உபரி வடைகளின் நகரம்

உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு). அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், சந்தியா பதிப்பகம்,புதிய எண்-77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கம் 104, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-561-3.html தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவை, அடித்தட்டு மக்களின் நோக்கில் ஆய்வு செய்துவருபவர் பேராசிரியர் தொ. பரமசிவன். மிகக் கறாராக நூல் பிடித்து வரலாற்றை அணுகாமல் நெகிழ்ச்சிப் போக்கோடு பன்மைத்தன்மையைப் பேணுவது தொ. பரமசிவத்தின் சிறப்பு. அதனாலேயே தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவராலும் கொண்டாடப்படுபவராக […]

Read more

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள், தொகுப்பாசிரியர் ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-1.html ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள், தினமணி, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன், பாரததேவி, ஹனுமான், ஜெயபாரதி, சிவாஜி, எழுத்து, பி.எஸ். ராமையா மணி மலர் உள்ளிட்டவற்றில் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதிய முன்னுரைகள் வ.ரா., பி.வி. சுப்பிரமணியன் நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள் மற்றும் ந.பிச்சமூர்த்தி எழுத்து செல்லப்பாவுக்கும், சு. சங்கரசுப்பிரமணியனுக்கும் வழங்கிய முழுநீளப் பேட்டி […]

Read more

ம.பொ.சி.யின் தமிழன் குரல்

ம.பொ.சி.யின் தமிழன் குரல், தொகுப்பு-தி.பரமேசுவரி, சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, 3 தெகுதிகள் சேர்த்து விலை 420ரூ. தமிழக எல்லைப் பரப்பைக் காத்த தலைமகன், ம.பொ.சிவஞானம் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளை ஒருபுறம் கேரளத்தவரும், இன்னொரு புறம் ஆந்திரத்தவரும் எடுத்துக் கொள்ளத் துடித்தபோது பதற்றம் ஏற்பட்டது. ம.பொ.சி.க்கு மட்டும்தான். எங்கு இருந்தால் என்ன, இந்தியாவுக்குள்தானே இருக்கப்போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் இதையெல்லாம் சேர்த்துத்தானே நாங்கள் திராவிட நாடு கேட்கிறோம் என்று திராவிட இயக்கத்தவரும் காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்தபோது […]

Read more

பேறு பெற்ற பெண்மணிகள்

பேறு பெற்ற பெண்மணிகள், அதிரை அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 160, விலை 65ரூ. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்ற கருத்தை மறுக்கிறது இந்த நூல். பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு விடுதலையும் உரிமையும் வழங்குகின்றது (பக்.8). இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்? வரலாற்றில் போர்கள் முடிந்ததும் பல ஆண்கள் மடிந்துபோவர். அந்தப் பெண்களுக்கு வாழ்வு தரவே ஒரு ஆண் பல பெண்களை மணக்கிறார்கள் என்று இந்த நூல் பதில் […]

Read more

மங்களம் – சிகரம்

மங்களம் – சிகரம், ச.செந்தில் நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-014-0.html சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குறைஞராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நாவல் இது. கணவன் மீது ஜீவனாம்ச வழக்குத் தொடுப்பதற்காக வரும் மங்களத்தின் கதைதான் இந்நாவல். ஆசிரியரே சொல்வது போல, இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் அவர் வழக்குரைஞர் தொழிலில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்த நாவல் மங்களம் என்ற பெண்ணின் அவலமிக்க வாவைச் […]

Read more

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும், ராஜுமுருகன், விகடன் பதிப்பகம், சென்னை, பக். 504, விலை 215ரூ. விகடனில் தொடராக வந்தது. அதில் 70 வாரத் தொடர்கள் மட்டும் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஒரு திரைப்பட இயக்குநரின் நட்பும், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டுகிறார் ராஜுமுருகன். வண்ணதாசன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய ஈரத் தமிழ்நடை ராஜுமுருகன் எழுதில் எல்லாப் பக்கங்களிலும். புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். வாழ்க்கையை அவரது ஜன்னலில் அவரோடு நாமும் பார்த்துக் கொண்டிருப்போம். கட்டித் […]

Read more

மூன்றாம் பாலின் முகம்

மூன்றாம் பாலின் முகம், பிரியா பாபு, சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 108, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-164-4.html அரவாணி எழுதிய முதல் தமிழ்நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது ப்ரியா பாபு எழுதியுள்ள மூன்றாம் பாலின் முகம் என்ற நூல். இந்த நாவலின் மையக் கதாபாத்திரங்கள் ரமேஷ் என்ற இளைஞன் (பின்னர் பாரதி என்ற பெண்ணாக உருவெடுக்கிறாள்). அவனது தாய் பார்வதி, சமூக சேவகி கண்மணி […]

Read more

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?, ச. ராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை – 83, பக்கம். 200, ரூ. 130. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-4.html இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி […]

Read more

பயங்கரவாதம்

பயங்கரவாதம், பி. ராமன், தமிழில்-ஜே.கே. ராஜசேகரன்கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை 17, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html இன்றைய பயங்கரவாதம் நேற்றைய பயங்கரவாதத்தை விட வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் என்கிறார், புத்தக ஆசிரியர் பி. ராமன். ஆங்கிலத்தில் வந்த இப்புத்தகத்தை பயங்கரவாதம் நேற்று இன்று நாளை என்ற பெயரில் ஜே.கே. ராஜசேகரன் மொழிபெயர்த்து இருக்கிறார். எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள், […]

Read more
1 8 9 10 11