வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல், மிக இயல்பான முறையில் மிக இனிமையான புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். இலக்கணம் ஒரு மொழிக்கு ஆணி வேர் போல அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே என சிந்தித்ததின் விளைவாக, செய்யும் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், […]

Read more

கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

கலாம் அடிச்சுவட்டில்,

கலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ?, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]

Read more

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், விலை 250ரூ. முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்ற ஊர் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்து மீனவர்கள், மீன் பிடிக்கும் கலையில் வல்லவர்கள். அந்த மாவட்டத்தின் கடலோர கிழக்கு எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கு எல்லையான நீரோடி கிராமம் வரையுள்ள 45 கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் அந்தந்த ஊர்களுக்கே சென்று ஆராய்ந்து ஓர் அழகிய ஆய்வு நூலை முனைவர் ஜே. அருள்தாசன் […]

Read more

நூறு வயது வாழ நூறு உணவுகள்

நூறு வயது வாழ நூறு உணவுகள், ஆர். வி. பதி. அழகு பதிப்பகம், விலை 140ரூ. நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழங்கள், கீரைவகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற நூறு வகையான உணவு முறைகளையும், அதன் பயன்பாடுகளையும் இந்த நூலில் ஆர். வி. பதி எடுத்துக்கூறியுள்ளார். நோய்கள் வராமல் தடுக்கவும், உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —-   […]

Read more

நபிமொழிக் களஞ்சியம்

நபிமொழிக் களஞ்சியம்,  மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி, மின்னத் பப்ளிஷர்ஸ், விலை 500ரூ. இஸ்லாமிய நெறிமுறையில் திருக்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ஹதீஸ் என்றால் உரை, உரையாடல், புதிய செய்தி எனப்பொருள்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் 2 ஆயிரம் ‘ஹதீஸ்’களைத் தேர்ந்தொடுத்து, இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதை ‘நபிமொழி களஞ்சியம்’ என்ற பெயரில் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி மொழிபெயர்த்தார். அது […]

Read more

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ. பெரியார் பற்றிய சிறந்த நூல் பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன. பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற […]

Read more
1 89 90 91 92 93 223