இந்தியப் பயணக் கடிதங்கள்
இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. […]
Read more