விக்ரமாதித்யனின் அவன் எப்போது தாத்தாவானான்

அவன் எப்போது தாத்தாவானான், விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம், 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்கங்கள் 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-7.html கவிதையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு விக்ரமாதித்யனின் குரல் கேட்காமல் போனதில்லை. ‘அவன் எப்போது தாத்தாவானான்’-இல் கேட்பதெல்லாம் தன்னுணர்ச்சிக் குரல்கள்தான். ஆனால் அத்தனையும் தனித்துவம் மிக்கவை. வாசிப்போர் யாவரையும் வசப்படுத்திவிடக்கூடிய கவிதைக்குரல் அது. கவிஞனும் / சிந்தனைப் போலத்தான் / என்ன இவன் வார்த்தைகள் வரிகள் என / இருக்கிறான் / […]

Read more

வழக்கறிஞர் சுமதியின் கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, விகடன் பதிப்பகம், சென்னை -2,  பக்கங்கள் 128, விலை 65ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-8.html ஒருவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டால், அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கலாம்  (பக்.61) என்ற, செக்க்ஷன் 306ஐ.பி.சி., சட்டத்தை, பெட்டி தகவல் ஆகப்போட்டு, அதற்குமேல், தன் குழந்தையுடன், தானும் தூக்கில் தொங்கிய உஷாவின் சோகக் கதையையும், அதில் தண்டனை பெற்ற கணவன் ரவியின் கனவு வாழ்க்கையையும், […]

Read more

கொடைக்கானல் மர்மம்

கொடைக்கானல் மர்மம், ஆர்னிகா நாசர், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 17, பக்கங்கள் 104, விலை 55ரூ. மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவதுபோல் வந்திருக்கிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா(11), தம்பி சுரேஷ் (9), இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி, கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு […]

Read more

சுக்கிர நீதி

சுக்கிர நீதி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக்கங்கள் 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html அசுர குருவான, சுக்கிரர் இயற்றிய ஔநசம் என்ற சுருக்கத் தொகுப்பு சுக்கரநீதி. வேதம், அறநூல்களுக்கு முரணாக இல்லாமல், அரசாட்சி மற்றும் பொருளீட்டம் குறித்த தகவல்களை கூறுவது பொருணூல், தமிழில், இக்கருத்து வரவேண்டும் என்ற விருப்பத்தில், இதை பண்டிதமணி மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். வடமொழிப் புலமை உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, அவர் இந்நூலை உருவாக்கிய தகைமை, […]

Read more

நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி. ஆர். எஸ். சம்பத், சட்டக் கதிர் பதிப்பகம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, பக்கங்கள் 284, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-805-9.html உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்கவேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும், தமிழக நீதிமுறையும், நீதிமன்றங்களில் தமிழும் என்னும் பிரிவில் 12 கட்டுரைகளும், பல்வேறு தமிழறிஞர்கள், நீதிபதிகள் எழுதியவைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின்படியும், அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 7வது […]

Read more

63 நாயன்மார்கள் புராணம்

63 நாயன்மார்கள் புராணம், ச. கோபால கிருஷ்ணன், சுரா பதிப்பகம், சென்னை – 40, பக்கங்கள் 232, விலை 90ரூ. புராணம் என்னும் சொல்லுக்கு பழைய வரலாறு என்பது பொருள். சைவ அடியார்களான, 63 நாயன்மார்களின் வரலாற்றினை, இந்த நூல் தெரிவிக்கிறது. தொகையடியார்கள் ஒன்பதுபேர், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் வரலாற்றினையும் சேர்த்துத் தந்துள்ளமையால், முழுமைத்தன்மை பெற்றுள்ளது. பன்னிரு திருமுறை எவை என்னும் விளக்கம், நடுநாட்டு நாயன்மார், பாண்டிய நாட்டு நாயன்மார் என, பிரித்து தந்துள்ள வகைமை, எளிய நடை என ஆய்வு முறையில் […]

Read more

மாநகர் மதுரை – அன்றும் இன்றும்

மாநகர் மதுரை – அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 28, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-482-6.html சங்கம் வைத்து தமிழை வளர்த்த ஆலவாய் என்றழைக்கப்படும், மதுரை மாநகர் பற்றிய நூல் வரிசையில் இந்நூல் மலர்ந்துள்ளது. மதுரை மாநகர் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில், கூடலூர் திருக்கோவில், கிறிஸ்தவ ஆர்ச்பிஷப், மதுரை ஆதீனம், மதுரையில் சமணம், இஸ்லாம், கண்ணகிக்கோட்டம் என, 39 தலைப்புகளில் அரிய, பல செய்திகளை சேகரித்து அற்புதமாய் […]

Read more

பிரபஞ்சனின் மனிதர் தேவர் நரகர்

 மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், 256 பக்கங்கள், 180 ரூ, புதிய தலைமுறை, சென்னை – 32 நாற்பத்தைந்து தலைப்புகளில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புத்தான் மனிதர் தேவர் நரகர். பிறந்த ஊர், பிறப்புக்கு காரணமான அப்பா என்று தொடங்கும் இந்த நூலின் உருவாக்கத்தில் ஒரு அமைப்பு முறை இருப்பதைக் காணமுடிகிறது. தாவரங்கள் விலங்குகள் பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதனை நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்னும் கட்டுரைகள் விளக்குகிறது. ஆசிரியர்கள் பற்றிய பிம்பம், கதை எழுதக் காரணமான விஷயங்கள் என்று […]

Read more

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள், கவிமாமணி முத்துமணி, எல்.கே.எம்., பப்ளிகேஷன், பக்கங்கள் 672, விலை 290ரூ. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக்கம் 264, விலை 120 ரூ. ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்த கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ் பக்தி, கலாசாரம் என்பதை இணைத்து, இந்த நூலில் புகழ்பெற்ற மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால் ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த […]

Read more
1 235 236 237 238 239 240