இந்தியர்களின் போலி மனசாட்சி

இந்தியர்களின் போலி மனசாட்சி, மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-5.html நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்பது நியாயமா?, நீதியை அழிக்கும் சட்டங்கள், ராஜபக்சே நடத்தும் உளவியல் யுத்தம், வினேதிகளுக்கு விடிவு உண்டா?, மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் இத்தகைய தலைப்புகளில் 40க்கும் மேற்பட்ட […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, தொகுப்பு நூல்-நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை1 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்கு தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்பட காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணி கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.   —-   புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷீயல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், கோவை 642045, விலை […]

Read more

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு

திராவிடநாட்டுக் கல்வி வரலாறு, திராவிடப்பித்தன், மீள் பதிப்பாசிரியர்-இரா. பாவேந்தன், கயல்கவின் பதிப்பகம், 16/25, 2வது கடல்போக்குச் சாலை, வால்மீகி நகர், திரவான்மியூர், சென்னை 41, விலை 250ரூ. சமூக அக்கறை கொண்டவர்களுக்கான நூலே இந்த திராவிடநாட்டுக் கல்வி வரலாறு. கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானது. சாதி, மதம் கடந்து எல்லாரும் கல்வி கற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இது அனைவரின் உரிமையும்கூட… என்று நினைப்பவர்களாக இருந்தால், இந்த நூல் சர்வ நிச்சயமாக உங்களுக்கானதுதான். நமக்கானதுதான். சென்ற நூற்றாண்டை, புரட்சிகளின் நூற்றாண்டு என்று சொல்லலாம். […]

Read more

கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?, டாக்டர் மு. வரதராசன், பாரிநிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக், 240, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-320-7.html தமிழர்களின் இதயங்களில் நீங்காது நிலைபெற்று திகழ்பவர், தெய்வத்திரு டாக்டர் மு.வ. அவர்கள், என்று கூறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின் நாவல்களும், இலக்கிய நூல்களும், கட்டுரைகளும், மொழி இயல் நூல்களும், மற்றவைகளும் படிப்போர் மனதில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். கள்ளோ? காவியமோ? என்ற இந்நூலும் படிப்போர் மனதில் கிளர்ச்சியை […]

Read more

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல், கர்னல் கணேசன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ. நூல் ஆசிரியர் கர்னல் கணேசன், இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவங்களை அவ்வப்போது தனது அண்ணனுக்கு எழுதிய கடிதங்களின் கோர்வையே இந்நூல். பாகிஸ்தான் போர், சீன போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது, வங்காளதேச உதயம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம். விலை 150ரூ. இதே நூலாசிரியர் எழுதிய மற்றொரு புத்தகம் சிவந்தமண், கைப்பிடி நூறு. […]

Read more

நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி. மகாதேவா, மித்ரா ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது. […]

Read more

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை 14, பக். 296, விலை 150ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more

விகடன் சுஜாதா மலர்

விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். […]

Read more

தமிழ்க் காதல்

தமிழ்க் காதல், தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா பதிப்பகம், 60/6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக். 424, விலை 200ரூ. உலக இலக்கியங்களில் இல்லாத தனித்தன்மை தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு. அது, அகம் புறம் என்று வாழ்க்கையை வகுத்து, அவற்றுக்கு அணி செய்வதாக அமைந்த சங்க இலக்கியங்கள்தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர் வாழ்வை விளக்குபவை சங்க இலக்கியங்கள். இவற்றில் அகத்திணை இலக்கியங்களை மட்டும் ஆய்வுப்பொருளாகக் கொண்டு, பழந்தமிழர் வாழ்வில் அகத்திணை என்று குறிப்பிடப்படும் காதல் வாழ்வு […]

Read more

வாக்ரிகளின் வாழ்வியல்

வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு […]

Read more
1 71 72 73 74 75 88