ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி

ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி, கன்னிக்கோவில் ராஜா, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்றுதான் பெரும்பான்மையான கதைகளின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்விலும் அனுபவித்திருப்போம். கன்னிக்கோவில் இராஜா எழுதியுள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி சிறுகதை தொகுப்பில் இதுபோன்ற ஒரு கதையும் இடம் பெற்றுள்ளது. அதையே தொகுப்பிற்கு தலைப்பாகவும் வைத்துள்ளார். இதில் இடம் […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

கர்ணா நீ மஹத்தானவன்

கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ. தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு […]

Read more

புலிகளின் புதல்வர்கள்

புலிகளின் புதல்வர்கள், பா. விஜய், புதிய தலைமுறை பதிப்பகம், பக். 164, விலை 275ரூ. ஒன்றாக இணைந்து ஆட்சி நடத்த தெரியாத தமிழர்கள்? கவிஞராக அறியப்பட்ட பா. விஜய், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை இலக்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை. உடல் முழுதும் நகைகளை பூட்டிக்கொண்டு திரியவில்லை. மது குடித்தனர், மாமிசம் உண்டனர் என நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். […]

Read more

சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ. மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

மோடி

மோடி, வெளிச்சங்களின் நிழலில், கதிரவன், சிற்றுளி வெளியிடு, சென்னை, விலை 25ரூ. மோடி முகமூடி அணிந்து வரும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சித்திருக்கும் இந்நூல், நாட்டில் இந்துத்துவக் கொள்கைகள் நிகழ்த்துப்போகும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 6/4/2014.   —- க்ரோஷம், ஜுடித் பெல், வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், பக். 280, விலை 160ரூ. உலகின் வளர்ந்த நாடுகள் எல்லாம் டபிள்யூ.டி.ஓ., எப்.டி.ஏ., என்.ஏ.எப்.டி.ஏ., போன்ற பல […]

Read more

ஹீலர்

ஹீலர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்டு தி டிரான்ஸ்பர்மேஷன் ஆப் இந்தியா, போர்ட்போலியோ/பெங்குயின், பக். 548, விலை 899ரூ. மருத்துவர்களுக்கு விடுமுறை உண்டா? தங்கள் மூளையை இந்திய வல்லுனர்கள் வெளிநாட்டில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதை திரை திருப்பி இந்தியாவிற்கே பயன்படச் செய்த மேதைதான் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி என இந்திராவால் போற்றப்பட்டவர். கடந்த 1984ம் ஆண்டு, தம் 50ஆவது வயதில், இந்தியாவில் நல்வாழ்வு, ஆரோக்கியத்திற்காக, அப்போலோ மருத்துவமனையை, சென்னையில் துவக்கினார். இன்று உலகெங்கும் 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் விரிந்து பரந்து […]

Read more

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம்

இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. வெள்ளைக்காரர் ஹ்யூம் யாருக்காக பாடுபட்டார்? தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். மதுரையை நாயக்கர்கள்தான் ஆள வேண்டும். மாடவீதியை மன்னார்சாமிதான் ஆள வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து வலுத்து வரும் காலம் இது. இந்தச் சூழலில் பெ.சு.மணியின் இந்திய தேசிய காங்கிரசின் தந்தை ஏ.ஓ.ஹ்யூம் என்ற புத்தகம் அவசியப்படுகிறது. மாநில எல்லைகளை கடந்து, மொழி வேற்றுமையைப் புறந்தள்ளி, இந்தியப் பெருநாட்டின் மக்களுக்காக நடத்தப்பட்ட […]

Read more
1 186 187 188 189 190 240