எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி, எம்.எஸ்.எம்.அனஸ், மாற்றுப் பிரதிகள், பக். 184, விலை 120ரூ. ஜமாலுத்தீன் ஆப்கானி வடமேற்கு ஈரானில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சி நடந்து தொழில்கள் வளர்ந்த பின், உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முனைந்தன. அவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளை எதிர்த்தனர். அப்படி எதிர்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் எதிர்த்தனர். இது இஸ்லாமிய சமயத்திலிருந்த பழமைவாதிகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது. […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெளத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், “களப்பிரரும் சமயங்களும்’‘ எனும் கட்டுரையில் சமண, பெளத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள்

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள், முனைவர் கோ. எழில்ஆதிரை, இயல்வெளியீடு, விலை 400ரூ. தமிழகத்து வரலாற்றில் ஈடு இணையற்ற கலைத்தொண்டு ஆற்றிய பெண்மணி செம்பியன்மாதேவியாவார். இவர் கண்டாதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயுமாவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காளத்தி மலை முதல் நாகப்பட்டினம் வரை புகழ்வாய்ந்த பாடல் பெற்ற தலங்களைப் புதியதாகக் கட்டி அவற்றில் எழிலார்ந்த செய்யுத் திருவுருவங்களை வீதி உலாவிற்காக செய்தமைத்து ஏராளமான கொடைகளை அளித்து தனக்கென ஒரு மாபெரும் வரலாற்றையே தோற்றவித்த பெண்மணியாவார். அவர் கோனேரிராசபுரத்தில் செய்த பணிகளை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறது […]

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, பக். 291, விலை 300ரூ. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் களப்பிரரே. பாண்டிய வேந்தர்கள் இல்லை என்றும் களப்பிரர் வந்தேறி இனக்குழுவினர் என்றும், பாண்டியர் இனக்குழுவினரை அகற்றி அரசு உருவாக்கியவர்கள் என்றும், பல ஆதாரங்களுடன் பேசும் நூல். ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

ஜான்சிராணி

ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. ஜான்சிராணி லட்சுமிபாய் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகி, பிரிட்டிஷ் பேரரசை ஆட்டம் காணவைத்த வீரமங்கை. இந்திய புரட்சி இயக்கம் கொண்ட வீரர்களிலேயே துணிச்சல் மிக்க, அச்சமற்ற, மிகச்சிறந்த தலைவியாக விளங்குவதை பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு நூலாசிரியர் விளக்குவது சிறப்பு. அவரைப்போன்று ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் அந்நியரிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் நாட்டினைக் காக்க வீராங்கனைகளாக வீறுகொண்டு எழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், […]

Read more

தமிழ் நாட்டு வரலாறு

தமிழ் நாட்டு வரலாறு, பா. இறையரசன், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 250ரூ. மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது. தொன்மையும் பழைமையும் உடைய தமிழ்நாட்டு வரலாற்றை அறிய […]

Read more

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக்.312, விலை ரூ.235. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த அலெக்சாண்டரின் வாழ்க்கைப் […]

Read more

இந்தியா பாகிஸ்தான் போர்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள், துவாரகை தலைவன், கிழக்கு பதிப்பகம், பக். 317, விலை 250ரூ. பொது வாசகர்கள் விரும்பி வாசிக்கும்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் குறித்த புத்தகம் வருவது வரவேற்கத்தக்கது. மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய இரு நாடுகள் அல்லது இரு சமூகங்கள், நம்பவே முடியாத அளவுக்குப் பகை கொள்வது இந்தியா – பாகிஸ்தானுக்கு மட்டுமே உரித்தான விஷயமல்ல. இராக்-ஈரான், இன்றைய இஸ்ரேல் பகுதி போன்ற இடங்களிலும் நெடுங்காலமாகப் […]

Read more
1 41 42 43 44 45 104