அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 175ரூ. கோபுரங்களின் வழியே வரலாறு ‘கவிதையின் உட்பொருளாகக் கவிஞரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் காவியங்களைக் கற்பதால் என்ன பலன்’ என்று சொன்னார் மஹாகவி பாரதியார். ஒரே நாளில் ஒன்பது கோவில்கள், பத்துவிதமான பரிகார ஸ்தலங்கள், முக்கோண தரிசனம், நாற்கோணப் பயணம் என்கிற ரீதியில், இப்போது விளம்பரப்படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி இறங்குவோருக்கும் பாரதியின் வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம். எந்தத் தலத்தையும் முழுமையாகப் […]

Read more

நட்பை வழிபடுவோம் நாம்

நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ. நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் […]

Read more

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ. சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, […]

Read more

அவன் அவள் அன்லிமிடெட்

அவன் அவள் அன்லிமிடெட், கோகுலவாச நவநீதன், சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஆண் பெண் இடையிலான குணநல வேறுபாடுகளை, நகைச்சுவைப்பட விளம்புகிறது இந்த நூல். குங்குமம் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது வெளியாகி உள்ளது. இவள் மாறாமல் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு ஆணும், இவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருமே ஏமாறுகின்றனர். பெண்களுக்கு பிடித்த சிறந்த ஆண் என்பவன்,அவர்களின் பிறந்த நாளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற புன்னகைக்க வைக்கும் […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. ராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல். ராஜேந்திர நோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன். ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார். இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், […]

Read more

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. உணர்வுகளை வெளிப்படுத்த, யோசனை சொல்ல, ஆறுதல் தர, அறிவுரை தந்து நெறிப்படுத்த, விமர்சனம் செய்து எச்சரிக்க, பிரச்சினையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தர, சொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லை. கோபம், குமுறல், ஆற்றாமை, கழிவிரக்கம், வலி, சலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் மனக்கண்ணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015. […]

Read more
1 2 3 4 5