வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 374, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-0.html கண்ணனே நீ வரக் காத்திருந்தேன். கண்விழித் தாமரை பூத்திருந்தேன் எனும் காதல் பாடல், ஆனாலும் பாஞ்சாலி துயரமெல்லாம் பாவையினம் அறியாதோ? எனும் காப்பியச் செய்தி ஆனாலும், உலகம் சுழல்கிறது. அதன் பயணம் தொடர்கறிது – வெள்ளிக்கிமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன். வள்ளிக் கணவன் பேரைச் சொல்லிக் கூந்தலில் பூ முடித்தேன் என்ற பக்தி ரசமாயினும், திரை இசைக் […]

Read more

அக்பர்

அக்பர், க. வெங்கடேசன், சாந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 407, விலை 180ரூ. இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் வருகை முக்கியமானதொரு திருப்புமுனை. அதிலும் அக்பரின் ஆட்சி காலத்தில், பல்வேறு போர் விதிமுறைகளை தளர்த்தியும், முஸ்லிம் அல்லாதோர் மீது திணிக்கப்பட்ட வரிகளை தளர்த்தியதாலும், அவர் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றார். தந்தை ஹுமாயூன் இறந்த பிறகு 14 வயதில் அரியணை ஏறிய அக்பர், யானை, புலிகளை வேட்டையாடுவது, குதிரை சவாரி உள்ளிட்டவற்றில் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய 20ம் வயதில், தன்னிச்சையாக செயல்பட்டு அக்பர், நாட்டு […]

Read more

சங்க இலக்கிய ஆய்வு மாலை

சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ. இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு […]

Read more

மனிதன் தேவர் நரகர்

மனிதன் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 180ரூ. இன்றைக்கு யார் யாரை எல்லாமே பூனை நடையைப் பார்த்துவிட்டு உலக அழகி என்று மகுடம் சூட்டுகிறார்கள். தமிழ்த்திரை உலகில் நிஜமாகவே அப்படி ஒருவர் இருந்தார். உணவு, நீர் இரண்டும் அருந்தாமல் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பசியும் தாகமும் இன்றி ராஜகுமாரியை ஒரு ரசிகர் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தனை பெரிய பிரபஞ்ச அழகி அவர்…‘ என்று எழுதுகிறார் பிரபஞ்சன். பி.யு. சின்னப்பா நடித்த கிருஷ்ணபக்தி டிவிடியைப் பார்த்துவிட்டே இந்த விமர்சனம். அந்த சின்னப்பாவுக்கு […]

Read more

தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு […]

Read more

உரை மாண்புகள்

உரை மாண்புகள், இரா. குமரவேலன், விழிகள் பதிப்பகம், 8ஏம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41. பக். 160, விலை 130ரூ. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார், திருக்குறள் பரிமேலழகர், திருக்குகோவையார் பேராசிரியர், இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது அடியார்க்குநல்லார் உரைநலம் […]

Read more

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள், தொகுப்பாசிரியர் ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-1.html ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள், தினமணி, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன், பாரததேவி, ஹனுமான், ஜெயபாரதி, சிவாஜி, எழுத்து, பி.எஸ். ராமையா மணி மலர் உள்ளிட்டவற்றில் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதிய முன்னுரைகள் வ.ரா., பி.வி. சுப்பிரமணியன் நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள் மற்றும் ந.பிச்சமூர்த்தி எழுத்து செல்லப்பாவுக்கும், சு. சங்கரசுப்பிரமணியனுக்கும் வழங்கிய முழுநீளப் பேட்டி […]

Read more

மனிதன்

மனிதன், ஏ.எஸ். ராகவன், திருமகள் நிலையம், 13, சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-0.html பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன் எழுதிய சிறந்த நாவல் மனிதன். ஆனந்த விகடன் வெள்ளிவிழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் இது என்பதில் இருந்தே இதன் தரத்தை நன்கு உணரலாம். தெளிந்த நீரோடை போன்ற நடையில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஏ.எஸ். ராகவன், கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக பூமா ஓர் அற்புத […]

Read more

கருப்பு காந்தி காமராஜர்

கருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 40ரூ. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அழகாக எழுதியுள்ளார், எழுத்தாளர் மெர்வின்.   —-   யோகா புத்தகம், தஞ்சை சக்தி ரமேஷ்,  3/6, சத்திய மூர்த்தி நகர், நந்தனம், சென்னை 35, விலை 160ரூ. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை வலியுறுத்தி, ஸ்பெஷல் யோகா என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் தஞ்சை சக்தி ரமேஷ். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.   […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ. கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், […]

Read more
1 69 70 71 72 73 88