உயிரே உயிரே

உயிரே உயிரே (நூலாசிரியர்: மாலன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25 – ஏ, அன், பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சென்னை -600 032, பக்கம்: 168, விலை: ரூ.160) காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை, சினிமாவிலும் கானல் நீராய் கண்ட காதலுக்கு, இந்த நூல் உண்மைக் கண்ணீரால் விடை சொல்கிறது. வரலாற்று நாயகர்களின் வாழ்வில் நடந்த காதலை, வர்ணனையே இல்லாமல் சம்பவமாக மாலன் சுவைபட எழுதியுள்ளார். ஜின்னா அழுதது இருமுறை தான். ஒன்று இஸ்லாமியர் […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் (நூலாசிரியர் சா.கந்தசாமி, வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை 600 017.  பக்கம்: 272, விலை: ரூ. 150) To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, அரிய நூல்கள் பலவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் இது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பு கூறும் வரலாற்றுத் தகவல்கள், ஆர்மோனிய வணிகர் ஒருவர், தன் சொந்தப் பணத்தில், சைதாப்பேட்டை மர்மலாங் (இப்பொதைய மறைமலையடிகள் பாலம்) பாலத்தைக் கட்டியது, பெரியார் வெளிநாட்டுப் பயணத்தில், நிர்வாண சங்கத்தருடன் தானும், நிர்வாணமாக […]

Read more

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள்

அல்லல் போக்கும் ஆணைமுகன் தலங்கள் (நூலாசிரியர்: கே.சாய்க்குமார், வெளியீடு: 16, 28, 2 வது மெயின் ரோடு , சாய் நகர், அரும்பாக்கம், சென்னை – 600 106., பக்கம்: 160, விலை: ரூ.90.) பிறமாநிலங்களில் உள்ள, 200 விநாயகர் தலங்களின் பூரண வழிகாட்டி நூல். பிணைப்பில் வரைப்படம் – அகர வரிசையில் தல விவரம் உள்ளது. திருகோவிலின் பூஜை நேரம் வழிதடம்,தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என, நலல பயனுள்ள செய்திகள் உள்ளடக்கிய பயண நூல். நன்றி: தினமலர் (10-3-2013). — […]

Read more

உடையும் இந்தியா?

உடையும் இந்தியா? (ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்), ராஜிவ் மல்ஹோத்ரா, தமிழில் அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல்மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ்ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14,  பக்கங்கள் 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், […]

Read more

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம், ஆல் நார்மன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 75ரூ. ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-811-1.html வால்மார்ட் எப்படி உலகளாவியதோ அதேபோல வால்மார்ட்டிற்கு எதிரான யுத்தமும் உலகளாவியது. வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகங்கள் அடிப்படையில் இங்கே விவாதங்களும் அவற்றை மறுக்கும் கற்பனை நம்பிக்கைகளும் அளிக்கப்படும் சூழலில் இந்த நூல் அமெரிக்காவில் வால்மார்ட்டிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. ஆல் நார்மன் என்பவர் வால்மார்ட்டுக்கு […]

Read more

தமிழ் வளர்த்த தமிழர்கள்

தமிழ் வளர்த்த தமிழர்கள், தா. ஸ்ரீனிவாசன், மகா பதிப்பகம், 3, சாய் பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, பக்கங்கள் 144, விலை 60ரூ. தமிழ்த்தாத்தா உ.வே.சா. தொடங்கி பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி, டாக்டர் மு.வ., என பத்து சிறந்த தமிழ்த்தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப் பாராட்டப்பட வேண்டும். நல்லறிஞர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம். – ஜனகன். தமிழில் திணைக் கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், நியூ […]

Read more

சீறா வசன காவியம்

சீறா வசன காவியம், முரளி அரூபன், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, சென்னை 5, பக்கங்கள் 1328, விலை 850ரூ. கடந்த 1850இல் வாழ்ந்த காயல்பட்டினம், கண்ணகுமது மகுதூமும்மது புலவர் நபிகள் பெருமானின் வரலாற்றை வசன காவியமாக மிகவும் விரிவாக எழுதியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவில் உமறு புலவர், சீறாப்புராணம் இயற்றினார். இதைப் புலவர்களே படித்து அறிய முடியும் என்பதால், பலரும் அறியவேண்டி எளிய உரைநடை வடிவில், இந்த நூலை எழுதியுள்ளார். 125 ஆண்டுகளுக்குப் பின், அரிய பெரிய […]

Read more

பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. […]

Read more

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ. முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத […]

Read more

சு. சண்முகசுந்தரமூர்த்தியின் நான்கு கதைப் பாடல்கள்

நான்கு கதைப் பாடல்கள், சு. சண்முகசுந்தரம், சாகித்திய அகாதெமி, சென்னை 18, பக்கங்கள் 496, விலை 220ரூ. ஏட்டில் வந்த இலக்கியங்கள், பண்டிதர் இலக்கியம் என்றும், ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள், பாமரர் இலக்கியம் அல்லது நாட்டுப்புற இலக்கியம் என்றும் கூறுவர். ஏட்டில் எழுதப்படாத பாட்டுகதை, பழமொழி, விடுதலை, புராணம் போன்றவை தற்காலத்தில், அச்சில் வந்து இலக்கிய இன்பம் அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூலில், கட்டமொம்மு கதை, தேசிங்கு ராஜன் கதை, மதுரை வீரன் கதை, பழையனூர் நீலி கதை என்ற நான்கையும் உரைநடையில் சுருக்கமாகவும், […]

Read more
1 234 235 236 237 238 240