தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர் கு. வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை […]

Read more

கம்ப நதிக்கரையினிலே

கம்ப நதிக்கரையினிலே, ஆர். குறிஞ்சி வேந்தன், வானதி பதிப்பகம், பக்.100, விலை 70ரூ. கம்பர் காவியத்தின் பல அழகுகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. கம்பனைச் சுவைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு விருந்தாக இந்நூல் திகழ்கிறது எனலாம். ‘கம்ப ராமாயணத்தை விதை நெல்லைப் போல பாதுகாத்து எதிர்காலச் சமூகத்திடம் தந்து விட வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கனவுக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு எனலாம். இந்நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக விளங்குகின்றன. ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்றும், ‘நின் பிரிவினும் சுடுமோ […]

Read more

உயிர்ப்பாதை

உயிர்ப்பாதை, கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் சுவாரசியமான நடையில் விளக்கும் நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

யாதென அழைப்பாய்

யாதென அழைப்பாய், எஸ். வாசுதேவன், மருதா பதிப்பகம், பக். 325, விலை 300ரூ. கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற தலைப்புகளில் பத்திரிகைக்களில், முகநூல், இணையத்தில் எழுதிய சிறிப பதிவுகளை விரிவாக்கி கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்ட நூல். அறிவு புலம் சார்ந்த 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!, மு. இராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 82, விலை 70ரூ. நவீன நாடக இயக்கங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஆசிரியர் பேசுகிறார். ஜாம்பவான்கள் குறித்தும் அலசுகிறார். இப்பொழுது, 80 வயதில் பயணிக்கிற ந.முத்துசாமியின் முதல் நாடகம் அவரின், 33வது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந.முத்துசாமி என்ற ஆளுமையை எந்த வகையிலும் கடக்காமல், எவரொருவரும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றி பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். ‘என் […]

Read more

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைப் போல், இன்று நமது அரசியல் கொள்ளையரிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், […]

Read more

ஜீன் ஆச்சர்யம்

ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், விகடன் பிரசுரம், பக். 216, விலை 140ரூ. ஜீன் எனப்படும் மரபலகுகளின் விந்தையான செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்ட அறிவியல் தொடரின் நூல் வடிவம் இது. மனிதர்கள் மட்டுமன்றி, உயிர்கள் அனைத்திலும் ஜீன்களால் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் செயல்பாடுகள், ஜீன்களின் பரிணாம வளர்ச்சி என புரிந்து கொள்ளச் சிரமமான அறிவியல் தகவல்களை எளிய தமிழில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஆராய்ச்சிதான் வளர்ச்சிக்கு அடிப்படை. “தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை ‘‘ என ஒரு பழமொழி உண்டு. பிறக்கும் குழந்தை […]

Read more

வாசலுக்கு வரும் நேசக்கரம்

வாசலுக்கு வரும் நேசக்கரம், முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரத்தின் சிந்தனையில் உருவான, 15 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கட்டுரையில் கருத்து சொல்லும் வேளையில், அதனோடு நகைச்சுவையை கலந்து கலகலப்பாக்குவது இவரது பாணி. அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் சவால்கள், அதற்கான தீர்வுகள், போகிற போக்கில் எளிதாய் எப்படி இவற்றை எதிர்கொள்வது என, எளிமை சொற்களில் தந்திருக்கிறார். தன் கருத்திற்கு கூட்டு சேர்க்க, குட்டி, குட்டி கதைகளையும் கட்டுரைகளில் கலந்து இருக்கிறார். […]

Read more

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ. மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது. மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் -(51 பகுதிகள்- 51 ஆய்வுரைகள்) , பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, திலகவதியார் திருவருள் ஆதீனம், பக்.256. விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் கோட்டை- 1; முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும், 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், […]

Read more
1 7 8 9 10 11 88