கோலங்களில் கணிதம்

கோலங்களில் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், பக்.160, விலை 100ரூ. கணிதம் கற்பது சிலருக்குக் கற்கண்டு. சிலருக்கு வேப்பங்காய். இந்நூல் வேப்பங்காயையும் கல்கண்டாய் மாற்றுகிறது. ஆம், மிக எளிய கோலங்கள் மூலம் கணித சமன்பாடுகளை விளக்குகிறது. இந்நூலிருந்து யூலர் கோலம் மூலம் இதயக்கமலம் எனும் கோலத்தையும் லுகாஸ் தொடர் மூலம் சதுரக்கோலங்களும் வரையலாம் என்று அறிகிறோம். இந்நூல் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி கணிதம் குறித்த பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம். -டாக்டர் கலியன் சம்பத்.   —- […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 380, விலை ரூ.320. எஸ். விஜயராஜ் ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சிகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொல்ல செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார். சிட்டுக் குருவியின் தாவல்போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை. புராண இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.   —-   புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் […]

Read more

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும்

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும், அரங்க. சீனிவாசன், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. வண்ணமயமான வாழக்கை. பாரதியின் வாழ்க்கையைப்போல அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையும் வண்ணமயமானது. அரங்க. சீனிவாசனால் எழுதப்பட்ட காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் என்னும் நூலின் வழியே இதை அறிய முடிகிறது. அவர்களுக்கெனத் தனி சாம்ராஜ்யம். அதை கவிராஜனாகத் தன்னை அறிவித்துக்கொள்வது போன்ற பண்புகளில் இருவருக்கும் உள்ள உற்றுமை நெருக்கத்தைத் தருகிறது. கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு இதுபோன்ற மொழியின் சௌந்தர்யம் […]

Read more

வெள்ளை வாரணம்

வெள்ளை வாரணம், தி.நெல்லையப்பன், காவ்யா, சென்னை 24, பக்.168, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-1.html சிறந்த தமிழறிஞரான க.வெள்ளை வாரணனார் இலக்கணம் சார்ந்த ஆய்வு நூல்களை மிகச் சிறப்பாக எழுதியவர். அவருடைய இலக்கணப் பணிகளை எடுத்துக்காட்டும்விதமாக உருவாகியுள்ள நூல் வெள்ளை வாரணனாரின் பல்வேறு இலக்கணம் சார்ந்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளின் அடிப்படையில் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் காலத்தை ஆராயும் கட்டுரையும், இவ்விரு இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து வெள்ளை வாரணனார் […]

Read more

மலையமான்கள்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) – தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம், வெளியீடு – காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 916, விலை 700ரூ. தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவரான தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் எழுத்தாளுமைகளை மொத்தமாகப் பதிவு செய்துள்ளது. நாட்டாரியம் என்பது ஆழ்ந்த புலமை, அகன்ற பாண்டித்யம், அரிய உரைவளம், நுண்ணிய ஆய்வு என்று பல பொருள் கொள்ளலாம். இவர் எழுதிக் குவித்த எண்ணற்ற இலக்கண, இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஒருங்கே தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். முதல் […]

Read more

தமிழக வரலாற்றுத் தடயங்கள்

தமிழக வரலாற்றுத் தடயங்கள், நடன. காசிநாதன், அருள் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 100, விலை 125ரூ. சோழர் செப்பேடுகள், நடன. காசிநாதன், சேகர் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 144,விலை 300ரூ. இந்நூல்களில் ஆசிரியர் நடன. காசிநாதன் மேனாள் தொல்லியல் துறை இயக்குனர். ஆகையால் இந்நூல்களில் காணப்படும் விவரங்கள் முழுமையான அதிகார பூர்வமானவை. முதல் நூலில் ஆசிரியர், அண்மைக் காலங்களில் கிடைத்த சில புதிய முக்கியச் சான்றுகளை, பழைய சான்றுகளுடன் தொகுத்து அளித்துள்ளார். இவற்றில் முக்கியமாகக் கருதப்படும், பெரம்பலுர் சான்றுகளின் விவரங்கள் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதானவையாக இருக்கும். […]

Read more

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி?

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33: விலை:ரூ. 42. மன அழுத்தம் காரணமாக கோபம், பொறாமை, எரிச்சல், உண்டாகின்றன். மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழ எளிதாக கடைபிடிக்கும் வழிகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ——   தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம், ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்; விலை: […]

Read more
1 2 3