானம் என்பார். பூணூலின் இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன […]

Read more

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள், ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இந்தியா என்பது மாபெரும் புண்ணியபூமி. அதன் புதல்வர்களாகிய நாம், பக்தி, தியாகம், தர்மம், நேர்மை, அன்பு, ஒழுக்கம், வீரம் இவையெல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இந்து நெறிமுறையைப் பாதுகாக்க வீரமும் ஒற்றுமையும் அவசியம் என்பதை உணர்த்த தம் பகுத்த அனுபவப் பின்னணி கொண்டு குமுதம் ஜோதிடம் வார இதழில் வாராவாரம் தலையங்கம் தீட்டி எழுச்சி கொள்ளச்செய்தவல் […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more
1 68 69 70 71 72 128