மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ. மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், […]

Read more

எனக்குள் ஒரு கனவு

எனக்குள் ஒரு கனவு, ராஷ்மி பன்சால், தமிழில் ரவி பிரகாஷ், விகடன் பிரசுரம், பக்கம் 470, விலை 175 ரூ. சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டுவிட்டதால், அவனைத் தூய்மைப்படுத்த, அவன் பாட்டி அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை. அவன் வளர்ந்து பெரியவனாகியபோது மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா? என மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து ‘சுலப்’ என்ற ஓர் இயக்கத்தைத் துவங்கி நடத்திவருகிறார் பிந்தேஷ்வர் பதக். இவர் முயற்சி கழிப்பறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஒரு மையம் […]

Read more

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ. பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் […]

Read more

திருமாலை

தேவை தலைவர்கள், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 199, விலை 85 ரூ. இமாலய சவால்களை எதிர்கொள்ள விரும்பும், துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கான நவீன அர்த்த சாஸ்திரம் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ள நூலில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. புத்தகத்தின் பாதிக்கு மேல் கேள்வி – பதில் பாணியில், சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில அரசியல் கட்சிகளின் போக்கு, செயல்பாடு பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.   —   திருமாலை, தி. பாஷ்ய ராமானுசதாசன், விக்னேஷ் வெளியீடு, சென்னை – […]

Read more

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175 ரூ. விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவில், மொழிவாரி மாநில மறு சீரமைப்பு நடந்தபோது, தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லையில் தமிழர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்புகளை ஆந்திரத்துடனும், கேரளத்துடனும் இணைக்கும் அநீதி நிகழ்ந்ததையும், அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பெற்றதையும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் நாடறியும். அப்போது நிகழ்ந்த தெற்கெல்லை மீட்புப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதமாக, இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை […]

Read more

சிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு

குமரி மண்ணில் கிறிஸ்தவம், ஜி. ஐசக் அருள்தாஸ், தமிழ் ஆய்வு மையம் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில், பக்கம் 294, விலை 140 ரூ.   கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரி மண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமயப் பணி, கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப் பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ‘உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை […]

Read more

பிரதமர் புரந்தரதாசர்

நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ.   வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.   — பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், […]

Read more

உயிரே உனக்காக

உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.   புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]

Read more

இதயம் காப்பது எளிது

ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ.   வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், […]

Read more

மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்)

மு. வ. கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்), முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம் வெளியீடு, 184/88, பிராட்வே, சென்னை -108, பக்கம் 1656, விலை 1000 ரூ. அறிஞர் மு.வ. அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறைகுடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம். இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் […]

Read more
1 236 237 238 239 240