மறைந்தும் மறையாத மானுடப் பறவை

மறைந்தும் மறையாத மானுடப் பறவை, கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-5.html இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துகுமரன் விபத்தில் மரணம் அடைந்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாக அமைந்தது. அவருடைய முழு வாழ்க்கையையும் மற்றும் அரசியலில் ஆற்றிய தொண்டுகளையும் தொகுத்து அவரின் ஒராண்டு நினைவாக இந்த நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.   —-   தொடரும் பயணத்தில் […]

Read more

திறமைதான் நமது செல்வம்

திறமைதான் நமது செல்வம், இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 150, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-3.html வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளன. ஆனால் மற்ற நூல்களில் இருந்து இந்நூல் வேறுபங்டடு இருப்பதை மறுப்பதற்கில்லை, நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளிய முறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. இல்லறம் நல்லறம் ஆவது எப்போது? என்று முதல் கட்டுரையில் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல கேள்வி […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html ஆழ்வார்கள் பாசுரங்களை அணுகுவது எப்படி? அணுஅணுவாய் சுவைப்பதெப்படி? என்ற முன்னுரையுடன் திகழும். இந்தப் புத்தகம் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் தாங்கியுள்ளது. அம்பலம் இணைய இதழ், கல்கி வார இதழ்களில் சுஜாதா எழுதிய வாரம் ஒரு பாசுரம் என்ற தொடரின் தொகுப்பு இந்த நூல். திவ்யப் பிரபந்தத்தில் […]

Read more

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 572, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது […]

Read more

கடவுளைக் காட்டிய கவிகள்

கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ. கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் […]

Read more

தடங்கலுக்கு மகிழ்கிறோம்

தடங்கலுக்கு மகிழ்கிறோம், தினகரன், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல், பக். 128, விலை 60ரூ. வானத்தின் அழுக்கைக்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு துளியும் ஒரு உயிரின் பிறப்புக்காக. அதுபோல் வாழ்வு என்பது பிறருக்குப் பயன்பட வேண்டும். பிறருக்குப் பயன்படாத எதுவும் வாழ்வல்ல. இப்படி கட்டுரை முழுதும் இன்றைய இளைஞர்களுக்கான கருத்தாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். எதிர்காலம் பற்றிய சிந்தனையை இதயத்தில் வளர்த்தவர்களே சாதனையாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள் என்று அறிவுறுத்துகிறார். அறநெறிக் கருத்துக்கள். ஆன்மீக நாட்டம். அறிவிருக்கு விருந்து. படிப்போருக்கு புதிய பாதை.   […]

Read more

கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்தாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டு என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தது, விசாவுக்காக அலைந்து, விமானப் பயண அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தாலும், […]

Read more

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

வட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ. வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

வெள்ளை வாரணம்

வெள்ளை வாரணம், தி.நெல்லையப்பன், காவ்யா, சென்னை 24, பக்.168, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-1.html சிறந்த தமிழறிஞரான க.வெள்ளை வாரணனார் இலக்கணம் சார்ந்த ஆய்வு நூல்களை மிகச் சிறப்பாக எழுதியவர். அவருடைய இலக்கணப் பணிகளை எடுத்துக்காட்டும்விதமாக உருவாகியுள்ள நூல் வெள்ளை வாரணனாரின் பல்வேறு இலக்கணம் சார்ந்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளின் அடிப்படையில் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் காலத்தை ஆராயும் கட்டுரையும், இவ்விரு இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து வெள்ளை வாரணனார் […]

Read more
1 66 67 68 69 70 88