நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-1.html பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் உரையுடன் வெளிவந்துள்ளது. உரை எழுதிய முனைவர் த.கோவிந்தன் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எளிமையாக எழுதியுள்ளார். 4 ஆயிரம் பாடல்களும் 2 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மொத்தம் 2, 164 பக்கங்கள். இரண்டு பக்கங்களும் சேர்த்து விலை 850ரூ. பாக்களையும், அழகிய கட்டமைப்பையும் காணும்போது விலை […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ. நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் […]

Read more

கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ. சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும், நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்துபோனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை. இலக்கிய வளர்ச்சியை அறிந்துகொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், கல்வெட்டு கற்பது ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக கல்வெட்டியல் மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த […]

Read more

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம், பகுதி 2, இரா. சாவித்திரி, சக்தி பதிப்பகம், 197, புட்பம் காலனி, அருளானந்த நகர், தஞ்சாவூர் 613007, பக். 402, விலை 200ரூ. தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது திறனாய்வியல். இரண்டாவது தொகுதியான இதில், தமிழ்த் திறனாய்வு வரலாறு என்ற இயலில் நிகழ்கால திறனாய்வுப் போக்குகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றியும், இதழ்கள் வளர்த்த திறனாய்வு இயலில் எழுத்து, இலக்கிய வட்டம், கணையாழி, வானம்பாடி, கொல்லிப்பாவை, உயிர்மை ஆகிய இதழ்களின் திறானாய்வுப் […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

சட்டமும் சாமானியனும்

சட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ. ஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் […]

Read more

பெரியார் களஞ்சியம் குடிஅரசு

பெரியார் களஞ்சியம் குடிஅரசு, (தொகுதி 41, 42), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 81/1(50), ஈ,வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 7, விலை 41வது தொகுதி 200ரூ, 42வது 270ரூ. தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகை இதழ்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம் ஆகும். அந்தப் பத்திரிகையில் வெளியான பெரியாரின் தலையங்கங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், அறிக்கைகள் முதலியவற்றை காலவரிசைப்படி தொடர்ந்து, புத்தகமாகப் பிரசுரிக்கும் பெரும் பணியை திராவிடக் கழகத்தலைவர் கி. […]

Read more

மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html ஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். […]

Read more

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ்,16/25, 2வது கடல் போக்குச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-865-9.html வெள்ளையம்மாள் துவங்கி தவமணி முடிய 10 பெண்களின் சாயல்கள் நூலாசிரியரை பாதித்த பெண்களை மையமாக வைத்து, அவள் விகடனில்வெளியான கதைகள், பறவைகள் என்னும் தலைப்பிலும் கனவு நெடுஞ்சாலை, துவங்கி ஈவதுவிலகேல் முடிய 10 கட்டுரைகள் தீம்தரிகிட இதழில் வெளிவந்தவையும் இதில் இடம் பெற்றுள்ளன. சராசரி மனிதர்கள் […]

Read more
1 68 69 70 71 72 88