இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.127; ரூ.50;  சாகித்திய அகாதெமியின் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் தமிழின் நவீன எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய இந்த நூல், அவருடைய வாழ்க்கை, எழுத்து குறித்த ஒரு சிறந்த அறிமுகம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அசோகமித்திரனின் அருகிலிருந்து அவரது எழுத்தையும் வாழ்க்கையையும் எழுத்தாளராகவும் நண்பராகவும் கண்டுள்ள சா.கந்தசாமி, இந்நூலை எழுதியிருப்பது மிகப் பொருத்தம். அசோகமித்திரன் எழுத்துலகம் தனித்துவமானது. சிறுகதை, நாவல் என புனைகதை வடிவ எழுத்தில் அவர் பெரும் வெற்றி பெற்றவர் என்பதில் […]

Read more

இந்தியா 1948

இந்தியா 1948, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 120ரூ. 1948ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதைதான் நாவல். சென்னையிலிருந்து குடும்ப வறுமையால் வேலைக்காக மும்பைக்குக் குடிபெயரும் பாலக்காடு குடும்பத்தின் நாயகன் சுந்தர், கார் கம்பெனியில் வேலை செய்கிறார். கூடுதல் பயிற்சிக்காக விடுதலைக்கு முன்பே அமெரிக்கா செல்லும் அவரை, அங்கு படிக்கும் (பால்ய விதவை) குஜராத்தி பெண் சுயவரம் செய்துகொள்கிறாள். அந்நாளில் இரண்டாவது திருமணம் குற்றமல்ல. இருப்பினும் அந்த உண்மையை குடும்பத்தில் வெளியிடத் திணறுவதும், அதனிடையே குடும்பத்தின் சுக […]

Read more

காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், அசோகமித்திரன், தொகுப்பு யுகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 366, விலை 300ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-368-6.html சில கதைகளைக் கேட்கும்போதும், வாசிக்கும்போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு. தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என […]

Read more

நூறு நாள் நாடகம்

நூறு நாள் நாடகம், அசோகமித்திரன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 208, விலை 125ரூ. To buy this Tamil Book online – www.nhm.in/shop/100-00-0001-713-0.html 1970-71 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. அக்கால அரசியல் இலக்கியம், உலக, உள்ளூர் நிகழ்வுகள் என எல்லாவற்றைப் பற்றியும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் அன்றைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நூலாசிரியருக்கேயுரிய மென்மையான நகைச்சுவை படிப்பதைச் […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 320, விலை 240ரூ. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சினிமா தயாரிப்பு கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்த இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அசோகமித்திரன், கட்டுரையொன்றில் அன்றைய முன்னணி ஆண் நட்சத்திரங்களுக்கு எந்தவிதத்திலும் கஞைர்களாக நடிகைகள் தாழ்ந்து போய்விடவில்லை. இன்றைய தமிழ் படங்களின் கதாநாயகிகள் எண்ஜான் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர் என்ற கருத்து இன்று பலரிடமும் […]

Read more

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள், அசோகமித்திரன், நந்றிணை பதிப்பகம், பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-1.html   மகத்தான நாவல் வரிசையிலும், அசோகமித்திரனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இந்த நாவல் வெளிவந்துள்ளது. சினிமா தொழிலில் தொடர்புள்ளவர்கள் பற்றிய நாவல் இது. இருந்தாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் லௌதீக, லோகாயதமான வாழ்க்கை சம்வங்களையே முன் வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. நா.பா. நடத்திய தீபம் இலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்த, இந்த நாவல் பரவலாக, இலக்கிய அன்பர்களால் அதிகம் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more