இராகவதம் 1

இராகவதம் 1, ரா. இராகவையங்கார் ஆக்கங்கள், தொகுப்பும் பதிப்பும்- கா. அய்யப்பன், காவ்யா, சென்னை, பக். 1040, விலை 1000ரூ. மதுரைத் தமிழ்ச்சங்க சமஸ்தான வித்துவானாக இருந்தவர் ரா.இரா. தமிழ் ஆய்வு வரலாற்றில் தமக்கென ஒரு தனி இடத்தைப் படித்தவர். செந்தமிழ்ப் பத்திரிகையின் முதல் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது, அவ்விதழில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செந்தமிழ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இதில் செந்தமிழ் இதழிலும், கலைமகள் மற்றும் விழா மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் […]

Read more

கல்குதிரை

கல்குதிரை, இளவேனிற்கால இதழ், எழுத்தாளர் கோணங்கி,  கோவில்பட்டி 628502. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. மணிக்கொடி, எழுத்து, சரஸ்வதி போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெகுஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதாரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது. […]

Read more

சட்டம் உன் கையில்

சட்டம் உன் கையில், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டு தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் சட்டம் உன் கையில் புத்தகம். மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப்போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, […]

Read more

கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004. நாடி நரம்புகளில் எல்லாம் மகாபாரதமும், ராமாயணமும், பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் ஊறிக்கிடக்கும் ஒருவர் விறுவிறுப்பான தொடர்கதை எழுதத் தொடங்கினால் எப்படி இருக்கும்? கர்ணனின் கவசம் என்ற நாவல் இதற்குப் பதிலாக இருக்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் ஓட்டம் சரித்திரத்தில், பூகோளத்தில், புராணத்தில், சொர்க்கத்தில், வைகுண்டத்தில் என எங்கெங்கு மனிதன் யோசிக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் சஞ்சரித்து கடைசியில் கபாடபுரத்தில் முடிவடைகிறது. முடிவடைகிறது என்று சொல்வது தவறு. மீண்டும் […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ. வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 100ரூ. காந்திக் கணக்கு என்னும் இந்த நூல் வ.உ.சி.க்கும் காந்தியடிகளுக்கும் இடையே நடந்த கணக்கு வழக்குப் போராட்டத்தையே விவரிக்கிறது. காந்தியடிகளின் மறுபக்கம் பற்றி பல வினாக்கள் தொடுக்கிறார் நூலாசிரியர் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. வ.உ.சி. வரலாற்று நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர். காந்திக் கணக்கு நூலிலும் பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். காமராஜர் நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம், காமராஜருக்காக வழக்காடிய வ.உ.சி. காந்தியின் அஸ்தியை தலையில் சுமந்த […]

Read more
1 3 4 5