இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ. எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும். மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய […]

Read more

யோசிக்கும் வேளையில்

யோசிக்கும் வேளையில், ஜெயகாந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 45ரூ. 80களில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக அவலங்களை தனது பாணியில் சாடியிருக்கிறார். 5-ம் வகுப்பில் மூன்றுமுறை தான், பின்தங்கிய உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அவர் உழைப்பும் கல்வியும் என்னும் கட்டுரையில் தனது குடும்ப பின்னணி குறித்து மனம் திறந்து எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 27/4/2016.   —- உணவுப்பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும், வழக்கறிஞர் எஸ்.சேஷாச்சலம், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. உணவுப் பொருள் […]

Read more

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங்ஸ், விலை 50ரூ. சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, முருகன் அவருக்கு அருளிய நிகழ்வுகள், சண்முக கவசத்தின் சக்தி போன்ற விவரங்களும், சுவாமிகளால் அரளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவிவேட்கை, பகைகடிதல் போன்ற பொருளுடனும், சஸ்திரகமல ரத பந்தங்களும் குமாரஸ்தவமும் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- தன்னம்பிக்கை முழக்கம், முனைவர் பெ. ஆறுமுகம், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ஆராய்ச்சி என்பது முடிவே இல்லாத மானுடத் தேடல். அறியாமையாலும், அறிவியல் தெளிவின்மையாலும், மனித வஞ்சகத்தாலும் மூடிக்கிடக்கும் […]

Read more

உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ. உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதய இலக்கியப் பண்ணை, பக். 144, விலை 100ரூ. இந்நூலாசிரியர், லண்டனைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஹென்றி போலக் தென்னாஃபிரிக்காவில் காந்தி ஜியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து, தென்னாஃபிரிக்க வாழ் இந்தியர்களுக்காகப் போராடியவர். இந்தியாவிலும் காந்திஜியுடன் இருந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். இந்நூலாசிரியர் காந்திஜி மீது அளவிலா நேசம் கெண்டவர். ஆனாலும், காந்திஜியின் சில செயல்பாடுகள் குறித்து, தனக்கு தோன்றிய விமர்சனக் கருத்துகளையும் நேருக்கு நேர் கேட்டு வாதம் செய்தவர். இந்நூலாசிரியருக்கும், காந்திஜிக்கும் […]

Read more

ஹாஸ்ய வியாசங்கள்

ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார், சந்திரா பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. தமிழ்நாடகத் தந்தை என்று புகழப்படும் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரின் நகைச்சுவைத் திறனுக்கு, பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளிவந்த ‘சபாபதி’ மிகச் சிறந்த சான்று. அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பான ஹாஸ்ய வியாசங்கள் (முதல் பதிப்பு 1937) தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. 12 கட்டுரைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நகைச்சுவை வீரியம் அதிகம். தண்ணீர் இல்லாத நீச்சல்குளம் (அக்காலத்திலும் இப்படித்தானா?) உள்ளிட்ட சென்னையின் விநோதங்களை முதல் கட்டுரை […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

தென்மொழி

தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற […]

Read more

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ்., நேசம் பதிப்பகம், விலை 175ரூ. 40 ஆண்டு காலம் தமிழக அரசில் எல்லோரும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம் எழுதிய ‘வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்’ என்ற இந்த நூலில், வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் எல்லோரும் சந்தித்ததும், அதே நேரத்தில் சரியாக புரிந்து கொள்ளாததுமான பல விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளார். ‘அரசு அலுவலகம் என்றால் கதவுகளும் காசு கேட்கும், கம்பியும் கை நீட்டும்,’ என்ற சாமானிய மக்கள் […]

Read more

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள்

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், தொகுதி 1, விலை 330ரூ, தொகுதி 2-3 விலை 250ரூ(ஒவ்வொன்றும்). மறைந்த பேரறிஞர் அண்ணா எழுதிக் குவித்த கதைகளும், கட்டுரைகளும் ஏராளம். அவற்றில் சிறு கட்டுரைகளை தேர்வு செய்து, மூன்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம். 1937ம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து 1948ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை வரை, இந்நூல்களில் காலவரிசைப்படி இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்கள் பற்றி அண்ணா ஆழமாக ஆராய்ந்து, தமக்கே உரிய பாணியில் காரசாரமாகவும், நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் தமது கருத்தை […]

Read more
1 9 10 11 12 13 88