பெரியார் 95

பெரியார் 95. ஞான வள்ளுவன், இனியன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.300. ஈ.வெ.ரா.பெரியாரின் வாழ்க்கை வரலாறு, இந்நூல். அவர் சிறுவயதில் அவர் செய்த குறும்புகள், வாலிப வயதில் அவருக்கிருந்த தீய பழக்கங்கள், அவற்றை அவர் கைவிட்டது, பொறுப்பான வணிகராக, நகராட்சி தலைவராக அவர் செயலாற்றியது, காங்கிரஸில் சேர்ந்தது, மதுவிலக்கை ஆதரித்துப் போராடியது, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுயமரியாதை இயக்கம் கண்டது, மணியம்மையைத் திருமணம் செய்தது, தி.மு.க. உதயமானது, காமராசரை பெரியார் ஆதரித்தது என அவருடைய 95 ஆண்டுகால வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து சென்றதை […]

Read more

தியாக தீபங்கள் பன்னிரெண்டு

தியாக தீபங்கள் பன்னிரெண்டு, கோவை சுந்தரம், விலை 15ரூ. மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், சத்திய மூர்த்தி உள்பட 12 தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். படங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

சிந்துவெளி ரகசியங்கள்

சிந்துவெளி ரகசியங்கள், சு. சீனிவாசன், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. சிந்து சமவெளி நாகரிகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அங்கு புதைந்துபோன நகர அமைப்பைப் பார்க்கும்போது, நாகரிகத்தின் உயர்நிலையில் இருந்த சமூக அமைப்பு வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகிறது என்ற விவரங்களை இந்த நூலில் சு. சீனிவாசன் எளிமையாக எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

மங்கல தேவி கண்ணகி கோட்டம்

மங்கல தேவி கண்ணகி கோட்டம், துரை மலையமான் பதிப்பகம், விலை 60ரூ. நிரபராதியான கோவலன் கொல்லப்பட்டதால் வெகுண்டெழுந்த கண்ணகி, மதுரையை தீக்கிரையாக்கினாள். பிறகு வைகைக்கரை வழியே 14 நாட்கள் நடந்து கேரள எல்லையை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம் சென்றாள். இதுபற்றி துரைமலையமான் விவரமாக புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ள புத்தகம் இது. சிறிய புத்தகமானாலும் சிறந்த புத்தகம். ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

தமிழக வரலாறும் பண்பாடும்

தமிழக வரலாறும் பண்பாடும், டாக்டர் மா.இராசமாணிக்கனார், சாரதா பதிப்பகம், விலை 280ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை விவரித்து டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது. நீண்ட இடைவெளிக்குப்பின், அது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’ எழுதிய நூல். முதல் பகுதியில் ‘விடுதலைப் போரில் வீர முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கான் சாகிபின் கடைசி நாட்கள், திப்பு சுல்தான் கடைசி நாட்கள், முதல் புரட்சி, மலையாள மாப்பிளைமார் புரட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில், ‘முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா’ என்ற தலைப்பில், இந்தியா மற்றும் தென்னகத்தில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் எழுதியுள்ளார். குற்றவாளி கூண்டில் அவுரங்கசீப், ஹைதர் […]

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், பக்.224, விலை 200ரூ. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பான மிகப் பழைமையான ஆவணங்களைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்து, பலவகையான அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். அந்த வகையில் தக்கர் கொள்ளையர்களைப் பற்றிய தனியான தொகுப்பே இந்நூல். பாரசீகத்தில் முஸ்லிம் மதத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இந்தியா வந்த நாடோடி பழங்குடியினரும், இங்குள்ள ஹிந்து பழங்குடியினரும் இணைந்து உருவாக்கியதே இந்த தக்கர் குற்றச் செயல்பாடுகள். இவர்கள் சுமார் 8000 ஆண்டுகளாக இந்தியாவின் வட […]

Read more

ஹிட்லரின் வதைமுகாம்கள்

ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. ஒரு உயிரின் அடிப்படை அம்சம் இனம் என்பது ஹிட்லரின் நம்பிக்கை. வரலாறு என்பது இனங்களுக்கு இடையிலான போராட்டமே தவிர வேறில்லை. எந்த இனம் வலுவானதோ அது தழைத்து நிற்கும். வலு குறைந்தது அழிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்பட வேண்டும். மதம், அறம், தார்மீகம் போன்றவை தடைக்கற்கள். இவையெல்லாம் யூதர்களின் கண்டுபிடிப்புகள் என்பது ஹிட்லரின் கருத்து. மேன்மையான நிலையை அடைய வேண்டுமானால், பலவீனமான இனத்தை மட்டுமல்ல, அது உருவாக்கிய சிந்தனைகளையும் சேர்த்தே அழிக்க வேண்டும் […]

Read more

சுதந்திரச் சுடர்கள்

சுதந்திரச் சுடர்கள், த.ஸ்டாலின் குணசேகரன், விகடன் பிரசுரம், பக். 424, விலை 270ரூ. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டி, சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும் நெஞ்சின் அடியாழத்தில் பதிய வைக்க வேண்டும் என்னும் ஸ்டாலின் குணசேகரின் இந்நூலில் அவரது பதிவுகள் புதுப்புதுச் செய்திகளை உள்ளடக்கமாய் கொண்டுள்ளது. தாகூர், காந்தியடிகளை, ‘மகாத்மா’ என்று (1921) அழைப்பதற்கு முன்பாகவே, 1912ல், மகாத்மா என்று அழைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது (பக். 29).விடுதலைப் போரின் முதல் முழக்கமே தமிழகத்தில் தான் […]

Read more

புதிரா புனிதமா

புதிரா புனிதமா, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. பாலியல் (செக்ஸ்) பற்றிய சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதில் அளித்து பரபரபப்பு உண்டாக்கியவர் டாக்டர் மாத்ருபூதம். அவர் அளித்த பதில்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. புதுமண மக்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   பதினெண் சித்தர்களின் ஞான பாடல்கள், யோக சித்தர் மானோஸ், மணி புத்தக நிலையம், விலை 150ரூ. கருத்துச் சுரங்கமான சித்தர் பாடல்களை ஒரு முறை படிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தெய்வீக சுரங்கம். இதனை […]

Read more
1 35 36 37 38 39 104