Globalisation of World politics

Globalisation of World politics, ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். உலகமயமாக்கல் உலகிற்கு வழங்கிய கொடை என்ன? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக வெளியீடான, Globalisation of World politics An introduction to international relations என்ற நூலைப் படித்தேன். ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ் ஆகியோர் இதன் ஆசிரியர்கள். இந்நூல் என்னுள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிக்கிறான் என கம்பூனிஸ்டுகளை கேலி பேசுவதுண்டு. அகிலம் என சொல்லிகொண்டாலும், இவ்விரு ஊர்களும் […]

Read more

வாழ்விக்க வந்த காந்தி

வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ. ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 104, விலை 120ரூ. தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. புதிய தலைமுறை வார இதழில் வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என பல வகையான மனிதர்கள். ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், […]

Read more

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல், புலமை வெங்கடாசலம், தாமரை பப்ளிகேஷன்ஸ். குற்றங்களை துப்பறிவதற்கு மருத்தவர்கள் உதவியாக இருந்தாலும், உண்மையை மூடிமறைப்பது உடல் அழுகிவிடுவது போன்ற பல காரணங்களால் துப்பறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதையும் கடந்து, ரத்தக்கறை, உமிழ்நீர் கறை, சிறுநீர் கறை, சோப்பு துகள்கள், மாவு, கரித்தூள், முடி, பூவில் உள்ள மரகத பொடி, மரக்கட்டை, சுருட்டு, பீடி, சிகரெட் சாம்பல் மற்றும் சிதைந்த காயம், வீக்கங்கள், துப்பாக்கியால் ஏற்படும் காயங்கள் போன்ற தடயங்களை கொண்டு எப்படி போலீசார் துப்பு துலக்குகின்றனர் என்பதை விளக்குவதுதான் இந்த […]

Read more

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள்

வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள், குஞ்ஞாலிகள், செ.திவான், சுகைனா பதிப்பகம், பக். 584, விலை 500ரூ. மரைக்காயர் என்ற சொல்லின் பொருள் என்ன? உண்மையில், 17/5/1498லேயே, இந்தியாவில் அன்னியரை எதிர்த்து போராடும் விடுதலை போர் துவங்கிவிட்டது. ஆம் அன்றுதான், கள்ளிக்கோட்டை அருகே கப்பாடு என்ற இடத்தில் வாஸ்கோடாகாமா என்ற போர்த்துக்கீசியன், மூன்று கப்பல்களோடு இந்திய மண்ணில் கால்பதித்தார். மேலைக் கடற்கரையில் காலூன்றி விட்டால், படிப்படியாக இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியாவின் செல்வவளத்தை சுரண்டிவிடலாம் என்பதே போர்த்துக்கீசியர்களின் திட்டம். அப்போது, கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்த சாமுத்திரி […]

Read more

கழிசடை

கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம். கும்பிட வேண்டியோரை எள்ளி நகையாடுகிறோம் எழுத்தாளர் அறிவழகன் எழுதிய கழிசடை நாவலை, அண்மையில் படித்தேன். அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது. நகர்ப்புறத்தில் மலம் அள்ளும் அருந்தியர் வாழ்க்கையை, இந்நாவல் சித்தரிக்கிறது. மலம் அள்ளும் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை விவரித்துக் கொண்டே செல்லும் நாவல், மலம் அள்ளும் தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளையும் கடத்துவதே வாழ்கையின் வெற்றி என சொல்கிறது. மலம் அள்ள சென்றாலோ, சாக்கடைகளின் அடைப்புகளை எடுக்க சென்றாலோ, அவர்களை மனிதனாக நடத்தி, வேலை வாங்கும் சூழல் இல்லை. சாக்கடைகளை […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், வர்த்தமானன் வெளியீடு, பக். 900, விலை 300ரூ. மகாபாரதத்தை அருளிய பின்னரும் வியாச முனிவருக்குச் சாந்தி ஏற்படவில்லை. தம் மனக் குறையை நாரதரிடம் தெரிவித்தார். நாரதர், மகாபாரதத்தில் பகவானின் கல்யாண குணங்களைவிடத் தர்மங்களை அதிகமாக விவரித்துள்ளீர். கிருஷ்ண பரமாத்மாவின் மகிமைகளைச் சொல்லவில்லை. அவற்றை விரிவாக வருணிக்கும் நூல் ஒன்றைச் செய்தால் தங்கள் மனம் சாந்தி அடையும் என்றார். வியாசரும் மனமகிழ்வுடன் இந்தப் பாகவதத்தை உண்டாக்கித் தம் தவப் புதல்வரான சுக முனிவருக்கு அருளினார். அவர், மோட்சத்தை விரும்பிய பரீட்சித்து மன்னனுக்கு இதனை […]

Read more

போராளிகள்

போராளிகள், மு. செந்திலதிபன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 90ரூ. சமுதாய நலனுக்காக, தம்மை அர்ப்பணித்து கொள்பவர்களையே, போராளிகள் என்றழைக்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை, பெண்ணுரிமை, கல்வி உரிமை என, சமுதாயத்திற்காக, போராடுபவர்கள் வெகுசிலரே. அந்த வகையில் இந்த நூலில் ஒன்பது போராளிகளின் சமகால வரலாறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து, காந்திய வழியில் போராடி, தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூச்சி. மணிப்பூரில் உண்ணாநிலை அறப்போரில், ஏறக்குறைய 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். […]

Read more

பணம் விரும்புதே உன்னை

பணம் விரும்புதே உன்னை, டி.ஏ. விஜய், புதிய பறவை பதிப்பகம், பக். 204, விலை 555ரூ. தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. பங்கு வர்த்தம் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். அதில் புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல்போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில் பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன் சுவை கொண்ட பழத்தை […]

Read more

நீளும் கனவு

நீளும் கனவு, கவின்மலர், கயல்கவின் பதிப்பகம். அண்ணன் மனதில் மறைந்திருக்கும் வக்கிரம் நீளும் கனவு என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். எழுத்தாளர் கவின்மலர். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகள் இவை. கயல் கவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல கதைகள் இருந்தாலும் அண்ணன், இரவில் கரையும் நிழல்கள் என்ற இரு சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தவை. பெண்ணுடன் பிறக்கும், ஆண்களை அண்ணன், தம்பி என அழைக்கிறோம். அதேநேரத்தில் உடன் பிறவாத மூன்றாம் நபராக இருக்கும் ஒரு ஆணையும் அண்ணன் என அழைப்போம். […]

Read more
1 187 188 189 190 191 240