பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம், பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புத்தொளி பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 80ரூ. மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான இந்நூலாசிரியர், கல்வி, அரசியல், ஆன்மிகம், பேச்சு, எழுத்து, ஆய்வுத்திறன்… என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இந்நூலில் அரபுலகில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய முப்பெரும் மதங்களுக்கும் புராதான தொடர்புடைய நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தின் தொடக்க காலம் முதல், 13-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்துள்ளார். இந்நாட்டின் பிரசித்தி பெற்ற நகராகிய ஜெருஸலத்தில்தான், […]

Read more

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ. ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ. மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. […]

Read more

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், வெ. இறையன்பு, ஐ.எஸ்.ஏ., நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 221, விலை 140ரூ. எழுத்தாலும், பேச்சாலும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வரும் இந்நூலாசிரியர், பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர். இவரது இந்நூல் இதுவரை 6 பதிப்புகளைக் கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்து போதிய விபரங்கள் இல்லாததால், இத்தேர்வில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. […]

Read more

மகளிர் மகிமை

மகளிர் மகிமை, பி. முஹம்மது சல்தான் ஃபாஜில் தேவ்பந்தி, பி.எம். கலிலூர் ரஹ்மான் மன்பஈ, அமானத் அறக்கட்டளை, சென்னை, பக். 384, விலை 140ரூ. ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகப் பேசுவதிலும், பழகுவதிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இரு பாலருக்கும் உள்ள ஒழுக்க முறைகள் என்ன – என்பன போன்ற விஷயங்கள் எல்லா சமயங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு இவை முறையாக போதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டால், பாலியல் குற்றங்கள் என்பது நாட்டில் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. இன்றோ இக்குற்றங்கள் பல்கி பெருகி சர்வசாதாரண […]

Read more

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா […]

Read more

என் ஆசிரியப் பிரான்

என் ஆசிரியப் பிரான், கி.வா. ஜகந்நாதன், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-195-4.html தமிழ்த்தாத்தா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இல்லையேல், சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். அந்தளவுக்கு அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அலைந்து திரிந்து, அந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அச்சடித்து வெளியிட்டார். அது தவிர, தனது ஆழ்ந்த தமிழ்ப் புலமையால் அப்பாடல்களுக்கு பொருளுரையும் இயற்றி […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 150ரூ. விகடன், குமுதம், நக்கீரன், தினமணி, புதிய தலைமுறை என்று பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இந்நூலாசிரியர், கதை, கட்டுரை, பேட்டி என்று தனது படைப்புகளாலும், வசீகரமான எழுத்தாறறலாலும் வாசகர்களைக் கவர்ந்தவர். தனது 27 வருட பத்திரிகை துறையின் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்நூலில் கட்டுரை வடிவில் சுவைபட கூறியுள்ளார். ஒரு பத்திரிகையாளன் ஜொலிக்கும் வைரமாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், அதற்காக அவன் பட்டை தீட்டப்படும்போது எத்தகைய […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, டாக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன், சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனக்கவலையே. இது அதிகரிக்க அதிகரிக்க அது மன அழுத்த நோயாக உருமாறுகிறது. இந்த மன அழுத்தம் உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, தாழ்வு மனப்பான்மையே. இதை வெற்றி கொள்ள எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாகும். நற்சிந்தனை மற்றும் நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தன்னம்பிக்கையைப் பெற […]

Read more

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற […]

Read more
1 10 11 12 13 14 21