மாசாணக் கால்வாய்

மாசாணக் கால்வாய், டி.எஸ்.புத்தகமாளிகை, 15/6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 140ரூ. இந்த நாவல் மாசாணக் கால்வாயில் ஆரம்பித்து அதே கால்வாயில் முடிவதாக அமைந்து இருக்கிறது. கிராமத்து அழகை ரசித்தது போன்று சுவைபட எழுதி உள்ளார் ஆசிரியர் கலைநன்மணி மகிழ்நன். கணவர், மனைவி தாம்பத்ய வாழ்க்கையை ஒரு சங்கீத ரசனையின் மலம் அவருடைய பேனா சித்தரித்து விளக்கி இருப்பது இளஉள்ளங்களுக்கு விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி. படிக்கப் படிக்க ஒரு ஆவலை தூண்டுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/9/2013. —- […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-9.html பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரியும் இந்நூலாசிரியர், 1960களிலிருந்து பிரபலமான பத்திரிகைகள் பலவற்றிலும் நகைச்சுவையாக கதை, கட்டுரைகள் எழுதி வருபவர். சிவகாமியின் சபதம், சிவசாமி துணை என்கிற முழு நீளநகைச்சுவை நாவல்கள் உட்பட இதுவரை 16 புத்தகங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும், […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கையில் பிறந்த தனிநாயகம் அடிகளார், நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது, தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு, 1941ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயின்றார். தமிழின் சிறப்பை நன்கறிந்த அவர், தமிழில் சிறந்த நூல்கள் பலவற்றை எழுதினார். மேடைகளிலும் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி புகழ் பெற்றார். அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற […]

Read more

போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ. தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, […]

Read more

புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு

புறநானூறும்  திருக்குறளும் ஒப்பாய்வு, ஒளி பதிப்பகம், 4-63, டாக்டர் ரங்கா சாலை, சென்னை 18, விலை 150ரூ. புறநானூறு, சங்க கால மன்னர்களின் வீரத்தை உணர்த்த வந்த நூல். திருக்குறள் மக்களுக்கு அறம் உணர்த்த வந்த நூல். இந்த இரு நூல்களின் அறிமுகம், தொடர், ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புதிய கருத்துக்களை சிறப்புகளைப் பட்டியலிட்டு காட்டுகிறது இந்நூல். புறநானூற்றில் அமைந்துள்ள வரலாற்றுக் களஞ்சியங்கள், கவின் தொடர்கள், உள்ளம் கவர் அறக்கருத்துகள் ஆகியவை படிப்போரின் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்,

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் – 612901, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாற்றைப் பண்பாட்டை புலவர்களும் அறிஞர்களும் பலவிதங்களில் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியிருக்கும் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற நூலும் ஒன்றாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக கரிகால்ச்சோழனின் வரலாற்றையும் கலிங்கத்தில் இருந்து காரவேலன் படையெடுப்பையும் விளக்கும் அவர் கரிகாலனின் வீரத்தைப் […]

Read more

கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசர் கண்ணதாசன் அமெரிக்கா ரஷ்யா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்தவர். அந்தப் பயணங்கள் பற்றி பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளாக எழுதி படிப்போரை பரவசப்படுத்திய தருணங்கள் நிறைய உண்டு. தென்றல் இதழில் வெளிவந்த ஈழ நாட்டில் ஈராறு நாட்கள் என்ற பயணக்கட்டுரை பலரது கவனத்தை […]

Read more

ஆக்கமும் பெண்ணாலே

ஆக்கமும் பெண்ணாலே (பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்), ஏ. இராஜலட்சுமி, முரண்களரி படைப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 58, பக்.144, விலை 100ரூ. காலம் காலமாக சமூகத் தளைகளால் கட்டுண்ட பெண்கள், இலக்கிய மரபுகளை மீறி தம் உணர்வுகளைச் சுதந்திரமாகப் படைப்பிலக்கியத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பெண் புலவர்களின் பாடல்களே சான்றாகத் திகழ்வதை சான்றுகளோடு எடுத்தக் காட்டியுள்ளார் ஆய்வாளர். புறப்பாடல்களைவிட அகப்பாடல்களை அதிகம் பாடியுள்ள பெண் புலவர்கள் ஆண்களை மையப்படுத்தியே பாடியுள்ளனர் என்றும், பெண் புலவர்கள் பாடிய புறப்பாடல்கள் […]

Read more

ராமனும் ராமசாமியும்

ராமனும் ராமசாமியும், ம. பிரகாஷ், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-313-6.html ராமாயணத்தை பெரியார் எதிர்த்ததற்கான காரணங்கள் குறித்து நூலில் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். கந்தபுராணத்தை அடிப்படையாக வைத்தே ராமாயணமும் எழுதப்பட்டுள்ளத என்றும் அவர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.பெரியாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ராதா, பாரதிதாசன் உள்ளிட்டோர் ராமாயணத்தை எதிர்த்து வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினதந்தி,11/9/2013.   —-   இலக்கிய நுகர்ச்சி, இரா. குமரவேலன், […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, […]

Read more
1 67 68 69 70 71 88