இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு

இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு, முவப்பிக்கா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 45ரூ. சமச்சீர் பெற்ற வாழ்வு திருமணத்தில்தான் உண்டு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. திருமணம் செய்யாதவன் என் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்பது நபி மொழி. அந்த வகையில், இஸ்லாத்தில் திருமணம் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது? திருமண உறவில் ஆணுக்கும், பெண்க்கும் எத்தகைய உரிமைகளும், கடமைகளும் உள்ளன? திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரு மணம் கொண்ட திருமண வாழ்வில் என்ற இந்த நூலில் உடன்குடி […]

Read more

காயப்படும் நியாயங்கள்

காயப்படும் நியாயங்கள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 70ரூ. முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார் கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம். நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் நாய்க்குட்டி, பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும்இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் ஏணிகளும் தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால் அந்தத் தபால்காரருக்கு வரும் […]

Read more

காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு, பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 800ரூ. ஆசிரியர் பழ. நெடுமாறனின் கடும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த புத்தகம் உருவாகி இருப்பதை நன்றாக உணரமுடிகிறது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் ஆதிகாலத்தில் இருந்து வரும் நட்பும் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பண்பாட்டு பரிமாற்றமும் மிக நுணுக்கமாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு ரஷியா செய்த உதவிகள், ரஷியாவில் நடைபெற்ற புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இருந்த ஆழ்ந்த […]

Read more

அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2)

அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2), ஸ்ரீ வ. ந. கோபால தேசிகாசாரியார், அட்சுரா பதிப்பகம், சென்னை, பக். 152, 144, விலை 130ரூ, 130ரூ. மகாபாரதம் பிரதான கதை பலரால் எழுதப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஏராளமான கிளைக் கதைகள் அதிக அளவு வெளிவரவில்லை. அத்தகைய பல்வேறு கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தௌம்பயர்- ஆருணி, தௌம்யர் – உபமன்யு சம்பவங்கள் குருபக்திக்கான உதாரணமாக விளங்குகின்றன. பொறாமை கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக […]

Read more

கண்ணதாசன் பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ. மாந்திரீக எதார்த்த நாவல் […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

தாய்ப்பால்

தாய்ப்பால், முகுந்தன், தமிழில் டி.க. சதாசிவம், சாகித்ய அகாதெமி குணா பில்டிங்ஸ், சென்னை, பக். 336, விலை 185ரூ. சுனாமிபோல புறப்பட்டு வரும் மேற்கத்திய நாகரிகம், தொழில்நுட்பப் பெருக்கம், நவீனமயமாக்கல், காலனிமயமாக்கல் போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை நமது பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு முரண்பட்டு எதிர்கொள்கின்றன என்பதைப் பாசாங்கில்லாமல் எடுத்துச் சொல்கின்றன ‘உண்ணி சொன்ன கதை’, ‘பிளாஸ்டிக்’, ‘காரோட்டி‘, ‘பாவாடையும் பிக்கினியும்’ ஆகிய சிறுகதைகள். யதார்த்தத்தை மீறிய கற்பனைக்கு எட்டாத உலகத்தை சுவாரசியமாகவும் தத்துவார்த்தமாகவும் சொல்கின்றன. ‘தணியாத தாகம்’, ‘குளியலறை’ ஆகிய சிறுகதைகள். ‘மாதவனின் பயணங்கள்’, […]

Read more

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல், பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார், நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.   —- காமராஜர், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், […]

Read more

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 95ரூ. பிரபல எழுத்தாளர்களின், சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, அசாகமித்திரன், சூடாமணி ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன் தொகுதியில், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பொன்னகரம், சிற்பியின் நகரம், நாசகாரக்கும்பல், நினைவுப்பாதை, காஞ்சனை உள்பட 20 சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொகுதிகளின் விலை தலா ரூ.130. மற்ற தொகுதிகள் ஒவ்வொன்றின் விலை 95ரூ. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைப் […]

Read more

வெள்ளி இரவொன்றில்

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ. கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல். பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார். ‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார். காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து […]

Read more
1 46 47 48 49 50 80