வலை உணங்கு குருமணல்

வலை உணங்கு குருமணல், மு. புஷ்பராஜன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 184,விலை 140ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-197-4.html குருமணல் சுவடுகள் புலம்பெயர்ந்து போன ஈழத தமிழருக்கு நூல்கள்தான் தமது நிலத்தைக் காட்டுகின்றன. தன் கண்ணீராலும் பட்டினியாலும் எம்மை வளர்த்த அம்மாவிற்கு என்று புஷ்பராஜன் இந்த நூலை எழுத ஆரம்பிக்கும்போதே மனது வலிக்கிறது. இது வெறுமனே மு. புஷ்பராஜனுடைய அம்மாவை மட்டுமல்ல. அந்த குருநகர் என்ற யாழ்ப்பாணத்து மீனவக் கிராமத்தின் எல்லா ஏழை அம்மாக்களையும் கண்ணுக்கு முன்னால் […]

Read more

சங்கப்பலகை

சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125 முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று.   —   உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி […]

Read more

அணுசக்தி அவசியமா? ஆபத்தா?

செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு பண்பாட்டுச் சுற்றுலா, மணிமேகலைப் பிரசுரம், 7/4, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100. அழகப்பா பல்கலைக்கழகம் ‘செட்டி நாட்டுப் பாரம்பரிய சுற்றுலா வளர்ச்சியில் நகரத்தார் பண்பாட்டின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. நகரத்தாரின் வரலாறு, வாழ்க்கை முறை, செட்டிநாட்டுக் கலைகள், சடங்குகள் என்று சுவையான பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.   —   அணுசக்தி அவசியமா? ஆபத்தா?, க.சிவஞானம், 1, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான் […]

Read more

எப்படி ஜெயித்தார்கள்?

எப்படி ஜெயித்தார்கள்? ரமணன், புதிய தலைமுறை வெளியீடு, 25 ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 32, விலை 100 ரூ. தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை தம்பட்டக் கதைகளாகத் தராமல் வியூகங்களாக விரிக்கிறது நூல். தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில்முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், […]

Read more

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் (கட்டுரைகள்), எச். பீர்முஹம்மது, அடையாளம் வெளியீடுகள், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621301. விலை 170 ரூ. கிழக்குக் காற்று அரபுலக அறிவு, அரசியல், கலாசார மதிப்பீடுகளைப் பற்றிய பார்வைகள் மீதான பார்வைகள். ஓரியண்டலிசம் அல்லது கீழையியல் என்பது வரமாகவும் சாபமாகவும் உருவான ஒரு கிளவி. தமக்குள் பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் உடைய ஆசிய நிலப்பரப்பின் சிந்தனைப் போக்குகளை ஒற்றை பரிமாணமாக முத்திரைக் குத்த இந்தச் சொல், மேற்குலகின் மேட்டிமை அறிவுஜீவிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அதனூடாக கிழக்கின் பாரம்பரியங்கள் பலவற்றை […]

Read more

இனி நான் டைகர் இல்லை

இனி நான் டைகர் இல்லை, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. பக்கங்கள்: 80, விலை: 60 ரூ சாளரங்களை திறக்கும் கதையாளி வெவ்வேறு வடிவங்களில் குறுகிய பக்கங்களில் நகர்கின்றன சமயவேலின் கதைகள். — சா. தேவதாஸ் காற்றின் பாடல் என்னும் கவிதைத் தொகுதியின் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் சமயவேலின் சிறுகதைத் தொகுதி, இனி நான் டைகர் இல்லை. 16 சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல், சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களை வாசகர்களுக்கு பரிச்சயமாக்குகிறது. கட்டுரை வடிவில் ஒரு கதை என்றால் அறிவியல் புனைவாக இன்னொரு கதை. […]

Read more
1 3 4 5