நடராஜ தரிசனம்

நடராஜ தரிசனம், டாக்டர் சி.எஸ். முருகேசன், பக். 400, விலை 275ரூ. ஆதியும் அந்தமும் முதல், எங்கும் சிதம்பரம் வரை, மொத்தம் 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம்தான் அவர் நடனம் என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையானவை. இறைவன் ஆடிய ஆதிக்கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை நூலாசிரியர் […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க்கலையகம், மயிலாடுதுறை, விலை 350ரூ. தமிழிசையின் தொன்மையையும், தனித்தன்மையையும் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டும் ஓர் அரிய ஆய்வு நூல். தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணப்படும் இசைக்குறிப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலாக விளங்குகிறது. இசை, பாவகை, பண்புகள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக் கலைஞர்கள், கூத்துக்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளின் கீழ் தொகுத்தும், வகுத்தும் தந்திருக்கும் செய்திகள், ஆய்வு முடிவுகள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. இலக்கண ஆய்வுகள் குறைந்து வரும் […]

Read more

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன், தகழி சிவசங்கரபிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-053-5.html சமூகத்தோடு வளர்வதே தனிமனித வளர்ச்சி கேரளத்தின் பிரபல எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமியால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, தோட்டியின் மகன் நாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இந்நாவலை வெளியிட்டுள்ளனர். மலம் அள்ளும் வேலையைச் செய்யும் தோட்டி, மலம் அள்ளுவதால் சமூகத்தில் ஏற்படும் அவமானம், கடுமையான வேலை செய்தும், குறைந்த கூலியே […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more

போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

அபிராமி சமயம் நன்றே

அபிராமி சமயம் நன்றே, ராமநாதன் பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 736, விலை 486ரூ. ஒரு பரம்பொருளுக்கு பல வடிவங்கள், பெயர்கள் ஏன்? இந்நூல் சாக்த சமய நெறியில் நின்று, தாய்த் தெய்வமாகிய அம்பிகையை, சடங்குகள், வேள்விகள் இல்லாமல், எளிய முறையில் சாமானிய மக்களும் வழிபடுவதற்கு ஏற்ற வண்ணம், இனிய தமிழில் அபிராமி அந்தாதியை, அபிராமி பட்டர் தோற்றுவித்தார் எனவும், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பந்தரும், நம்மாழ்வாரும் எவ்வாறு ஓர் உந்துதலால் அருட்பாக்களைப் பாடினரோ, அதேபோல் பட்டரும் அம்பிகையால் ஆட்கொள்ளப்பட்டு பாடினார் எனவும் ஒப்புமைப்படுத்துகிறது. […]

Read more

வாணிதாசன் கவிதைத் திரட்டு

வாணிதாசன் கவிதைத் திரட்டு, மகரந்தன், சாகித்ய அகாடமி, பக். 304, விலை 185ரூ. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? பாரதிக்கு ஒரு பாரதிதாசன். பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில் சூரியனாய் சுடர் விட்டுப் பிரகாசிப்பவர்  சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வருபவர் வாணிதாசன். விண் மீனை, வாணிதாசன் வர்ணிப்பதைப் பாருங்கள் தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று, […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

உலக அரசியல்

உலக அரசியல், சுப்பிரமணியன் சந்திரன், பாரதி புத்தகாலயம். தன்னலம், சமுதாய நலம், தேசிய நலன் ஆகியவற்றை கடந்து, ஓர் உலக அரசியலுக்கு இலக்கணம் தேடும்வகையில், தத்துவ அறிஞர்கள் சிந்தித்தனர். ஆனால், நடைமுறையில் இந்த நலன்களை பலப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியே உலக அரசியலாக மாறியுள்ளது. தேசிய நலனையும், தேசிய நலனுக்காக சமுதாய நலனையும், சமுதாய நலனுக்காக தன்னலத்தையும் துறந்துவிட முடியுமா என்ற கேள்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்மிடத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த நூலில், இந்திய விடுதலை, முதல் உலகப்போர், இரண்டாம் உலக போர், அமெரிக்க விடுதலை, இங்கிலாந்து […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more
1 184 185 186 187 188 240