குக்கூவென

குக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விடியலின் முகவரிகள்

விடியலின் முகவரிகள், கவிஞர் செல்லம் ரகு, அகநி, பக். 96, விலை 120ரூ. இன்றைக்கு பூமியே நெகிழிப் பையென சுருங்கிப் போய்விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நெகிழிப் பை இல்லாமல் எதுவுமேயில்லை என்கிற நிலை உண்டாகி விட்டது. ‘மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற மாடுகள் மாலையில் திரும்பின நெகிழிப்பை மென்றபடி’ என்ற கவிதை வரிகளில், நம்மைக் கொல்லும் நெகிழிப் பையின் அபாயம் குறித்து ஆசிரியர் கூறியுள்ளது, நெஞ்சத்தை பதற வைக்கிறது. நன்றி: தினமலர், 22/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027093.html இந்தப் புத்தகத்தை […]

Read more

எங்கிருந்து தொடங்குவது

எங்கிருந்து தொடங்குவது, வெண்ணிலா, அகநி, விலை 100ரூ. ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்கும் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளை வளர்க்கும் விதம், குடும்பத்துக்குள் சாதியின் நிலை, பாலின வேலைப் பாகுபாடுகள், உறவினர்களுக்காக வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளும் இயலாமை ஆகியவை தனித்தனி அம்சங்களாக இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், மருத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் பொழுதுபோன்னு நாடகங்கள் அல்ல. ஒவ்வொரு நோயும் எதனால் வருகின்றன, அதற்கு சிகிச்சை என்ன, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை உணர்த்துகின்றன. எனவே, இதை ஒரு நாடக நூல் என்று கூறுவதைவிட, மருத்துவக் களஞ்சியம் என்று கூறுவதே பொருந்தும். மிகப் பயனுள்ள நூல். நன்றி: […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி, பக். 392, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் சுயசரிதை நூல் இது. தமிழக நடிகர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களால் எழுதப்பட்டவை அல்லது மற்றவர்கள் எழுதியவை. எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதை மட்டும்தான், அவராலேயே எழுதப்பட்டு வெளியாகி உள்ளது. தமிழக திரையுலகை ஆட்சி செய்தவர்களில் பெரும்பான்மையோர், தென் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்களில் சேடப்பட்டியை சேர்ந்த ராஜந்திரன் முதன்மையானவர். கடந்த கால மற்றும் நிகழ்கால தமிழகத்தின் பிரபலங்களின் வாழ்வின் […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன், அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 400, விலை 300ரூ. இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் கி.ஆ.பே., அகநி பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழ்நாட்டு வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு என, அறிஞர்களால் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும், பழந்தமிழ் நூல்களும் இவ்வரலாறுகளுக்கு ஆதாரமாக இருப்பவை. பாண்டியர் வரலாறு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தவங்கி கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள, கால அளவு கொண்ட […]

Read more

இலக்கிய உதயம்

இலக்கிய உதயம், பேராசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை, பூம்புகார் பதிப்பகம், பக். 464, விலை 250ரூ. இலக்கிய ஆராய்ச்சி ஆர்வலர்களுக்குக் கிடைத்த அறிவுக் களஞ்சியப் பேழையாக அமைந்துள்ள இந்நூல், எல்லாருக்கும் பயன்தரும் நல்ல நூல். எகிப்து, பாபிலோனியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம் ஆகிய பிற நாட்டு ஆதி இலக்கியங்களையும், நம் நாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள பெருந்துணையாய் அமைந்துள்ளது. வேதங்கள், புராணங்கள், பவுத்த இலக்கியங்கள் முதல் அனைத்தையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள இயல்கின்றது. இலக்கியங்களில் ஒப்பியல் ஒருமைப்பாட்டைக் காண்கிறார் நூலாசிரியர். மகாபாரதக் கதையை […]

Read more
1 2