வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

தமிழ்க் கிறிஸ்துவம்

தமிழ்க் கிறிஸ்துவம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 152, விலை 150ரூ. சைவம், வைணவம், சமணம், புத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புபோல், கிருஸ்துவமும் தமிழ்ப்பணியாற்றி சிறப்பித்துள்ளதை வெளிக்காட்டும் நூல். தமிழில் முதன்முதலாக அச்சு நூல்களை வெளியிட்டது போன்ற தமிழ்ப்பணி இந்நூலில் உள்ளது. தமிழுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. கிருஸ்துவத்தின் தமிழ்ப்பணி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதை நிறுவும் நூல். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

வர்க்கப் புரட்சி

வர்க்கப் புரட்சி, புலவர் தி. குலோத்துங்கன், பிரசாந்த் நூலகம், பக். 120, விலை 80ரூ. பாமர மக்களின் அடிமை நிலை நீங்க, புரட்சியை ஆழப்படுத்தி, மக்களுக்கு அறிவு புகட்டி, போராடினால்தான் நாட்டில் சமத்துவத்தை உருவாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியை அமைக்க முடியும். இத்தகைய கருத்துக்களை முன் வைக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம்,  பக்.216, விலை 200ரூ. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் […]

Read more

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம்

வஞ்சிக்கப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு தமிழகம், சி.க.கருப்பண்ணன், செல்லம்மாள் பதிப்பகம், பக். 190, விலை 95ரூ. பிரிக்க வேண்டும் என்று வாதிப்பதாலேயே பிரிவினை வாதம் என்று எடுத்துக் கொள்ளாமல் பகுத்து ஆராய்ந்தால் இது ஒரு சிந்திக்க வைக்கும் நூல். நூலின் தலைப்பில் வெப்பமும் வேதனையும் இருப்பதுபோல் தோன்றினாலும், தமிழகத்தின் மேற்கு, தெற்கு பகுதி மக்களின் பின்தங்கிய நிலையைப் பல கோணங்களில் ஆராய்ந்து ஆதாரங்களோடு தன் தரப்பு வாதங்களை முன்வைக்கிறார் நூலாசிரியர், முன்னாள் சுங்கத்துறை அதிகாரி, சி.க.கருப்பண்ணன் ஐ.ஆர்.எஸ். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, அந்த மாநிலத்து […]

Read more

டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300. பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது . முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் […]

Read more

வடமொழி வரலாறு

வடமொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. “வடமொழி (சமஸ்கிருதம்) ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர். “தேவபாஷை” என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட வடமொழி, இன்று பேச்சு மொழியாக இல்லை. கோவில்களில் அர்ச்சனை செய்வதற்குப் பயன்படும் மொழியாகவே இருந்து வருகிறது. “திராவிடத்திற்கு தாயாக மட்டுமின்றி, ஆரியத்திற்கு (வடமொழி) மூலமாகவும் தமிழ் விளங்குகிறது” என்று இந்த நூலில் ஆணித்தரமாக விளக்குகிறார் பாவாணர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும், இஸ்லாமிய நிறுவனம், விலை 80ரூ. வரலாற்றில் பொய்யையும், வெறுப்பையும் நிரப்பி திரிக்கப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அத்தகைய செய்திகளில் உள்ள உண்மை நிலையை இந்த நூலில் பேராசிரியர்கள் அருணன், தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மத் ஆகியோர் உரத்துக் கூறியுள்ளனர். அதில் பாபர் மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள உண்மையான தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் உண்மை நிலவரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், இராமு நிலையம், பக். 412, விலை 180ரூ. காந்தி, காமராஜர் போன்ற அரசியல் மேதைகள், பாரதியார், திரு.வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கரிகால் சோழன், சிவாஜி போன்ற நாடாண்டவர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்று பலரின் இளமைக்கால வரலாறு மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: குமுதம்.

Read more

பாரில் அதிசயம் பாரதி

பாரில் அதிசயம் பாரதி. சீனி.விசுவநாதன், பக்.288.  விலை ரூ.200. தமிழில் ஒரு கவிஞரைப் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கிறது என்றால், அது பாரதியாரைப் பற்றித்தான் இருக்கும். ஆயினும், ஒவ்வொரு நூலிலும் அவரைப் பற்றி அறியப்படாத செய்திகள் ஒரு சிலவாவது இடம் பெற்றுக் கொண்டே இருப்பது வியப்பானதுதான். இந்த நூலில் “அறிதொறும் அறியாமை’ சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்நூலை எழுதியிருப்பவர் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து பாரதி ஆய்வில் ஈடுபட்டுவரும் சீனி.விசுவநாதன் என்பதுதான் (பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து 16 தொகுதிகளாக […]

Read more
1 37 38 39 40 41 104