உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வனமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளர்களுள் ஓஷோ ரஜனீஷுக்கு முக்கியமான இடம் உண்டு. பாரத ஞானப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகளில் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் பல இப்போது தொடர்ந்து நூல் வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு பக்தர்களிடையே ஓஷோ உரையாடியதன் சில பகுதிகள் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே விஸ்டம் ஆப் தி சேண்ட் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. அதுவே எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டு உன்னால் கடக்க […]

Read more

112 ரகசியங்கள்

112 ரகசியங்கள், ஓஷோ, ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம். சோர்வை நீக்கி உற்சாகம் தரும் 112 ரகசியங்கள் ஓஷோவின் 112 ரகசியங்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. தியான வழிமுறைகளை, இந்த நூல் சொல்கிறது. சாதாரண மனிதனுக்கு, அவன் மொழியில் புரியும் வகையில், மிகுந்த ஆளுமையுடன் ஓஷோ எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மன உளைச்சல், உடல் வலி, சோர்வு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், எவ்வித வழிகாட்டுதலும் இல்லாமல், ஓஷோ […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ. தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து […]

Read more

அஷ்டாவக்ர மகாகீதை

அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ. அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-359-0.html ‘கல்லூரி கால் தடங்கள், இக்கணம் தேவை சிக்கனம், பணவீக்கம் ஒரு பார்வை, வேளாண்மை அன்றும் இன்றும் முதல் தலைமுறை, இளமையென்னும் தென்றல் காற்று போன்ற 39 தலைப்புகளில் வெ. இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தோல்வியையும், துயரத்தையும் உறவுகளாக மாற்றிக் கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள். சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம், வெற்றி என்பது நம் மீது எறிந்த […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, தமிழில சுதாங்கன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 254, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html இன்றைய உலகின் மனிதனின் தலையாய்ப் பிரச்னையான மனஅழுத்தத்துக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதற்கு எளியமுறை தியானங்கள் மூலம் விளக்கமளிக்கிறது இந்த நூல். உங்களை நீங்களே மன ரீதியாக சோதித்துக் கொள்ளுங்கள், இதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது உங்களுக்கு எது எளிதானதோ அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் பிரச்னைக்குத் தீர்வு. இதற்காக உடலை வருத்திக்கொண்டு, […]

Read more

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4, (விஞ்ஞானி பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்), ஓஷோ, தமிழில் தியான் சித்தார்த், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 624, விலை 300ரூ. தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள தந்த்ரா உலகம் என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான் பைரவ் தந்த்ரா என்ற வார்த்தைகளின் பொருள் உணர்வு தாண்டிப் போகும் யுக்தி. விஞ்ஞான் என்றால் உணர்வு. பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. தந்த்ரா என்றால் யுக்தி, வழி, […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம்

ரகசியமாய் ஒரு ரகசியம், ஓஷோ, தமிழில் சிவாமி சியாமானந்த், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 992, விலை 600ரூ. ஓஷோ, தனது பக்தர்களிடம் ஆற்றிய உரைகயின் தொகுப்பாக வெளிவந்துள்ள மற்றும் ஒரு நூல். தியானம் செய்வது எப்படி? துறவறம் என்பது அவசியம்தானா? காமம் என்றால் என்ன? சுய இன்பம் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதானா? என்பது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை அப்பட்டமாக அலசி இருக்கிறார். இடையிடையே ருசிகரமான சிறுகதைகள், புத்தர், போதிதர்மர், குரு லூத் சூ போன்றவர்களின் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கூறி படிக்க ஆவலைத் தூண்டுகிறார். ஓஷோவே […]

Read more

ஒளிந்திருப்பது ஒன்றல்ல

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html உடலே மர்மம் இன்றைய எந்திர வாழ்வில் சாமானியனுக்கும் சரி, தொழில் சாம்ராஜ்யங்களைத் தாங்கி நிற்கும் கோடீஸ்வரனுக்கும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பளு மன அழுத்தம். வயிற்றுக்கான வேலை, குடும்ப அச்சின் சக்கரத்தை முன்நகர்த்துவது, இவற்றைத் தாண்டி சமூகம் சொடுக்கும் சாட்டை அடிகள் போன்ற சவால்களால் இவர்களுக்கு நன்றாக தூக்கம், ஓய்வு கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம் துக்கம்தான். இந்த மன அழுத்ததிலிருந்து […]

Read more

அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ. இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. […]

Read more
1 2 3 4