வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ. வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி. கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி […]

Read more

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது. அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் […]

Read more

ஆண் நன்று பெண் இனிது

ஆண் நன்று பெண் இனிது, சக்திஜோதி, இந்து தமிழ் திசை, விலை 150ரூ. தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாகத் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி. அன்பின் பொருட்டு குடும்ப வாழ்க்கையில் அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பெண்ணின் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள் நன்றி: தமிழ் இந்து, 4/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ரபியுல் அவ்வல் வசந்தம்

ரபியுல் அவ்வல் வசந்தம், ஹிஜ்ரா பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. உலகத்திற்கு இறைவனால் அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் பிறந்த மாதம் ரபியுல் அவ்வல். அவர்கள் பிறந்ததால் வசந்தம் வந்தது என்ற அடிப்படையில் இந்த நூலில், நபிகளாரின் புகழை கவிஞரும், எழுத்தாளருமான அபுஹாஷிமா அழகுற பாடியுள்ளார். மா நிலமெங்கும் மாநபியின் வாசம் மண்ணுக்கோ புத்தம் புது சுவாசம், நாயகமே நீங்கள் குர்ஆனின் விளக்கம், உங்கள் வாக்கும் வாழவும் அதனை விளக்கும் என்பன போன்ற நெஞ்சை அள்ளும் வரிகள். நன்றி: தினத்தந்தி, […]

Read more

கண்டேன் கனடா

கண்டேன் கனடா, அ.கோவிந்தராஜு, வானதி பதிப்பகம், விலை 125ரூ. கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா நகரில் 6 மாத காலம் தங்கி இருந்த ஆசிரியர், அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் தான் சென்ற போது பார்த்த வியப்பான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை சுவாரசியமாக நகைச்சுவை கலந்து ஆவணப்படுத்தி இருக்கிறார். கனடாவில் தான் பார்த்த ஆச்சரியங்கள் நமது நாட்டிலும் ஏற்படாதா என்ற ஏக்கத்தையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், ம.தொல்காப்பியன், கைத்தடி பதிப்பகம், விலை 120ரூ. பஸ் கண்டக்டர் வேலை பார்த்த ஒருவர் கடும் உழைப்பாலும், அசாத்திய திறமையினாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த சம்பவம் நமது தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது மட்டுமல்ல, நீண்ட காலமாக அந்தப் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை வரலாறுடன், அவரது திறமைகளை அலசி ஆராய்கிறது இந்த நூல். ரஜினியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026858.html இந்தப் புத்தகத்தை […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர் (அவ்வை டி.கே.சண்முகம்),  டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 248, விலை ரூ. 200. நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு பரிமாணங்களில் சுவைபடத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர். 2012-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட அவ்வை சண்முகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், கலைஞர்களின் கருத்துகள் மற்றும் பத்திரிகைகளில் இடம் பெற்ற கருத்துகளை ஆண்டு வரிசைப்படி இந்நூல் தொகுத்தளித்திருப்பது சிறப்பு. கொத்தமங்கலம் சுப்பு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், கி.வா.ஜகந்நாதன், வாலி போன்ற பல்வேறு கவிஞர்கள் அவ்வை சண்முகம் பற்றி எழுதிய […]

Read more

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்

பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர், இரா.சம்பத், சாகித்திய அகாடமி, பக். 238, விலை 180ரூ. சித்த மருத்துவப் பரம்பரையில் தோன்றிய காத்தவராயன், அயராத சமூக மேம்பாட்டுப் பணிகளால் அயோத்திதாசப் பண்டிதரானவர். அவரது தமிழ் ஆளுமையின் பன்முகப் பரிமாணங்களை ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்யும் இந்நுாலை சாகித்திய அகாதெமிக்காகத் தொகுத்திருப்பவர் இரா.சம்பத். பண்டிதரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றோடு, அவரது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பண்பாட்டுச் சடங்குகளுக்கான விளக்கங்கள், உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனும் கொள்கை, மக்களுக்கான இலக்கிய நோக்கு போன்றவை தரப்பட்டுள்ளன. நிலம், […]

Read more

கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் […]

Read more

தமிழ்ச்சிப்பி

தமிழ்ச்சிப்பி, முனைவர் இரா.சம்பத், ஜெ.கலைவாணி, ஆர்.அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம், விலை 500ரூ. “ஆர்” அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம் நடத்திய 13வது பன்னாட்டுக் கருத்தரங்கில் பல தமிழறிஞர்கள் பங்கு கொண்டு, இலக்கியத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிறந்த இலக்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more
1 5 6 7 8 9 88