சொற்களின் மீது எனது நிழல்

சொற்களின் மீது எனது நிழல், சைலபதி, நிவேதிதா பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. ‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு காணும் தந்தை, சிறு வயதில் வாழ்க்கை இழக்கும் பெண், முதுமையால் நிராகரிக்கப்படும் முதியவர் என, இக்கதையில் வருவோர் எல்லாரும், நமக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர். நடுத்தர மனிதர்களின் கனவுகளை, எளிமையாய் யதார்த்த பின்னணியில் இந்நூல் விளக்குகிறது. சைலபதியின் கதைகள், இனிமையாக துவங்கி, அதிர்ச்சியாகவே முடிவடைகின்றன. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. சென்னை நகரின் வரலாறு, பொருளாதார மந்த நிலை, சமணர்கள் குகை, மெட்ரோ நகரத்தின் அல்ட்ரா மார்டன் மனநிலை உள்ளிட்டவை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது. உலக மயமாக்கலால் உருமாற்றம் பெற்ற கலாசாரமும், வாழ்வியலும், சிதறுண்ட வாழ்க்கை முறை குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது. நவீன தமிழ் சிறுகதை உலகில், இந்நூல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

கல்வியில் வேண்டும் புரட்சி

கல்வியில் வேண்டும் புரட்சி, வினோபா, தமிழில் அருணாச்சலம், இயல்வாகை வெளியீடு, பக். 48, விலை 30ரூ. எழுத்தை கற்றுக் கொள்வதல்ல கல்வி. சத்தியம், அன்பு போன்ற குணங்களை போதித்து, அதை வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்க வலியுறுத்துவதே சிறந்த கல்வி. இதை வினோபா விளக்குகிறார். கட்டாயக் கல்வி, சிந்தனை மற்றும் படைப்பாற்றலை கொன்றுவிடும் என வலியுறுத்துகிறார். அதற்கு மாறாய், ஆதாரக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார். கல்வி புரட்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும், இது அற்புதமான கையேடு. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. ‘பகவத் கீதை’ என்பது கிருஷ்ணன் அர்சுனனுக்கு கூறிய அறிவுரையாக மட்டுமல்ல… சாதாரண வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நினைப்பவர்களுக்கும், உயர் வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கும் காலங்காலமாக வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதை எளிய முறையில் விளக்கிச் செல்வதாகும் என்பதை எடுத்துக்காட்டும் நூல். -இரா.மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

1084ன் அம்மா

1084ன் அம்மா, மகாஸ்வேதா தேவி, பரிசல், பக். 130, விலை 130ரூ. வங்க மொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘மாதர் ஆப் 1084’ என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு. கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கவுரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்ப தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வறட்டுக் கவுரங்களையும் வெறுத்து, கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என, இருவருக்கிடையிலான உறவையும், பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கனபரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல். […]

Read more

கம்ப நதிக்கரையினிலே

கம்ப நதிக்கரையினிலே, ஆர். குறிஞ்சி வேந்தன், வானதி பதிப்பகம், பக்.100, விலை 70ரூ. கம்பர் காவியத்தின் பல அழகுகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. கம்பனைச் சுவைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு விருந்தாக இந்நூல் திகழ்கிறது எனலாம். ‘கம்ப ராமாயணத்தை விதை நெல்லைப் போல பாதுகாத்து எதிர்காலச் சமூகத்திடம் தந்து விட வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கனவுக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு எனலாம். இந்நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக விளங்குகின்றன. ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்றும், ‘நின் பிரிவினும் சுடுமோ […]

Read more

கந்தர்வன்

கந்தர்வன், ஜன நேசன், சாகித்திய அகாதெமி, பக்.112, விலை 50ரூ. எழுத்தாளர் கந்தர்வனின் இயற்பெயர் க. நாகலிங்கம் என்பதாகும். வானம் பார்த்த வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் கந்தர்வன். 60 ஆண்டு காலமே வாழ்ந்த எழுத்தாளர் கந்தவர்வன் எழுதிய, 30 ஆண்டுகளில், 62 கதைகள், 100கவிதைகள் மற்றும் நாடகம், கட்டுரை, நூல் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். கந்தர்வனின் கடிதங்களும், சிறப்புத் தன்மை வாய்ந்தவை. சி.ராஜநாராயணன், தி.க.சி., வல்லிக்கண்ணன், செயப்பிரகாசம் முதல், இன்று சிறந்த படைப்பாளிகளாகக் கருதப்படும் வண்ணதாசன் உட்பட எண்ணற்ற […]

Read more

சாதி அடையாள சினிமா

சாதி அடையாள சினிமா, தொகுப்பாசிரியர் நீலன், பேசாமொழி வெளியீடு, விலை 220ரூ. தமிழில் வெளிவந்த, சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, நாட்டாமை, தேவர் மகன் உள்ளிட்ட, சாதி அடையாள சினிமாக்களையும், அது கட்டமைக்கும் பிம்பத்தையும், வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த நூல். இதில், சாதி அடையாள சினிமாக்களையும், சாதியத்தை வேரறுக்கும், அதன் சுயபெருமையை பகடி செய்யும் படங்களையும் ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது, சாதி அடையாள சினிமா. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

ஹிட்லரின் வதை முகாம்கள்

ஹிட்லரின் வதை முகாம்கள், மருதன், கிழக்கு, பக். 232, விலை 200ரூ. அறம், சட்டம், சுதந்திரம், உரிமை, மனித நேயங்களை உடைத்து, அதில், வதைமுகாம்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு, வலுவான பேரினம், வலுவற்ற சிற்றினத்தை நசுக்குவது என்னும் சித்தாந்தமே, பெரிதாக உள்ளது. நாஜிகள், உலக யூதர்களை, ஐரோப்பிய வதை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ததோடு அவர்களை கொன்றும் குவித்தனர். அப்படிப்பட்ட ஹிட்லரின் வதை முகாம்களை படம் பிடிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

மறைமலையம்

மறைமலையம், மறைமலையடிகள், தமிழ்மண் பதிப்பகம், விலை 14,260ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டில், மறைமலை அடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் ‘மறைமலையம்’ என்னும் பெயரில் 34 தொகுதிகளை கொண்ட புத்தகத்தை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருக்குறள் ஆராய்ச்சி, மாணிக்கவாசகரின் வரலாறும் காலமும், திருவாசக விரிவுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி இந்நூல் வந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வு நெறியாளர்களுக்கும், மறைமலை அடிகளாரின் ஆய்வு நெறி பண்பாட்டை அறிவதற்கும் இந்நூல் உதவும். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more
1 123 124 125 126 127 240