வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் […]

Read more

திராவிட இயக்கமும் கலைத்துறையும்

திராவிட இயக்கமும் கலைத்துறையும், டாக்டர் மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 74, விலை 70ரூ. நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள் வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் […]

Read more

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்

நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள், சா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 304, விலை 375ரூ. தமிழில் கலை தொடர்பான ஆய்வுகள் குறைவு. அதிலும் கோவில் தொடர்பான பண்பாட்டுக் கலை பற்றிய ஆய்வு மிக குறைவு. நூலாசிரியர் இந்த துறையில் கவனம் செலுத்தி, நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள் குறித்து, ஓர் அருமையான ஆய்வு நூலை படைத்துள்ளார். நூலுக்கு ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி அளித்த அணிந்துரையில் இதுவரை நுண்ணாய்வு செய்யப்படாத ஒரு துறை இது என கூறியிருப்பது முக்காலும் உண்மை. நாயக்கர் கால […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், மனிதத் தேனீ பதிப்பகம், விலை 50ரூ. புகழ்பெற்ற பேச்சாளரான மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆற்றிய முக்கிய சொற்பொழிவுகளின் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம். சொற்பொழிவுகளின் இடையே தமிழ்நாட்டின் சிறப்புகள், அவ்வையார், கம்பர், பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜ், சி.பா. ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற சான்றோர்களின் சாதனைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- குதிப்பு மீன் போனது எங்கே?, நிகழ்காலம் தமிழ்நாட்டில் பருவ நிலைமாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா வெளியீடு. பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் […]

Read more

டெக்னாலஜி ஆப் டேங்க்ஸ்

ராஜராஜ சோழன் உருவாக்கிய செம்பரம்பாக்கம் ஏரி,(Technology of Tanks The Traditional Water Bodies of Rural India). சி.ஆர்.சண்முகம், ஜே. கனகவல்லி, ரிப்ளக் ஷன் புக்ஸ், பக். 320, விலை 500ரூ. பாசனத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகள் எல்லாம், சமீப காலங்களில் நிர்மானிக்கப்பட்டவை அல்ல. அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி, மூன்றாம் நந்திவர்ம பல்லவனால் (கி.பி. 710-750) உருவாக்கப்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, ராஜராஜசோழனால் (கி.பி. 1216-1256) உருவாக்கப்பட்டது. தென் ஆற்காடு […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ. மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் […]

Read more

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ. அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. […]

Read more

கொடை காடு

கொடை காடு, ஏக்நாத், காவ்யா பதிப்பகம், சென்னை. திருநெல்வேலியைச் சேர்ந்த, எழுத்தாளர் ஏக்நாத்தின், கொடை காடு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். காவ்யா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. நெல்லை அருகில் உள்ள கல் ராக்கி மலைப் பகுதிக்கு, கால்நடைகளை மேய்க்க செல்வது பற்றி, இந்த நாவல் விவரிக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கையை பற்றி, தமிழில் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். சீன மொழியிலிருந்துகூட, மேய்ச்சல் வாழ்க்கை நாவல் தமிழுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ஏக்நாத்தின் கொடை காடு நாவல் இடம் பெறுகிறது. கால்நடைகள் வீட்டின் ஒரு […]

Read more

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 60ரூ. பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட சமூகமாக நமது இந்தியத் திருநாடு திகழ்கிறது. இத்தகைய பன்மைச் சமூகச் சூழலில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்? முஸ்லிம் அல்லாத சமூகத்தாருக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அழகிய முறையில் விளக்கம் அறித்துள்ளார். முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிம், அந்த […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள், எஸ்.குருபாதம், மணிமேகலை பிரசுரம், பக். 372, விலை 250ரூ. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. -ஜனகன். நன்றி: […]

Read more
1 189 190 191 192 193 240