நிழலற்ற பயணம்

நிழலற்ற பயணம், தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை, பி.ஆர்.சுபாஷ்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், பக். 476, விலை 300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-000-7.html மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவருமான, சுஷில்குமார் ஷிண்டேயின், வாழ்க்கை வரலாற்று நூல். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறப்பு, 5ம் வகுப்பு வரை கல்வி, தந்தை மறைவால் படிப்புக்கு முற்றுப்புள்ளி, தாய்க்கு உதவ, வீட்டு வேலையாளாக சேர்தல், இடையே இரவுப் பள்ளியில் […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. கோவில்களில் அடைக்கலம் புகுந்து, திருமணங்களில் எட்டிப் பார்க்கும் நாகஸ்வரம் தவில் மங்கல இசை தமிழனின் தனி அடையாளம். கால மாற்றத்தால், மங்கல இசைக்கே மங்களம் பாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், இந்த அற்புதமான ஆராய்ச்சி நூல் மீண்டும் புத்துயிர் தந்துள்ளது அந்த கலைக்கு. ருக் வேதத்தில் உள்ளது என்றும் கோவில்கள் தோன்றியபோதே, நாகஸ்வரமும், தவிலும் தோன்றிவிட்டதென்று இசை மேதை பி.எம்.சுந்தரம் ஆய்வு முன்னுரையில் அழகாக எழுதியுள்ளார். வாசித்து சாதனை செய்த […]

Read more

கி.பி. 1800ல் கொங்குநாடு

கி.பி. 1800ல் கொங்குநாடு, புலவர் செ. இராசு அடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக். 344, விலை 190ரூ. திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டுக் களப்பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர் மற்றும் கொங்குநாட்டுப் பகுதிகள் பற்றி, ஒரு களஆய்வு செய்ய எண்ணினார் அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மார்க்விஸ் வெல்லெஸ்லி பிரபு. இப்பொறுப்பு டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவரிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் புக்கானன் அதை ஏற்று, வழிகாட்டி, காவலர்கள், மொழி பெயர்ப்பாளர், படம் வரைபவர் ஆகிய குழுவினருடன் மதராசில் இருந்து புறப்பட்டுச் […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், ரா. சொக்கலிங்கம், மனிதத்தேனீ பதிப்பகம், பக். 132, விலை 50ரூ. பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள், இலக்கிய, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள் என, இதுவரை 15 ஆயிரத்து 500 மேடைகள் கண்டவர் மனிதத்தேனீ சொக்கலிங்கம். மேடை பேச்சை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ள இவர், மூன்றாண்டுகளாக மேடைகளில் முழங்கியவற்றில் சிலவற்றை தேர்வு செய்து 40 கட்டுரைகளாக தந்துள்ளார். கட்டுரைகளை அறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என வைகப்படுத்தி தந்திருப்பது சிறப்பு. மேடைப் பேச்சாளர்கள் கட்டாயம் […]

Read more

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள், முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 312, விலை 225ரூ. தரமான, அரிதான, செம்மொழி சார்ந்த, நல்ல இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்ற மரபை வழக்கமாய்க் கெண்டுள்ள பதிப்பகம் சேகர் பதிப்பகம். பிழை இல்லாது, நல்ல, எளிய கட்டமைப்போடும் நூல்களை வெளியிடும் பாங்கு நேர்த்தியானது. இந்த வரிசையில் நூலாசிரியர் முனைவர் ச.பொ. சீனிவாசன் எழுதிய, பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வருணனை என்னும் சொல் வடமொழித் தழுவல். எனினும் வேறு பெயர்களில் தமிழில் வழங்கியுள்ளதையும் ஆசிரியர் பல […]

Read more

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் கா. மணிகண்டன், சைந்தவி, பக். 239, விலை 225ரூ. தொல்காப்பியம் தமிழின் மிகப் பழைய இலக்கண நூல். எழுத்து, சொல், இலக்கணத்தோடு வாழ்க்கைக்கும்(பொருளுக்கும்) இலக்கணம் வகுத்த நூல். தொல் காப்பியத்தில் காணும் அறிவியல் சிந்தனைகளை நுணுகி ஆராய்ந்து, அறிந்து உணர்ந்த செய்திகளை, ஆசிரியர் விரிவாக்கி விளக்கி இந்நூலில் வழங்கியுள்ளார். நிலம், நீர், வளி, தீ, விசும்பு கலந்த மயக்கம் இவ்வுலகம் எனும் கருத்தும், செடி, கொடி வகையை உயிர்கள் வகையில் பிரித்திருப்பதும், பேச்சொலிகளின் அளவுகளை ஆய்ந்து கூறியுள்ள திறனும் […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன், ஜெசி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், நன்கொடை 200ரூ. தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் இழிந்தோர், அடியோர், இழிசனர், இழிபிறப்பாளர், துடியர், பறையர், புலையன், புலைத்தி, வண்ணார், வெட்டியான் எனப் பேசுகின்றன. பறை அடித்து அறுவடை செய்தோரைக் கடைசியர் என்கிறது சங்ககாலப் பாடல். கி.மு. 170க்கும் 150க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட மநு தர்மம் இந்தியாவின் நால் வர்ண சமூகத்தில் புதிதாக 5வது பிரிவாகப் பஞ்சமர்களை உருவாக்கியது என்கிறார் அம்பேத்கர். ஆதாம் என்பவர் 1840ல் எழுதிய நூலில் […]

Read more

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. தமிழ்த் திரை இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த கவியரசு கண்ணதாசனின் பாடல்களில், காலத்தை வென்ற பாடல்களின் தொகுப்பு நூல். காலத்தை வென்ற அப்பாடல்களுக்கு முன்னுரையுடன் விளக்கம், பாடல் எழுந்த சூழ்நிலை, கதையின் கருத்தமைவு, காட்சிகளின் தனித்துவம், பண்பாட்டுப் பெருமை, தத்துவம், ஆன்மிகம், உறவுகள், சோகம் ஆகியவற்றினுள்ளே பொதிந்துகிடக்கும் செய்திகளை புதையலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் காவிரிமைந்தன். அவர் காட்டும் பாடல்கள் அனேகமாக நமக்குத் தெரிந்தவை. ஆனால் அதில் நாம் அறிந்திடாத […]

Read more

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இரா. வெங்கடேசன், இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-012-8.html செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது. பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்ததமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் சி.வை. தாமோரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை. தமிழ்ப் பெரியோர்கள் அயராத […]

Read more
1 58 59 60 61 62 84