அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

தேவர் வருக

தேவர் வருக, இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை, பக். 160, விலை 125ரூ. சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தேவர் வருக குறுநாவலும் 6 சிறுகதைகளும் அடங்கிய நூல். நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும் வெறும் கதைக என்கிற எல்லையத் தாண்டி, வாழ்க்கை பற்றிய பார்வையைத் தருகின்றன. இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சிக்கும் தேவர் வருக நாவல். அநியாயம், அக்கிரமம் செய்பவர்களைக் கடவுள் கண்டுகொள்ளமலிருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவர் ஏதோ ஒரு வடிவத்தில் இப்போதும்கூட அக்கிரமக்காரர்களைத் தண்டித்துக் […]

Read more

பிணங்களின் கதை

பிணங்களின் கதை, கவிப்பித்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 160, விலை 120ரூ. நாம் வாழும் சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் விழுமியங்கள் நவீனம் என்ற பெயரில் இப்போது மெதுவாகச் சிதைக்கப்படுவது நம்மில் எத்தனை பேர்? ஆனால், தொண்டை மண்டலத்தில் பிறந்த நூலாசிரியர், தனது இந்தச் சிறுகதை நூலின் மூலம் தாம் பிறந்த மண் பாரம்பரியத்தை இழந்து வருவது குறித்து கனத்த இதயத்துடன் ஆதங்கப்பட்டுள்ளார். புதுமை என்ற பெயரில் எப்படி எல்லாம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் உதாசீனப்படுத்துகிறோம்? இதனால், […]

Read more

நீட்சி

நீட்சி, பாரவி, இயல் பதிப்பகம், பக். 208, விலை 95ரூ. பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான வரப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகுற கதை நிறம். கண் மருத்துவப் பரிசோதனைக்கு வரும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொல்லும் இருட்டு, இறுதிச் சடங்கின்போது வாய்க்கரிசி போடுவதைச் சொல்லும் வாய்அரிசி முதலியன மிக யதார்த்தமானவை, […]

Read more

கதையில் கலந்த கணிதம்

கதையில் கலந்த கணிதம், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 168, விலை 150ரூ. இந்த நூல் கதைகள் மூலம் கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும் மீண்டும் ஒன்று சேரும் வரம் பெற்ற ஜராசந்தனை, மகாபாரத போரில் பீமன் எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை 2025, 3025, 9801 என்ற எண்களை வைத்து கூறுவதை ரசிக்கலாம். குருசேத்திர போரில் கையாளப்பட்ட சக்ர வியூகம் எத்தகையது என்பதை விளக்கும் கணித முறையும் வியப்பளிக்கிறது. மகர வியூகம், கூர்ம வியூகம், பத்ம வியூகம், கருடு வியூகம், […]

Read more

மணக்கும் வளம்

மணக்கும் வளம், இனிக்கும் மனம், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 80ரூ. நூலாசிரியர் கொ.மா. கோதண்டம் அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும், மலைவாசி மக்களுடன் சென்று, இரவில் பந்தம் கொளுத்தி வைத்து ஆற்றங்கரையில் தங்கி காடுகளின் அழகிய ரம்மியமான காட்சியை தத்ரூபமாக எழுதி நூலாக வடித்துள்ளார். இதனை படிக்கும் போது நமக்கு காடுகளுக்கு நேரில் செல்வதுபோல உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.   —-   மரண விளிம்பில் மனிதன், எஸ்.கே.எஸ்.பப்ளிஷர்ஸ், விலை 60ரூ. குர்ஆனில் கூறப்படும் கருத்துக்களுக்கு ஏற்ப, உண்மைக் கதைகளை எழுதியுள்ளார் எஸ். […]

Read more

யானை சவாரி

யானை சவாரி, பாவண்ணன், புக்ஸ் பார் சில்ரன், பக். 64, விலை 40ரூ. தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில் போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப்போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், […]

Read more

புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், […]

Read more

நான் மலாலா

நான் மலாலா (சுயசரிதை), ஆங்கிலம்-மலாலா, கிறிஸ்டினா லாம்ப், தமிழ்-பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 312, விலை 275ரூ. இன்று உலகம் முழுதும் நேசிக்கப்படும் பெயர் மலாலா. அந்த பெயருக்குரிய 15 வயது சிறுமி, தன் வாழ்வில் அனுபவித்த துயரம் மிகக் கொடுமையானது. முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என, பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், 2012, அக்டோபரில், பள்ளியில் இருந்து மலாலா வீட்டிற்கு திரும்பியபோது, தலிபான்கள் அவரது தலையை குறிவைத்து சுட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, இன்று நோபல் பரிசு பெற்று, […]

Read more
1 48 49 50 51 52 80