ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]

Read more

மரக்கலம்

மரக்கலம், ஸ்ரீமொழி வெங்கடேஷ், ஓவியம் காணிக்கைராஜ், ஸ்ரீமொழி பப்ளிகேஷன், விலை 200ரூ. வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டை துறை முகத்தில் கால் வைத்த நாளே, இந்திய மண்ணின் மீதான ஆதிக்கத்தின் துவக்கம் என தெளிவுபடுத்துகிறது இந்நூல். போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மண்ணை கைக்கொள்ள சுமார் 102 ஆண்டுகள் போராடி, கள்ளிக்கோட்டை மக்களை முழுமையாய் வெல்ல முடியாமல் கோவாவை தங்கள் ஆதிக்கத்திற்கு நிலை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பியவர்கள். இவர்களுக்கு பின்புதான் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்க வரலாற்றை துவக்குகிறது. அந்நியர்களுக்கு எதிரான கள்ளிக்கோட்டை மன்னர் மானவர்மர் சாமுத்திரியின் வலுவான எதிர்ப்பின் கூர்மை […]

Read more

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி, புதிய புத்தக உலகம், விலை 120ரூ. காசி யாத்திரை என்பது இந்துக்கள் வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக உள்ளது. காசி யாத்திரை என்பது காசி – ராமேஸ்வரம் – கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாக இருக்கிறது. இந்த நூலில் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இந்த நூலை லட்சமி சுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார். புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ள இனிய நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சிந்தனையின் சிற்பங்கள்

சிந்தனையின் சிற்பங்கள், கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம், பூம்புகார் பதிப்பகம், விலை 80ரூ. சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார் கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம். அந்தக் கவிதைகள், அழகிய சிற்பங்கள் போல நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 கவிதைகள், “இனப்பற்றும், மொழிப்பற்றும், இந்நாட்டுப் பற்றும் விட்டு, இளைஞர் எல்லாம் வெளிநாட்டில் இடர்ப்படுதல் யார் குற்றம்?” என்று கேட்டு, தம் சிந்தனையைத் தூண்டுகிறார். கவிதைகள் உண்மையில் அழகிய சிற்பங்கள்தான். இந்த நூலில், ஆசிரியரின் 4 சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, “பள்ளிப்படைச் […]

Read more

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும்

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும், கீ.வீரமணி, வெளியீடு திராவிடர் கழகம், விலை 70ரூ. நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும், 90ஆம் ஆண்டு காணும் சுயமரியாதை இயக்கமும் சாதித்து என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றதால் பிராமணர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு […]

Read more

முதல் மனித வெடிகுண்டு

முதல் மனித வெடிகுண்டு, பி. சந்திரசேகரன், குமுதம் பு(து)த்தகம், விலை 580ரூ. மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை ஒரு பெண் கொலை செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது தொடர்பான வழக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு அதிக பரபரப்புக்குள்ளான வழக்காகும். அப்படிப்பட்ட வழக்கில், பிரபல தடவியல் நிபுணரான பி. சந்திரசேகரன், அறிவியல் ரீதியாக, தடயவியல் முறைப்படி துப்பு துலக்கி உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதை சுற்றிப் பின்னப்பட்ட […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 230ரூ. உணவு சம்பந்தமான விரிவான புத்தகம் இது. ஆனால் உணவு தயாரிப்பது எப்படி என்ற சமையல் புத்தகம் அல்ல. ஒவ்வொரு உணவின் ரிஷி மூலம் என்ன? அது எப்படி எங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிரபலம் ஆனது என்பது பற்றிய வியப்பான செய்திகளை ருசிகரமான முறையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அல்வா, கொழுக்கட்டை, சாக்லேட், பலா போன்றவை பற்றிய அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/6/2016.   —- பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள், அரிமா கே.மூர்த்தி, […]

Read more

இமயமலைச் சாரலிலே

இமயமலைச் சாரலிலே, டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. பொதுவாக பயண நூல் என்றால், அது பயணித்தவரின் அனுபவங்களின் வடிகாலாக மட்டுமே இருக்கும். ஆனால் “நாடக மன்னர்”அவ்வை டி. சண்முகத்தின் மகனான டி.கே.எஸ். கலைவாணன், அந்த மரபை மீறி தனது பயணத்தின் அனுபவங்களால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் இதனை ஆக்கி இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார் போன்ற இடங்களுக்குச் சென்ற அவர், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் […]

Read more

ஜுலயஸ் சீசர்

ஜுலயஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 110ரூ. உலகை வசப்படுத்திய ஒரு மாவீரனின் கதை இது. சீசரின் காதல், வீரம், தலைமைப்பண்பு, போர்த்திறன், அரசியல், உத்திகள், மனிதநேயம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நூலில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/6/2016.   —– திருக்குறள் அகர வரிசையில் தெளிவுரை, வெளியீடு பொ.கிருஷ்ணன், விலை 100ரூ. அகர வரிசையை முதன்மைப்படுத்தி திருக்குறளை மனப்பாடம் செய்ய ஏற்ற நூலாக உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் பானுமதி கிருஷ்ணன். அகரத்தில் தொடங்கும் […]

Read more

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பல்வேறு நூல்களை நெல்லை கவிநேசன் எழுதியுள்ளார். ஆனால் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்காக தனியாக விரிவான நூல் தமிழில் வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையிலும், ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வுக்கான முழுமையான தயாரிப்புக்கு உதவும் வகையிலும் ‘ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு’ என்னும் இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். இது தமிழில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு பற்றித் தெரிந்து கொள்ளவும், பாடத்திட்டம் பற்றி புரிந்து கொள்ளவும், முந்தைய […]

Read more
1 91 92 93 94 95 223