முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

புதிய முகம்

புதிய முகம், இராம இளங்கோவன், சுலோசனா பதிப்பகம், பக். 204, விலை 130ரூ. இனம், மொழி, நாட்டுணர்வு, மாந்தர் நேயம், வீடு, மனைவி, மக்கள், காதல், பெண்மை போன்றவற்றை பாடுபொருளாய் யாத்த கவிதைகளின் அணிவகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- விந்தன் எனும் ஓர் ஆளுமை, கோ. ஜனார்த்தனன்(தொகுப்பு), விந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 272, விலை 200ரூ. கோவிந்தன் என்னும் விந்தன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். விந்தனின் படைப்புகளை முன்வைத்து விந்தன் ஆக்கங்கள் எனும் கருத்தரங்கம் நடந்தது. […]

Read more

கவிதை ஓர் ஆராதனை

கவிதை ஓர் ஆராதனை, கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 176, விலை 125ரூ. கவிதை மனிதனை ஒழுங்கானவனாக்குகிறது. அழகனாக்குகிறது. கவிதை அழகை ஆராதிக்கிறது. அதாவது ஆண்டவனை ஆராதிக்கிறது. இப்படி மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆராதனை செய்யும் கவிதைகளின் தொகுப்பு கவிக்கோ வரிகளில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- டாக்டர் போத்தியின் கவிதைகள், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. கால்நடை மருத்தவரான போத்தி, பல்வேறு காலங்களில் தமிழரசு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய […]

Read more

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள்

சங்க அக இலக்கியங்களில் வாயில் துறைப்பாடல்கள், முனைவர் மா. அமுதா, காவ்யா, விலை 320ரூ. இந்நூல் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நூல். கணவன் – மனைவியிடையே நிகழும் அன்பு வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது அக இலக்கியங்கள். இவ்விருவர்களிடையே உண்டாகும் சிறு சிறு உணர்வு மோதல்களைக் களைந்து இணைத்து வைக்க வருபவர்கள் வாயில்கள்’ தூதுவர்களான இவர்கள் உறவின் உன்னதத்தை எடுத்துரைத்து இருவரையும் இணைத்து வைக்கவே முற்படுவர். உளச் சிக்கல்களை தீர்த்திட உதவும் வாயில்களைப் பற்றிய உளவியல் ஆய்வை, மிகவும் சுவாரஸ்யமாக செய்திருக்கிறார் முனைவர் மா. […]

Read more

திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1)

திரைக்கலைஞர்களும் அரிய தகவல்களும்(தொகுதி 1), கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ சினிமா நடிகர் – நடிகைகள் பற்றிய முழு விவரத்தையும் இந்நூலில் கொடுத்துள்ளார் ஆசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து. நடிகர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பாடிய பாட்டுகள், இசை அமைத்தவர்கள், டைரக்ட் செய்தவர்கள், உடன் நடித்தவர்கள் முதலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. விவரங்களை சேகரிக்க நூலாசிரியர் பட்ட சிரமங்கள் பக்கத்துக்கு பக்கம் காண முடிகிறது. சினிமா ரசிகர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/3/2016. சப்தரிஷி நாடி சோதிட […]

Read more

கலாங்காதிரு பெண்ணே

கலாங்காதிரு பெண்ணே, விகடன் பிரசுரம், விலை 105ரூ. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் கூறுகின்ற புத்தகம் இது. குறிப்பாக “தாய்மை” என்ற பகுதியில் பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பிறப்பது வரை எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது விரிவாக விவரிக்கப்படுகிறது. தற்காலத்தில் ‘சிசேரியன்’ ஆபரேஷன் செய்துகொள்வதை பல பெண்கள் விரும்புகிறார்கள். அந்த ஆபரேஷனை எப்போது செய்துகொள்ளலாம், எப்போது செய்து கொள்ளக் கூடாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் படித்துத் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. […]

Read more

ஜப்பானில் அருணகிரி

ஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கில் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் […]

Read more

தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ. சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய […]

Read more

குமரப்பா கலைக்களஞ்சியம்

குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு. உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய […]

Read more

கம்பதாசன்

கம்பதாசன், சிற்பி. பாலசுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 144, விலை 50ரூ. கண்கள் குளமாகும் கம்பதாசனின் வாழ்க்கை! உணர்வின் கூர்மையும், கலை வடிக்கும் கனித்திறனும் கொண்டிருந்த கம்பதாசன், சிறுகதை, நாடகம், திரைப்பாடல்கள், கவிதை, குறுங்காவியம் என, பன்முகம் கொண்ட படைப்பாளி. புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத்தக்க கற்பனைகளும் புதிய புதிய உவமைகள், உருவங்கள், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமைதான் கம்பதாசன். புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில், எட்டாம் வகுப்பைத் தாண்டாத, ‘அப்பாவு’ எனும் இயற்பெயர் கொண்ட கம்பதாசன், பெற்றோருக்கு தெரியாமல் நாடக தொழிலில் ஈடுபட்டு, […]

Read more
1 505 506 507 508 509 841