பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 264, விலை 140ரூ. விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, இந்து மித்திரன் இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பேசுவது பழங்கதை அல்ல என்பது முதல் போதி தர்மர் வரை, 31 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாய் இருக்கும் அணு இயக்கத்தை, டாக்டர் பிர்டஜாப் காப்ரா என்ற விஞ்ஞானி புகைப்படமாக எடுத்திருக்கிறார். இதையே நம் முன்னோர்கள், சிவனின் ஆனந்த தாண்டவமாக வர்ணித்திருக்கின்றனர் என விளக்கி உள்ளார். […]

Read more

இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், இரா. சிவராமன், பை கணித மன்றம், பக். 144, விலை 120ரூ. பூமி சூரியன் இடையேயான தூரத்தை கணக்கிட்ட இந்திய அறிவியல் இணையில்லா இந்திய அறிவியல் புத்தகம், இந்தியர்களின் அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன. ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை, ஆதாரங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர். இந்தியர்கள், வேதகாலம் என அழைக்கும் கி.மு. 1500 – கி.மு.500 காலகட்டத்தில், சமஸ்கிருத […]

Read more

தந்தை கோரியோ

தந்தை கோரியோ, பிரெஞ்சு மூலம் ஒனோரெ தெ. பல்சாக், தமிழில் ச. மதனகல்யாணி, சாகித்ய அகாடமி, பக். 433, விலை 220ரூ. வெறுப்பெனும் பெருஞ்சரிவில் மனித இதயம் நிற்பது அருமை நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ. பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, லெ பேர் கோரியோ எனும் புதினத்தை, தந்தை கோரியோ எனும் பெயரில், எளிய நடையில் மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் மதன கல்யாணி. மனைவியை இழந்தும், தன் […]

Read more

காலத்தின் குரல்

காலத்தின் குரல், மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 258, விலை 210ரூ. பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன், புதிய தலைமுறை வார இதழில் தாம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். கடந்த 2011-2013 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற இந்த 121 கட்டுரைகள், தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டமை, பாகிஸ்தானின்  பயங்கரவாதச் செயல்கள், பெண் சிசுக்கள் கொலை, மது விற்பனை உயர்வு, அரசுப் பள்ளிகளின் நிலைமை, தேர்தல்களும் இடைத்தேர்தல்களும், […]

Read more

அபாய வனம்

அபாய வனம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 180, விலை 320ரூ. அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட […]

Read more

சித்தரைத் தேடி

சித்தரைத் தேடி, கயிலை புலவர் சீ. சந்திரசேகரன், விஜயா பதிப்பகம், கோவை, பக். 592, விலை 400ரூ. ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர் சித்தரான கதை தெரியுமா? சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப்போல், கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும் குரங்கைப்போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே சித்தர்கள். சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன. ஆனால் இந்த நூலில் ஆசிரியர் மிக முயன்று, அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று 200பேர்களது வாழ்க்கை […]

Read more

இசைத்தமிழ்

இசைத்தமிழ், க. வெள்ளைவாரணனார், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக்குழுவினர் வெளியீடு. தமிழிசை மரபை பறைசாற்றும் இசைத்தமிழ் காலச்சென்ற க. வெள்ளைவாரணனார் எழுதிய, இசைத்தமிழ் என்ற நூலை, அண்மையில் படித்தேன். சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை நிர்வாகக் குழுவினர் இந்நூலை, 1979ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். முத்தமிழில் ஒன்றான இசைக்கு, மிக முக்கியமான ஒரு நூலாக இசைத்தமிழ் உள்ளது. இலங்கையைச் சேர்ந்த, இசை மேதை வமுலானந்தா, 1947ம் ஆண்டு எழுதிய, யாழ் நூலுக்கு, முன்னுரை எழுதியவர் வெள்ளைவாரணனார். வமுலானந்தாவின், மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை வைத்து, […]

Read more

நான் நடிகன் ஆன கதை

நான் நடிகன் ஆன கதை, சார்லி சாப்ளின், தமிழில் சுரா, வ.உ.சி. பதிப்பகம். மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் முன்னுக்கு வரமுடியும் என்பதற்கு சார்லி சாப்ளின் வாழ்க்கை ஒரு உதாரணம். படம் மூலம் அவர் பலரை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்க்கையில் மிக பெரிய சோகம் இருந்துள்ளது. ஒவ்வொரு நாளும், பசி, பட்டினியோடு வாழ்ந்த சார்லி சாப்ளின், அதை எப்படி எதிர்கொண்டு உலகம் போற்றக்கூடிய கலைமேதையாக ஆனார் என்பதை அவரே விவரிக்கும் புத்தகம் இது. […]

Read more

விடுதலை இயக்கத்தில் தமிழகம்

விடுதலை இயக்கத்தில் தமிழகம், டாக்டர் ஜி.பாலன், வானதி பதிப்பகம், பக். 624, விலை 300ரூ. விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற தமிழகத் தியாகச் செம்மல்களின் வரலாறுகளை தெளிவாகத் தொகுத்து, எழுதப்பெற்றுள்ள நூல். அண்ணல் காந்தியடிகள், தமிழகத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்வுகள், அழகாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன. தேசியக்கொடி பற்றிய கட்டுரையில், தேசியக்கொடியின் தோற்றம், அமைப்பு, அளவு, வரையறை, வண்ணங்கள், சக்கரச்சின்னம் முதலியவற்றை விளக்கி, சுதந்திரக்கொடியான மூவர்ணக்கொடியின் வரலாறு விளக்கப் பெற்றுள்ளது. தேசியக் கொடியைப் […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ. துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் […]

Read more
1 185 186 187 188 189 240