முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-375-4.html மாற்றுக் கல்விக்கான விதை தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் […]

Read more

அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more

திரை

திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ. பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் […]

Read more

குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ. அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் […]

Read more

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்

கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள், மு. முருகேஷ், அகநி பதிப்பகம், பக். 104, விலை 50ரூ. போதையும் இல்லை. போதனைகளும் இல்லை. தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலானபோது, அறியப்பட்டவர், கவிஞர் மு. முருகேஷ். கடந்த 1990களுக்குப் பின், ஹைக்கூ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார். இவரின், பத்தாவது கவிதை தொகுதி, கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற இடதுசாரி கருத்தியலை, கவிஞர் உள்வாங்கி இருப்பதால், வாசகனை மிரட்டாத வகையில், அவரது கவிதைகள், நம் […]

Read more

வ.உ.சி. நூல் திரட்டு

வ.உ.சி. நூல் திரட்டு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கவிதைகள், தொகுப்பாசிரியர் வீ. அரசு, புலமைப் பித்தன் பதிப்பகம். பொருளும் மனமும் குன்றிடினும் யான் குன்றேன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கவிதைகள், அவருடைய உரை ஆகியவற்றை, சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் வீ. அரசு தொகுத்துள்ள வ.உ.சி. நூல் திரட்டு என்ற நூலை படித்தேன். புலமைப் பித்தன் பதிப்பகம், அந்த நூலை வெளியிட்டுள்ளது. பிறப்பு, வளர்ப்பு, வக்கீல் தொழில், சுதந்திர போராட்டம், கப்பல் கம்பெனி நடத்தியது என, வ.உ.சி. எழுதி, […]

Read more

மறுபடியும்

மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ். ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். தமிழக வரலாற்றில் ஒரு நூற்றாண்டு கலை, அரசியலைப் புரிந்து கொள்வதற்கு, அவரது வாழ்வியல் அனுபவங்களுடன் சொல்லப்படும் இந்நூல் உதவக்கூடும். அவரது இளம்பிராயம், அவர் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற மதுரை பாய்ஸ் கம்பெனி,  அவரது அரசியல் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்பவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பெரியார், அண்ணா, என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கருணாநிதி போன்றோருடனான […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. […]

Read more
1 34 35 36 37 38 57