50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக்

50 எவர்கிரீன் ராகாஸ் ஆப் கர்நாடிக் மியூசிக் (ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 1260ரூ. இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா? எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார் வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல, கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர். அதையும் தாண்டி சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் […]

Read more

வர்ணசாகரம்

வர்ணசாகரம், சங்கீத கலாநிதி டி.கே.கோவிந்த ராவ், கானமந்திர் பப்ளிகேஷன்ஸ், பக். 444, விலை 500ரூ. வர்ணசாகரம் என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில் 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தான தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள் என, மொத்தம் 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே. கோவிந்த ராவ். கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் […]

Read more

கற்கண்டுக் கதை கேளு

கற்கண்டுக் கதை கேளு, மதிஒளி, உத்திராடம் புக்ஸ், சென்னை, பக். 128, விலை 120ரூ. குழந்தை இலக்கியம் வகையை சார்ந்தது இந்த நூல். குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது. பொம்மைகளும், கதைகளுமே குழந்தைகளின் அற்புத உலகம். இந்த புத்தகத்தில் உள்ள கதைகளை, நம் பிள்ளைகளை படிக்க சொல்லியோ, நாம் படித்தோ சொல்லலாம். அவர்கள் இந்த கதைகளை விரும்பி ரசிப்பர் என்பதில் ஐயமில்லை. நாம் பெரும்பாலும் கேட்ட கதைகள் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னிய நாட்டு மொழிகளில் இருந்து, […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more

ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள்,தொகுப்பாசிரியர்-என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், பக். 367, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-9.html தமிழ் சிறுகதையுலகில் தனிப்பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஜெயகாந்தன். அவரது கதைகள் வெளியான காலத்தில், ஒரு பக்கம் பலத்த சர்ச்சைகள் உருவாகின, மறுபக்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டினர். பழமைவாதத்தின் மீது விழுந்த சவுக்கடி என்றே அந்த கதைகளை கூறவேண்டும். இந்தியில், பிரேம்சந்த் சிறுகதைகள் எழுதிய போது, இதே எதிர்வினைகளைத்தான் சந்தித்தார். முற்போக்கு எண்ணம் கொண்ட சிறுகதைகள் விவாதிக்கப்படுவதும், கடுமையான எதிர்வினைகளை […]

Read more

வள்ளுவம் கூறும் வாழ்வியல்

வள்ளுவம் கூறும் வாழ்வியல், விதை வெளியீடு, ஈரோடு, விலை 275ரூ. வள்ளுவம் கூறும் வாழ்வியல் சிந்தனைகளான அறம், அன்பு, அருள், தவம், பொருள் ஈட்டும் முறைகள், இன்சொல், ஈதல், கல்வி, அறிவு, ஊக்கம், முயற்சி, மன உறுதி, ஒழுக்கம், பண்பு, நட்பு, எண்ணங்களில் உயர்வு, நிலையற்ற வாழ்வின் தன்மை போன்றவற்றையும், அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதனோடு அறநூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், பழமொழிகளையும் இணைத்து எல்லா தரப்பினரும் கற்றறியும் வண்ணம் தொகுத்தளித்துள்ளார் பொறியாளர் தே.ஹெலினா. இது […]

Read more

மறுபடியும்

மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. […]

Read more
1 49 50 51 52 53 80