குளச்சல் போர்

குளச்சல் போர், எஸ்.ஆன்றனி கிளாரட், என்.டி. தினகர், ஆர். பிரேம்குமார், நகர்வு வெளியீட்டகம், விலை 100ரூ. குளச்சல் போர் என்பது, திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கும் டச்சு கிழக்கிந்திய படைகளுக்கும் இடையே நடந்த மோதல் ஆகும். 1740-ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, டச்சு கப்பல்களில் இருந்து குளச்சல் நகரை நோக்கி குண்டு மழை பொழியத் தொடங்கியதில் இருந்து, குளச்சல் போர் தொடங்கியது. வரலாற்று முக்கியம் பெற்ற இந்தப் போரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இந்த நூலில் உள்ளன. விறுவிறுப்பான நாவலைப் போல […]

Read more

பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்,

பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம், சி.சுப்பிரமணிய பாரதி, பதிப்பாசிரியர்: நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.411, விலை ரூ.150. இந்திய தேசிய காங்கிரஸ் என இன்று அறியப்படும் அமைப்பின் தமிழ்ப் பெயர்தான் பாரத ஜன சபை. மகாகவி 1918, 1920-இல் இரு பாகங்களாக எழுதிய வரலாற்றை நல்லி குப்புசாமி மறுபதிப்பு செய்துள்ளார். 1885-இல் அதன் தோற்றம் முதல் இருபதாண்டு கால வரலாற்றுச் சுருக்கம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தாங்கி வருகிறது இந்தப் புத்தகம். இது மிக அரிய புத்தகம் என்பதில் துளிக்கூட […]

Read more

பர்மாவும் தமிழர்களும்

பர்மாவும் தமிழர்களும், மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், பக்.200, விலை ரூ.180 பர்மாவுடன் தமிழர்களுக்கு நெடிய உறவு இருந்ததுடன், முன்னொரு காலத்தில் அங்கு தமிழர்கள் உயர்நிலையில் வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள். பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்றிருந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை பின்னாளில் தாழ்ந்ததையும் விவரிக்கும் இந்நூல், இன்னொருபுறத்தில் பர்மாவின் வரலாற்றைக் கூறும் நூலாகவும் உள்ளது. 1826 இல் பர்மாவில் தமிழர்கள் குடியேறியதாகச் சொல்லப்பட்ட போதிலும், 1852 ஆம் ஆண்டு கீழை பர்மாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகுதான் அதிக அளவில் தமிழர்கள் பர்மாவில் குடியேறினர். அதற்கு முன்பு […]

Read more

சகலகலா வல்லபன்

சகலகலா வல்லபன், அருள்செல்வன், அபு மீடியாஸ், விலை 180ரூ. மீன்கொடி தேர்வலம் கவிஞர், பாடலாசிரியர், திரை இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் வாய்ந்த எம்.ஜி.வல்லபனைப் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சிஷ்யர் அருள்செல்வன் அவரை நினைவுகூறும் விதமாக கொண்டுவந்துள்ள இத்தொகுப்பில் எம்.ஜி.வல்லபனைப் பற்றிய முழு பரிமாணமும் வாசகர்களுக்குத் தெரியவருகிறது. தமிழ் பத்திரிகை உலகில் இன்றைக்கு மருத்துவம்,  சினிமா, ஜோதிடம், விளையாட்டு என்று தனித்தனியே நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ‘பிலிமாலயா’ என்கிற ஒரே […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்,  தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.140. கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ்வாறு பெற்றார்? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. கார்ல்மார்க்ஸ் அவருடைய இளமைப் பருவத்திலேயே பைபிளின் ஆதியாகமத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது, […]

Read more

த நிட்பிக்கர்ஸ் க்ரானிகிள்

த நிட்பிக்கர்ஸ் க்ரானிகிள், ஃபிளிப் சைட் ஸ்டோரி ஆஃப் இண்டியன் நேஷனல் மூவ்மெண்ட், சதிப்த மித்ரா, ஷுபி பப்ளிகேஷன்ஸ், விலை 599ரூ. வரலாற்றில் புதைந்த ரகசியங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு நிகழ்வுகள் முழுமையான வடிவில் நம் தலைமுறையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்குநெடுக்காக லட்சக்கணக்கான போராட்ட வீரர்களின் தியாகங்கள் இன்னமும் பதிவுசெய்யப்படாமலே இருந்துவருகின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனைகளுக்கு பின்னால் இருந்த, வெளியே தெரியாமலே போன ஒரு சில தகவல்களை மட்டும் நம் முன் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், தொகுப்பு பேரா.சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 500ரூ. மருதநாயகம் என்கிற ஒற்றைப் பெயரின் பின்னே இத்தனை ஆண்டுகளாக கவிழ்ந்துள்ள இருளின் மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள நூலிது. மருதநாயகம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் ஒரு இந்துவா இஸ்லாமியரா விடுதலைப் போராளியா துரோகியா என்கிற பல கேள்விகள் முன்நிற்கின்றன. இப்படியான கேள்விகளுக்கான விடையை அ.மாதவையா, துர்க்காதாஸ், எஸ்.கே.ஸ்வாமி, ந.சஞ்சீவி, நா.வானமாமலை, ந.இராசையாவின் கட்டுரைகள் வழியாகத் தேடிக் கண்டெடுத்துள்ளார் காவ்யா சண்முகசுந்தரம். நன்றி: தி இந்து, 14/10/2017.

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நல்லாசிரியர் சு.குப்புசாமி, குமரன் பதிப்பகம், விலை 70ரூ. ஆங்கிலேயர்க்கு அஞ்சி இந்திய மக்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நாளில், எவர்க்கும் அஞ்சாமல் கடலிலே சொந்தக் கலத்தினை ஓட்டிய வீரத் தமிழர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு. அவர் கப்பல் ஓட்டியதையும் செக்கிழுத்ததையும் மட்டுமே பாடமாகப் படித்தவர்களுக்கு ஆங்கிலேய அடக்குமுறையால் அவரும் அவரது குடும்பமும்பட்ட அத்தனை கஷ்டங்களையும் படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்த நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோகா, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மகாத்மா காந்தியின் பாதம் பதிந்த பூமி, நெல்சன் மய்டேலா பிறந்த மண் என்று பெருமைகள் நிறைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா நோக்கில் சென்று, வரலாற்று நோக்கில் கண்டு, ஆவணமாகப் பதிவு செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் எடுக்கும் புகைப்படங்களைப் போலவே அவரது எழுத்துகளும் மிளர்கின்றன. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்!, மஹீப் சிங் (மூல ஆசிரியர்), தமிழாக்கம் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாடமி, பக். 126, விலை 50ரூ. சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல் வலிமையின் உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் தன் தந்தையை கைதாக்கி, சகோதரர்களை கொன்று தானே, ‘ஆலம்கீர்’ – உலகை வென்றவன் என்ற பட்டத்தை ஒட்டிக் கொண்டு, முகலாய இந்தியாவின் பேரரசனாக, எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவுரங்கசீப் பின்பற்றிய […]

Read more
1 33 34 35 36 37 104