வனநாயகம்

வனநாயகம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வனம் மிகுந்து ஊர் சிறுத்து இந்த காலத்தில் நம் மனத்து இருந்த நிம்மதியும், இயற்கை அளித்த கொடையும் நிறைந்து இருந்தது. வனம் அழிந்து ஊர்களானதில் வெளிச்சம் வெளியே வந்து மனதின் உள்ளே இருட்டு பரவி விட்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இறையன்பு. தினம் தினம் வனம் அழிகிறது. அதனால்தான் மனிதனின் வாழ்நாளும் வேகமாக கழிகிறது என்ற உண்மை, கனக்கிறது. கூடவே, வனம் வளர்த்து வருங்காலத் தலைமுறைக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் படமாகத் […]

Read more

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம்-ஒரு கண்ணோட்டம்

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம்-ஒரு கண்ணோட்டம், ராகுலன், புதுமைப் பதிப்பகம், பக். 304, விலை ரூ. 180. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்த கம்யூனிஸக் குழுக்கள், இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கட்சியாக மாற்றப்பட்டது. பிறகு, 64-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது, அதன் பிறகு 1967-இல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உருவானது, தற்போது வரையுள்ள தீவிர, அதிதீவிர குழுக்கள் என நீண்ட பொதுவுடைமை இயக்க வரலாறு 58 சிறு கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் விடுதலைப் போராட்டக் களத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கும், விடுதலைக்குப் […]

Read more

மினராவின் குரல்

மினராவின் குரல், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 260ரூ. அல்லாமா இக்பாலின் கவிதைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஐம்பதுகளில் இஸ்லாமிய சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இஸ்லாமிய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர் முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’. இவர் அண்மையில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஆவார்.கான்சாகிப் (மருதநாயகம்) பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் இவருடையது. இந்த நூலில் நபி பெருமானாரின் குடும்ப வாழ்வு, அருமறை நிகழ்த்திய அற்புதங்கள், சிறந்த முஸ்லிம் யார்? ரமலான் பெருநாள், குர்ஆனும் […]

Read more

வாழ்வில் வெற்றி பெற இதிகாசங்கள்

வாழ்வில் வெற்றி பெற இதிகாசங்கள், கவிஞர் பாரதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதிய பார்வையில் ஆய்வு செய்து கவிஞர் பாரதன் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட நூல். சரளமான நடை, சிந்தனைக்கு விருந்தளிக்கும் கருத்துகள். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?, டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக். 32, விலை 15ரூ நாம் எந்தப் பொருளை எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழமாகச் சிந்தித்து தயார் செய்ய வேண்டும். வாக்கியங்கள் கருத்தால் பிணைந்து செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

பாலி முதல் மியான் வரை

பாலி முதல் மியான் வரை, மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், பக். 320, விலை 250ரூ. பயணக்கட்டுரைகளில் இந்நூல் சற்று வேறுபட்டது. பாலி, கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பர்மா ஆகிய நாடுகளில் பயணம் செய்து, அங்கு புலம் பெயர்ந்த தமிழின் தொன்மங்களையும் தமிழரையும் கண்டு, அவை தந்த அனுபவங்களையும், செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் பாணி சிறப்பானதாகும். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

முகம் மாறும் நிலா

முகம் மாறும் நிலா, வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் வெளியீடு, பக். 78, விலை 75ரூ. தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது. கடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் […]

Read more

விடியலை நோக்கி ஒரு மாற்றம்

விடியலை நோக்கி ஒரு மாற்றம், கி. கார்த்திகேயன், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. “ஊழல்களின் தாக்கம்”, “விவசாயமே நம் சுவாசம்”, “உணவே உயிர்”, “குப்பைக் கூடையாகும் இந்தியா” முதலான தலைப்புகளில் 44 கட்டுரைகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்து தரும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —- விளம்பரவியல், சிவகுரு பதிப்பகம், விலை 190ரூ. வியாபாரத்துக்கு விளம்பரம் அவசியம். நாளிதழ்களில் விளம்பரம் செய்வதால் நிறைய பலன் உண்டு. விளம்பரவியல் பற்றி, தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ. மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக […]

Read more

பொங்கல் விழாச் சிந்தனைகள்

பொங்கல் விழாச் சிந்தனைகள், ஐவர்வழி வ.வேம்பையன், திருவள்ளுவர் மன்றம், விலை 150ரூ. பொங்கல் விழா பற்றிய கட்டுரைகள் கொண்ட நூல். பொங்கலை பல கோணங்களில் ஆராயும் கட்டுரைகள். சுருக்கமாகச் சொன்னால், பொங்கல் பற்றிய ஓர் அரிய ஆவணம் என்றே கூறலாம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more
1 6 7 8 9 10 88